இம்பால்:
60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது.
அதன்படி, முதல்கட்ட தேர்தல் இன்றும், இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 3-ம் தேதியும் நடைபெறும். தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதற்கிடையே, முதல் கட்டமாக இன்று இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நேற்று மணிப்பூரின் சர்சந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கேங்க் பிமுல் கிராமத்தில் குண்டு வெடிப்பு நடந்த நிலையில், தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மணிப்பூர் சட்டசபைக்கான முதற்கட்ட தேர்தலில் இன்று காலை 9.30 மணி நிலவரப்படி 8.94 சதவீத வாக்குகளும், காலை 11 மணி நிலவரப்படி 27.34 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன.
இந்நிலையில், மணிப்பூர் முதல்கட்ட தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 48.88 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
இதையும் படியுங்கள்…மெரார்ஜிதேசாய் பிறந்த நாள்- பிரதமர் மோடி அஞ்சலி