‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து
சன் பிக்சர்ஸ்
தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’
பீஸ்ட்
’ படத்தில் நடித்து முடித்துள்ளார்
விஜய்
. கடந்த காதலர் தினத்தன்று வெளியான இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த பேச்சுக்கள் தான் இணையம் முழுவதும் நிரம்பி வழிகின்றன.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார்
நெல்சன் திலீப்குமார்
. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக
பூஜா ஹெக்டே
நடித்துள்ளார். அண்மையில் இந்தப்படத்தில் விஜய் சம்பந்தமான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர்.
‘பீஸ்ட்’ படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் செல்வராகவன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘சாணிக் காயிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் நடித்து முடித்துள்ள செல்வராகவன் அடுத்ததாக ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளார்.
நிறுத்துங்க… நான் சொல்றேன்: ஆர்டர் போடும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!
இந்நிலையில் ‘பீஸ்ட்’ படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த புகைப்படங்களை யாரும் பகிர வேண்டாம் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற டப்பிங்கில் இருந்துதான் இந்த புகைப்படங்கள் லீக்காகி உள்ளது என கூறப்படுகிறது. மேலும் இந்த போட்டோக்களில் விஜய் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியான ‘பீஸ்ட்’ படத்தி பர்ஸ்ட் சிங்கிளான “ஹலமித்தி ஹபிபோ” பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து வருகிறது. தளபதி விஜய்யின் துள்ளலான நடனமும் அனிருத்தின் அசத்தலான இசையும் இணைந்து வெளியாகியுள்ள இந்தப் பாடல் இதுவரை யூட்யூப்பில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. ‘பீஸ்ட்’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது விஜய்க்கு கிடைத்த வெற்றி அல்ல !