Asus இந்தியா நிறுவனம் சமீபத்தில் தனது ரோஜ் ஸ்மார்ட்போன் சீரிஸை அறிமுகம் செய்தது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவில் இன்று தனது காம்பேக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வடிவமைப்பில் நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. ஒரு கையில் வைத்து பயன்படுத்தும் வகையில் இதன் வடிவமைப்பு சிறப்பாக உள்ளது.
ஆசஸ் 8 இசட்
ஸ்மார்ட்போனில் பிளாக்ஷிப் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட், 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், பாஸ்ட் போக்கஸ் கொண்ட சோனி கேமராக்கள் ஆகிய சிறப்பம்சங்கள் அடங்கி உள்ளது.
ஆசஸ் 8 இசட் அம்சங்கள் (asus 8z features)
Asus 8z ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன் அட்ரினோ 660 கிராபிக்ஸ் எஞ்சின் ஆதரவாக உள்ளது. இதில் 5.9″ அங்குல முழு அளவு எச்டி+ HDR10+ சான்றிதழ் பெற்ற அமோலெட் டிஸ்ப்ளே பயன்படுத்தப்பட்டுள்ளது.
iPhone-ஐ மிஞ்சும் கேமரா… Oppo Find X5 Pro 5G போனில் எல்லாமே ஸ்பெஷல் தான்!
இந்த டிஸ்ப்ளே 1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது. 240Hz டச் ரெஸ்பான்ஸ் ரேட்டும் இதில் உள்ளது. முன்பக்கம் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பும், பின்பக்கம் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் கொண்டு ஆசஸ் போன் இயக்கப்படுகிறது.
ஆசஸ் 8 இசட் கேமரா (asus 8z camera)
இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க கேமராவை பொருத்தவரை, இரட்டை லென்ஸ் கொண்ட அமைப்புடன் உள்ளது. இதில் 64 மெகாபிக்சல் f1.8 Sony IMX686 OIS கேமராவும், 12 மெகாபிக்சல் Sony IMX363 அல்ட்ரா வைட் சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த கேமராக்கள் உதவியுடன் 8k தரத்திலான படங்களை எடுக்க முடியும். மேலும் 4K 60FPS Slow Motion வீடியோவும் இந்த கேமராவில் சாத்தியமாகும். செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக முன்பக்கம் 12 மெகாபிக்சல் கேமரா, Sony IMX663 சென்சார், டுயல் பிக்சல் பாஸ்ட் ஆட்டோ போக்கஸ் ஆகிய அம்சங்களுடன் வருகிறது.
ஆசஸ் 8 இசட் பேட்டரி (asus 8z battery backup)
இந்த ஸ்மார்ட்போனில் அதிக டென்சிட்டி கொண்ட 4000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை ஊக்குவிக்க 30W ஹைப்பர்சார்ஜ் அடாப்டர் வழங்கப்பட்டுள்ளது. டைப்-சி டூ டைப்-சி கேபிள் இதனுடன் வழங்கப்படுகிறது. குவால்காம் பாஸ்ட் சார்ஜ் ஆதரவும் இதற்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது.
ஒன்பிளஸ் Vs ரியல்மி லேட்டஸ்ட் 5ஜி போன் ஒப்பீடு – இதில் எந்த மொபைல் சிறந்தது?
இரட்டை ஸ்டீரியொ ஸ்பீக்கர்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. ஒலி திறனை மேம்படுத்த DIRAC ஆடியோ டியூனிங் செய்யப்பட்டுள்ளது. குவால்காம் aptX, LDAC போன்ற மேம்பட்ட ஒலி ஆதரவையும் ஆசஸ் 8 இசட் ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
மேலும், அக்செலெரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, திசைகாட்டி, ப்ராக்ஸிமிட்டி, கைரோஸ்கோப், NFC ஆகிய சென்சார்கள் இந்த ஸ்மார்ட்போனில் கூடுதல் அம்சமாகப் பார்க்கப்படுகிறது. வைஃபை (5GHz), ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ், ஓடிஜி, எப்.எம், 3.5mm ஜாக் ஆகிய இணைப்பு ஆதரவுகளையும் இந்த போன் கொண்டுள்ளது.
ஆசஸ் 8 இசட் விலை (asus 8z price in india)
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டுக்காக IP68 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 5ஜி ஆதரவு கொண்ட இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி LPDDR5 ரேம், 128ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் முழுவதுமாக மெட்டல் பிரேம் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
மோட்டோவின் பவர்ஃபுல் Moto Edge 30 Pro போன் விலை இவ்வளவு தானா!
Horizon Silver, Obsidian black ஆகிய இரு வண்ணத் தேர்வுகளில் வெளியாகி இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை இந்திய சந்தையில் ரூ.42,999ஆக பட்டியலிடப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்திலிருந்து, இந்த ஸ்மார்ட்போனை கூடுதல் தள்ளுபடி விலையில் பெற முடியும். இதன் விற்பனை மார்ச் 7ஆம் தேதி பகல் 12 மணிக்கு தொடங்குகிறது.
ஆசஸ் 8 இசட் விவரக்குறிப்புகள் (asus 8z specs)