மைசூர் அரண்மனையில் வடிவேலு
மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு நடிக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' நகைச்சுவை திரைப்படத்தை சுராஜ் இயக்குகிறார் . லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார் .
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மைசூர் அரண்மனையில் நடைபெற்று வருகிறது. பாடல் காட்சி ஒன்று உருவாகி வருவதாகவும் அதற்கான நடன பயிற்சிகளை பிரபுதேவா மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது .