தனுஷும்,
ஐஸ்வர்யா
ரஜினிகாந்தும் தாங்கள் பிரிவதாக ஜனவரி மாதம் 17ம் தேதி இரவு சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். அவர்களை சேர்த்து வைக்க இரு வீட்டாரும், நண்பர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகன்களுக்காக மீண்டும் சேரப் போகிறார்களாம்.
தன் தலைவர் ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறார்
தனுஷ்
. தலைவர் 170 படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறார் ரஜினி.
புது காதல்: ஆசி கேட்கும் ஐஸ்வர்யா ரஜினி
முன்னதாக தலைவர் 170 படத்தை தனுஷ் இயக்குவார் என்று கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் ரஜினியின் கடைசி படத்தை தனுஷ் இயக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
இயக்குநர் அவதாரம் எடுத்ததில் இருந்தே ரஜினியை வைத்து படம் பண்ண காத்திருக்கிறார் தனுஷ். மேலும் ரஜினி படத்தில் குறைந்தது ஒரேயொரு காட்சியிலாவது அவருடன் சேர்ந்து நடித்துவிட வேண்டும் என்பது தனுஷின் நீண்டகால ஆசையாகும். அதுவும் இதுவரை நிறைவேறியபாடில்லை.