பெலாரசில் உள்ள தூதரகத்தை மூடியது அமெரிக்கா

வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். நீண்ட இழுபறிக்குப் பிறகு ரஷியா, உக்ரைன் இடையே பெலாரஸ் நாட்டில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்நிலையில், பெலாரஸ் நாட்டில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா மூடி உள்ளது. மேலும், ரஷியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களில், அத்தியாவசிய பணிகள் தொடர்பான ஊழியர்கள் தவிர மற்ற ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. 
உக்ரைனில் ரஷிய படைகளின் நியாயமற்ற தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு பிரச்சினைகள் உருவாகியிருப்பதால் இந்த நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி அந்தோணி பிளிங்கன் கூறி உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.