"யூதர் குலத்து சிங்கம்".. சும்மாவா ஜெலன்ஸ்கியை தூக்கிப் பிடிக்குது அமெரிக்கா!

உக்ரைன்
அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ஆதரவாக அமெரிக்கா இத்தனை உறுதியாக நிற்க முக்கியக் காரணமே அவர் யூதர் குலத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான். உலகமெங்கும் உள்ள யூத இனத்தவர்களின் புதிய ஹீரோவாக உருவெடுத்துள்ளார் விலாடிமிர் ஜெலன்ஸ்கி.

வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் ஐரோப்பாவில் யூதர்கள் சிந்திய ரத்தத்தின் கறையை இன்னும் கூட பார்க்கலாம். மாறாத வலி அது.. மறக்க முடியாத அடி அது. ஹிட்லர் என்ற ஒற்றை நாகத்தின் கொடுக்குகளில் சிக்கி, துடி துடித்து சிதறி ஓடிய இனம்தான் யூத இனம். இன்றும் அந்த அதி பயங்கர ஹோலாகாஸ்ட் நினைவுகளை யூதர்கள் மறக்க முடியாமல்தான் உள்ளனர்.

எந்த ஐரோப்பாவிலிருந்து அவர்கள் விரட்டியடிக்கப்பட்டார்களோ, அதே ஐரோப்பாவில் இன்று அத்தனை யூதர்களுக்கும் ஹீரோவாக உருவெடுத்து நிற்கிறார் ஜெலன்ஸ்கி.

44 வயதே ஆகும் முன்னாள் நடிகரான ஜெலன்ஸ்கி தனது தைரியத்தாலும், தளராத நம்பிக்கையாலும், ரஷ்யாவுக்கு எதிராக தோள் தட்டி நின்று காட்டி வரும் தீரத்தாலும், அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். உலக மக்கல் மத்தியில் அவருக்கு மிகப் பெரிய வெளிச்சம் கிடைத்துள்ளது. மறுபக்கம் யூதர்கள் மத்தியில் மிகப் பெரிய ஹீரோவாக உருவெடுத்து நிற்கிறார் ஜெலன்ஸ்கி.

உயிர்ப் பிச்சை தர்றேன்.. ஓடிப் போயிருங்க.. ரஷ்ய வீரர்களுக்கு உக்ரைன் அதிபர் எச்சரிக்கை!

ரஷ்யாவின் நம்பர் 1 எதிரியாக நிற்கும் இவர்தான், உக்ரைனியர்களின் நம்பர் 1 ஹீரோவாவார். இவர் யூதர் என்பதால்தான் மேற்கத்திய நாடுகள் இவருக்குப் பின்னால் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. அமெரிக்காவும் இதே காரணத்தால்தான் உக்ரைனுக்கு மிகப் பெரிய ஆதரவைக் கொடுத்து வருகிறது.

முன்னாள் சோவியத் யூனியனைப் பொறுத்தவரை யூதர்கள் “வந்தேறிகள்” ஆவர். அப்படித்தான் அன்றைய சோவியத் யூனியன் மக்கள் இவர்களை ஒதுக்கி வைத்திருந்தனர். அப்படிப்பட்ட சோவியத் யூனியில் பிறந்து வளர்ந்தவர்கள்தான் ஜெலன்ஸ்கியின் பெற்றோர். இன்று உக்ரைன் மண்ணின் மைந்தனாக தீரத்துடன் போராடிக் கொண்டிருக்கிறார் ஜெலன்ஸ்கி.

இதே கீவ் நகரில் உள்ள பாபி யார் என்ற இடத்தில் 1941ம் ஆண்டு 33,771 யூதர்கள் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆற்றங்கரையோராம் அத்தனை பேரையும் நிற்க வைத்து சரமாரியாக சுட்டுக் கொன்றனர். 2 நாட்களில் இத்தனை ஆயிரம் பேரின் ரத்தம் அந்த ஆற்றில் ஓடி, செந்தண்ணீராக மாறிக் காட்சி அளித்தது. எந்த பூமி தனது மூதாதையரின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்ததோ, எந்த பூமி தனது முன்னோர்களை கொலை வெறியுடன் கொன்று குவித்ததோ அதே பூமிக்காக இன்று அவதார புருஷனாக நின்று கொண்டிருக்கிறார் ஜெலன்ஸ்கி.

