உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது உலக நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து வரும் நிலையில், ரஷ்யாவை ஒட்டுமொத்த உலக நாடுகளிடம் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவில் இயங்கி வரும் அல்லது சேவை அளித்து வரும் பல அமெரிக்க நிறுவனங்கள் தனது சேவையை முடக்கவும், உக்ரைனுக்கு உதவி செய்யவும் முடிவு செய்துள்ளது.
குறிப்பாக வர்த்தகம் செய்ய உதவும் பல முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து தடைகளை விதித்து வருகிறது. இது ரஷ்யாவுக்குப் புதிய தடையாக மாறியுள்ளது.
உக்ரைன் – ரஷ்யா பேச்சு வார்த்தை கைகொடுக்குமா.. 700 புள்ளிகளுக்கு மேல் சரிவில் சென்செக்ஸ்!
பேஸ்புக்
பேஸ்புக் தளத்தில் தற்போது ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனங்கள் விளம்பரம் செய்யவும், வருமானம் ஈட்டவும் தடை செய்துள்ளது. இது மட்டும் அல்லாமல் ரஷ்ய அரசு செய்தி தளம் பதிவிடும் அனைத்து பதிவுகளும் எச்சரிக்கை பதிவுகள் உடன் தான் வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படும் எனப் பேஸ்புக்-ன் தலைமை பாதுகாப்புக் கொள்கை அதிகாரி நதானியேல் க்ளீச்சர் தெரிவித்துள்ளார். இதேபோல் உக்ரைன் நாட்டு வாடிக்கையாளர்கள் தங்களது தகவல்களை பாதுகாக்க புதிய ப்ரோபைல் லாக் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள்
ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் கூறுகையில், “உக்ரைனின் நிலைமை குறித்து நான் கவலையடைகிறேன். அங்குள்ள எங்கள் குழுக்களுக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம் என டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.
ஆனால் ஆப்பிள் வர்த்தக ரீதியாக எவ்விதமான தடையையும் ரஷ்யா மீது விதிக்கவில்லை.
கூகுள்
சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் கூகுள் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில் ரஷ்ய அரசின் செய்தி நிறுவனம் கூகுள் தளத்தின் மூலம் பணம் ஈட்டும் வழிகள் தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து உரிய முடிவுகளை எடுக்க உள்ளோம் எனத் தெரிவித்துள்ளது.
ஸ்டார்லிங்க்
ரஷ்யா உக்ரைன்-ஐ கைப்பற்றி வரும் நிலையில் இண்டர்நெட் சேவைகள் முடக்கப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் பல அரசு இணையத் தளங்கள் முடக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் துணை அதிபர் மைக்கைலோ ஃபெடோரோவ் டிவிட்டரில் எலான் மஸ்க்-ன் உதவியைக் கேட்டார். சில மணிநேரத்தில் உக்ரைன் நாட்டுக்கு ஸ்டார்லிங்க் மூலம் சேவை அளிக்கப்பட்டு உதவி செய்துள்ளது ஸ்பேஸ் எக்ஸ் ஸ்டார்லிங்க்.
யூடியூப்
கூகுள் நிறுவனத்தின் கிளை நிறுவனமான யூடியூப் ரஷ்ய அரசின் செய்தி நிறுவனத்தின் அனைத்து சேனல்களிலும் வருமானம் ஈட்டும் வழியை முடக்கியுள்ளது. இதில் RT மற்றும் பிற ரஷ்ய அரசு சேனல்களும் அடக்கம் என யூடியூப் தெரிவித்துள்ளது.
டிவிட்டர்
உக்ரைன் நாட்டை ரஷ்யா கைப்பற்றி வரும் நிலையில், டிவிட்டர் தனிநபர் தகவல்களை எப்படிப் பாதுகாப்பது, கணக்குகளுக்கு எப்படிச் சிறப்பான பாஸ்வோர்டு அளிப்பது, சைபர் தாக்குதலில் இருந்து எப்படிக் காத்துக்கொள்வது குறித்து டிப்ஸ்களைத் தனது டிவிட்டர் சேஃப்டி கணக்கில் பதிவிட்டுள்ளது.
Russia-Ukraine War: How US Major tech cos Apple, Google, Twitter, Starlink reacted
Russia-Ukraine War: How US Major tech cos Apple, Google, Twitter, Starlink reacted ரஷ்யாவில் இனி எல்லாம் தடை.. ஆப்பிள், கூகுள், டிவிட்டர், ஸ்டார்லிங்க் எடுத்த அதிரடி முடிவுகள்..!