உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்த அதே தடைகளை சுவிஸ் விதிக்கும் என அந்நாட்டு ஜனாதிபதி Ignazio Cassis அறிவித்துள்ளார்.
இதுதொடர்பில் சவிஸ் அராசங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் ரஷ்யாவின் தொடர்ச்சியான இராணுவத் தலையீட்டைக் கருத்தில் கொண்டு, பிப்ரவரி 23 மற்றும் 25 ஆம் திகதிகளில் ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடைகளின் தொகுப்புகளை ஏற்றுக்கொள்ள பெடரல் கவுன்சில் பிப்ரவரி 28 அன்று முடிவு எடுத்தது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரதமர் Mikhail Mishustin மற்றும் வெளியுறவு அமைச்சர் Sergei Lavrov ஆகியோருக்கு எதிராக சுவிட்சர்லாந்து நிதித் தடைகளை ஏற்றுக்கொண்டது, இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
உக்ரைன் மற்றும் அதன் மக்களுடன் சுவிட்சர்லாந்து அதன் ஒற்றுமையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
போலந்துக்கு தப்பி ஓடிய உக்ரேனிய மக்களுக்கு சுவிஸ் நிவாரணப் பொருட்களை வழங்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா விஷயத்தில் சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றிய வழியைப் பின்பற்றுவதற்கு மிகவும் சாத்தியம் இருக்கிறது என்று ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் ஜனாதிபதி Ignazio Cassis கூறியிருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.