போங்க.. போய் ரஷ்யாவுடன் சண்டை போடுங்க.. கைதிகளை திறந்து விட்ட உக்ரைன்!

உக்ரைனின் கிழக்கில் உள்ள ரியுவி ரி என்ற நகரில்தான் பிறந்தார் ஜெலன்ஸ்கி. ரஷ்ய மொழி பேசும் நகர் இது. சோவியத் யூனியனைச் சேர்ந்த யூதர்கள் நன்கு படித்தவர்களாக இருந்தனர். ஜெலன்ஸ்கியின் பெற்றோரும் அது போலத்தான் நிறையக் கற்றறிந்தவர்கள். ஜெலன்ஸ்கியின் தந்தை கணித பேராசிரியர் ஆவார். தாயார் என்ஜீனியர்.

கம்யூனிசம் வேர் பிடித்துக் கிடந்த அந்தக் காலத்தில் மத நம்பிக்கைகளுக்கும், மத வழிபாடுகளுக்கும் இடமில்லை. இதனால் யூத வழிபாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாத குடும்பத்தினராய்தான் ஜெலன்ஸ்கியின் பெற்றோர் இருந்தனர். தங்களது மொழியான ஹீப்ருவைக் கூட படிக்க முடியாத நிலையில்தான் அவர்கள் இருந்தனர். ஹீப்ரு சொல்லித் தரும் பள்ளிக் கூடங்கள் கூட அப்போது கிடையாது. எனவே ரஷ்யன்தான் பேச முடியும். உப்புக்குச் சப்பாணி போல வெறும் பெயரளவுக்குத்தான் இவரது முன்னோர்கள் யூதர்களாக இருந்தனர். அவர்களிடம் எந்தவிதமான யூத அடையாளத்தையும் பார்க்க முடியாத நிலைதான் அப்போது இருந்தது.

சோவியத் யூனியன் பிரிந்த பிறகு, நாடுகள் பலவாக அது உடைந்து சிதறியபோது பலரும் என்ன செய்வது என்று தெரியாமல் பல்வேறு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்தனர். கிட்டத்தட்ட 10.5 லட்சம் பேர் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் இடம் பெயர்ந்தனர்.

உலகில் எந்தப் போர் நடந்தாலும்.. முக்கியக் காரணமான மூலப் புள்ளி.. “அமெரிக்கா”!

ஆனால் ஜெலன்ஸ்கி குடும்பத்தினர் உக்ரைனிலேயே தங்கி விட்டனர். அவர்களைப் போல சில ஆயிரம் யூதர்களும் இங்கேயே தங்கி விட்டனர். சுதந்திர உக்ரைனில்தான் ஜெலன்ஸ்கி நடிகரானார். அதில் வெற்றியும் பெற்றார். பின்னர் அரசியல்வாதி ஆனார். அதிலும் வெற்றிதான். கடந்த 20 ஆண்டுகளில் அவரது வளர்ச்சி பிரமிக்கதக்க வகையில் அமைந்தது. உக்ரைன் யூதர்களின் பெருமையாகவும், அடையாளமாகவும் அவர் மாறினார்.

ரஷ்ய சாம்ராஜ்யத்தை எதிர்த்து ஒரு யூதர் போர் புரிகிறார் என்பதே மேற்கத்திய நாடுகளுக்கு மிகப் பெரிய சந்தோஷ செய்திதான். எனவேதான் பலரும் திரண்டு வந்து ஜெலன்ஸ்கியை தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். ஆனால் ரஷ்யர்கள் இந்த கொண்டாட்டத்தை அத்தனை சீக்கிரம் சந்தோஷமாக்கி விடுவார்களா என்பதை போகப் போகத்தான் தெரிந்து கொள்ள முடியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.