ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமான நிலையானது, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தங்களது முதலீடுகளை குறைத்து, இந்திய ஐடி நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து வெளியான செய்தியறிக்கையில், உக்ரைன் ரஷ்யா மோதல் காரணமாக கிழக்கு ஐரோப்பாவில் தங்கள் முதலீடுகளை குறைக்கலாம். அதற்கு பதிலாக இந்தியாவில் முதலீடுகளை செய்யலாம்.
இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் பயனடையலாம். உக்ரைனில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், அது வணிகத்தினையும் பாதிக்கலாம்.
உக்ரைன் – ரஷ்யா பேச்சு வார்த்தை கைகொடுக்குமா.. 700 புள்ளிகளுக்கு மேல் சரிவில் சென்செக்ஸ்!
பாதிக்கலாம்
எனினும் குறுகிய காலத்தில் இது வணிகத்தில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக ஒப்பந்தங்களில் சரிவினைக் காணலாம். இது மீடியம் டெர்மில் மந்த நிலையை ஏற்படுத்தலாம்.
ஐடி சேவை நிறுவனங்களுக்கு அமெரிக்காவுக்கு பிறகு, ஐரோப்பிய சந்தைகள், இங்கிலாந்து உள்ளிட்ட சந்தைகள் மிகப்பெரிய வளர்ந்து வரும் சந்தைகளாக உள்ளன.
திறனுக்கான பற்றாக்குறை
ஐடி துறைகளில் வளர்ச்சி கண்டு வரும் தேவைக்கு மத்தியில் ஐடி துறையினருக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது திறமைகளுக்கான பற்றாக்குறையாகும். அதுவும் சர்வதேச அளவில் ஐடி தேவையானது விரிவடைந்து வரும் நிலையில் வருகின்றது.
கிழக்கு ஐரோப்பாவில் விரிவாக்கம்
கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய ஐடி நிறுவனங்கள் ஐரோப்பாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய, தங்களது இருப்பினை சீராக விரிவாக்கம் செய்து வருகின்றன. அங்கு ஐடி துறைக்கு ஏதுவாக நிறுவனங்களுக்கு ஏற்ற சம்பள விகிதங்களில் திறமை கிடைப்பது இத்துறைக்கு ஒரு சாதகமான விஷயமாகவும் பார்க்கப்படுகின்றது. எனினும் இது போன்ற சாதகமான விஷயங்கள் இருந்தாலும் உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றத்தில் இதில் பெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது.
சாதகமான காரணிகள்
எனினும் ஐடி நிறுவனங்கள் தங்களது வணிகத்தினை மேம்படுத்த பல காரணிகளும் சாதகமாக உள்ளன. ஒன்று கொரோனா காரணமாக ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருவதால், அது அதிக நெகிழ்வுத் தன்மையை அளிக்கிறது. இதன் மூலம் ஊழியர்கள் எங்கே இருக்கின்றனர் என்பது தற்போது வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை.
தொடர் விரிவாக்கம்
அடுத்ததாக பன்முகத் திறமை உடைய ஊழியர்கள் மூலம் வாடிக்கையாளர்களை அணுகுவது, அதுவும் அருகில் இருந்து அணுகுவது, வாடிக்கையாளர்கள் மத்தியில் இன்னும் சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நிறுவனங்கள் போலந்து, ஹங்கேரி, ருமேனியா, லிதுவேனியா, பல்கேரியா, குரோஷியா போன்ற பல பகுதிகளிலும், இந்திய ஐடி நிறுவனங்கள் விரிவாக்கம் செய்து வருகின்றன. கடந்த ஜனவரி 2022ல் ஹெச்.சி.எல் டெக் 42.5 மில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனத்தினை கையகப்படுத்தியது.
விரிவாக்கம் மெதுவாகலாம்
இப்படி விரிவாக்கம் அடைந்து வரும் நிலையில் உக்ரைன் ரஷ்யா பதற்றத்தின் மத்தியில், இந்திய ஐடி நிறுவனங்களுக்கான தேவை அதிகரிக்கலாம். மீடியம் டெர்மில் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் இந்தியாவினை நோக்கி படையெடுக்கலாம். அதேசமயம் ஐரோப்பிய நாடுகளில் விரிவாக்கம் மெதுவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ukraine – Russia crisis may push to move work to India
Ukraine – Russia crisis may push to move work to India/ரஷ்யா – உக்ரைன் மோதல்.. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை கொடுக்கலாம்..!