ரஜினி படத்தில் அடிவாங்கி நடித்தேன்: ஷெரின்
வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் வி.பழனிவேல் தயாரிக்கும் படம் ரஜினி. ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். விஜய் சத்யா, ஷெரீன் நடித்துள்ளனர். அம்ரீஷ் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் நடிகை ஷெரின் பேசியதாவது: படத்தில் விஷூவல், பாட்டு எல்லாமே சூப்பராக இருக்கிறது. எங்கள் படத்திற்கு கவர்ச்சியே ஹீரோ தான். அவர் படம் ஆரம்பத்திலிருந்தே சாப்பிடாமல் 8 பேக் வைக்க பயிற்சி எடுத்து கொண்டிருந்தார். அவரை பார்க்க வைத்து கொண்டு நான் பிரியாணி சாப்பிட்டு கடுப்பேற்றியிருக்கிறேன். உண்மையில் அவர் மிக மிக அழகாக இருக்கிறார். எங்க டைரக்டர் அட்டகாசமாக படமெடுத்துள்ளார். அவருடன் வேலை செய்தது அருமையான அனுபவம். இந்தப்படத்திற்கு நிறைய கஷ்டப்பட்டுள்ளோம். விழுந்து, அடி வாங்கி கடினமாக உழைத்து உருவாக்கியுள்ளோம். என்றார்.