ரஷ்ய உக்ரேன் யுத்தத்தின் ஆரம்பத்தில் எரிபொருள் விலை அதிகரித்தது. இருப்பினும் தற்பொழுது ஓரளவு குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இதற்கமைவாக அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 97.22 அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது. லண்டன் ப்ரண்டி சந்தையில் இது 103.6 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை ,யுத்தத்தில் தமது நாட்டு பிரஜைகள் 352 பேர் உயிரிழந்திருப்பதாக உக்ரேன் தெரிவித்துள்ளது. இரண்டாவது உலக யுத்தத்திற்கு பின்னர் நாடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.
உக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான பேச்சுவார்த்தை பெலரூஸ் எல்லை பகுதியில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.