முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடந்த முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது கள்ள் ஒட்டு போட முயன்றதாக திமுக பிரமுகரை சட்டையை கழற்றி அவமானப்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டார்.
கடந்த வெள்ளிகிழமை ஜாமீன் கோரி அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், மீண்டும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், புகார் அளித்தவர் தற்போது நல்ல நிலையில் உள்ளதாகவும் உடலில் காயங்கள் இல்லை எனவும் அப்படி உள்ள நிலையில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்தது தவறு எனவும் மருத்துவ அறிக்கையிலும் காயங்கள் இல்லை என தெரிவிக்கப்படுள்ளது.
மேலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வேறு வழக்குகள் தொடர்ந்து பதிவு செய்து வருவதாகவும் இதனை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.