அஜித்குமார், ஹூமா குரைஷி, கார்த்திகேயா ஆகியோரின் நடிப்பில் உருவாக்கிய ‘வலிமை’ படம், பிப்ரவரி 24 திரையரங்குகளில் வெளியானது. குடும்ப ரசிகர்களுக்காக செண்டிமென்ட் காட்சிகள் அஜித் ரசிகர்களுக்காக ஆக்ஷன் சீக்வென்ஸ் எனக் கலந்து கட்டி ஹெச்.வினோத் இயக்கிய இந்தப் படத்திற்கு பல்வேறு வகையிலான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. முதல் நாள் முதல் காட்சியைப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ஹூமா குரைஷி, கார்த்திகேயா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை ரோகினி திரையரங்கில் பார்த்தனர். போனி கபூர் மற்றொரு முறை வலிமை படத்தைத் தன்னுடைய மகள்கள் ஜான்வி, குஷி, அனுஷ்லா உள்ளிட்டோருடன் பார்த்துள்ளார்.
இந்த நிகழ்வில் ஜாவித் அக்தர், ஹுமா குரைஷி, நடிகர் சாஹிப் சலீம், சதிஷ் கௌஷிக், நடிகை பிரச்சி ஷா உள்ளிட்ட பாலிவுட் சினிமா பிரபலங்களும் உடன் இருந்தனர். போனி கபூர் அவரின் முதல் மனைவி மோனா கபூர் இருவருக்கும் பிறந்தவர்கள், அனுஷுலா மற்றும் பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர். போனி கபூர் தன் மகள்களுடன் திரையரங்கிற்கு சென்ற புகைப்படங்கள் வெளியானது. அனுஷுலா முன்னர் இருந்ததை விட தற்போது மெலிந்திருப்பதைக் கவனித்து கமெண்ட் செய்தனர் நெட்டிசன்கள். சிலருக்கு போனி கபூருக்கு இன்னொரு மகள் இருக்கிறார் என்பதே ஆச்சரியமாக உள்ளது. இந்த நிகழ்வில் அர்ஜுன் கபூர் கலந்து கொள்ளவில்லை.