நாளை மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், இந்த மார்ச் மாதத்தில் உள்ள 31 நாட்களில் 13 நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக உள்ளது.
இதில் தமிழகத்தில் எவ்வளவு நாள் விடுமுறை. பொது விடுமுறைகள் எத்தனை நாட்கள்? இம்மாதத்தில் வங்கி ஸ்ட்ரைக்கும் உண்டு. ஆக மொத்தம் எத்தனை நாட்கள் வங்கிகள் செயல்படாது, வாருங்கள் பார்க்கலாம்.
பொதுவாக ஒரு மாதம் தொடங்குவதற்கு முன்னதாக வங்கி விடுமுறை பற்றி அறிவிக்கப்படும். இதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே தங்களது வங்கி வேலைகளை திட்டமிட்டு செய்து கொள்ளலாம்.
13 நாட்கள் விடுமுறை
ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி, மார்ச் மாதத்தில் 13 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை நாட்களாகும். இந்த விடுமுறை பட்டியலானது ரிசர்வ் வங்கி அறிக்கையின் படி வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கண்ட விடுமுறை நாட்களில் ஏதேனும் பணி எனில், அதனை முன்னரே திட்டமிட்டு செய்யலாம்.
பொது விடுமுறை நாட்கள்
மார்ச் 1 – மகாசிவராத்திரி (அகர்தலா, ஐஸ்வால், சென்னை, காங்டாக், கவுகாத்தி, இம்பால், கொல்கத்தா, டெல்லி, பனாஜி, பாட்னா, ஷில்லாங் தவிர மற்ற இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை)
மார்ச் 3 – லோசர் (காங்டாக்கில் வங்கிகளுக்கு விடுமுறை)
மார்ச் 4 – சாப்சார் குட் (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)
மார்ச் 17- ஹோலிகா தஹன் (டேராடூன், கான்பூர், லக்னோ மற்றும் ராஞ்சியில் வங்கிகள் மூடப்படும்)
மார்ச் 18 – ஹோலி/துலேட்டி/டோல் ஜாத்ரா (பெங்களூரு, பவனேஸ்வர், சென்னை, இம்பால், கொச்சி, கொல்கத்தா மற்றும் திருவனந்தபுரம் தவிர மற்ற இடங்களில் வங்கிகள் மூடப்படும்)
மார்ச் 19 – ஹோலி/யோசாங் (புவனேஸ்வர், இம்பால் மற்றும் பாட்னாவில் வங்கிகள் மூடப்படும்)
மார்ச் 22 – பீகார் நாள் (பாட்னாவில் வங்கி விடுமுறை)
வார விடுமுறை நாட்கள்
மார்ச் 6 – ஞாயிறு (வார விடுமுறை)
மார்ச் 12 – இரண்டாவது சனிக்கிழமை (வார விடுமுறை)
மார்ச் 13 – ஞாயிறு (வார விடுமுறை)
மார்ச் 20 – ஞாயிறு (வார விடுமுறை)
மார்ச் 26 – 4வது சனிக்கிழமை (வார விடுமுறை)
மார்ச் 27 – ஞாயிறு (வார விடுமுறை)
தமிழகத்தில் எத்தனை நாட்கள்
தமிழகத்தில் வார விடுமுறை தவிர மற்ற பொது விடுமுறை நாட்கள் விடுமுறை இல்லை. ஆக இந்த விடுமுறை நாட்களால் தமிழகத்திற்கு பெரும் பாதிப்பு என்பது இல்லை. எனினும் மற்ற மாநிலங்கள் செல்லும் போது இது பயனுள்ளதாக இருக்கலாம். இதற்கிடையில் கடந்த பிப்ரவரி 23 – 24ல் நடக்கவிருக்க நாடு தழுவிய வேலை நிறுத்தம், மார்ச் 28 – 29 ஒத்தி வைக்கப்பட்டது. ஆக இதுவும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக உள்ளது.
bank alert! banks to remain shut down for 13 days in March
bank alert! banks to remain shut down for 13 days in March/ மார்ச் மாதத்தில் 13 நாட்கள் விடுமுறையா? வங்கி ஸ்ட்ரைக்கும் இருக்கு.. கவனமா இருங்க!