வாஷிங்டன்,
ரஷிய ஆதரவு நாடான பெலாரஸில், தூதரக செயல்பாடுகளை அமெரிக்கா நிறுத்தியது. ரஷியாவிலிருந்து வெளியேற விரும்பும் அமெரிக்க தூதரக அதிகாரிகளும் குடும்பத்தினருடன் வெளியேறலாம் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
மாஸ்கோவில் உள்ள அமெரிக தூதரகத்தில் பணியாற்றும் ‘மிக அத்தியாவசிய பணிகளை தவிர்த்து’ பிற ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தாமாகவே வெளியேறும்படி அறிவுறுத்தி உள்ளது. பெலாரசில் உள்ள தூதரகத்தை தற்காலிகமாக மூட அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
US Dept of State suspends operations at US Embassy Minsk, Belarus and authorized the “voluntary” departure of non-emergency staff & family in Moscow, Russia pic.twitter.com/7RNxE68Kjj
— ANI (@ANI) February 28, 2022
மேலும், உக்ரைன் படையெடுப்பிற்கு கடுமையான பதிலடியாக, ரஷிய மத்திய வங்கி பரிவர்த்தனைகளை அமெரிக்கா துண்டித்துள்ளது, ரஷிய முதலீட்டு நிதியை தடை செய்துள்ளது.
மேலும் அமெரிக்க அரசு ரஷிய நிதி அமைப்புக்கு எதிராக கூடுதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரஷிய மத்திய வங்கியில் முதலீடுகளை அமெரிக்கா நிறுத்தி உள்ளது.
US Dept of State imposes additional measures against Russian financial system; prohibits any US person from conducting any transaction involving the Central Bank of the Russian Federation, National Wealth Fund of the Russian Federation, or Finance Ministry of Russian Federation pic.twitter.com/7DaM7AuDI0
— ANI (@ANI) February 28, 2022
அதன்படி, ரஷிய கூட்டமைப்பின் தேசிய வள நிதியம் அல்லது ரஷிய கூட்டமைப்பின் நிதி அமைச்சகம் மற்றும் ரஷிய கூட்டமைப்பின் மத்திய வங்கி சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகள் தடை செய்யப்பட்டுள்ளன.மேலும், மேற்கொண்ட எந்தவொரு பரிவர்த்தனையையும் எந்தவொரு அமெரிக்க நபரும் மேற்கொள்ள தடை செய்துள்ளது.