TNPSC Jobs: தமிழ்நாடு அரசு புதிய வேலைவாய்ப்பு; தகுதியுள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

TNPSC invites application for Assistant Director of Town and Country planning: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நகர திட்டமிடல் உதவி இயக்குனர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு நகர மற்றும் மாநில திட்டமிடல் சேவை பிரிவில் நகர திட்டமிடல் உதவி இயக்குனர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க கடைசி தேதி 26.03.2022

நகர திட்டமிடல் உதவி இயக்குனர் (Assistant Director of Town and Country Planning)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 29

கல்வித் தகுதி : இளங்கலை சிவில் (Civil Engineering) படிப்பில் பொறியியல் படித்திருக்க வேண்டும். அல்லது இளங்கலை நெடுஞ்சாலை பொறியியல் (Highway) படிப்பு முடித்திருக்க வேண்டும் மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம், அல்லது நகர திட்டமிடல் (Town Planning) பிரிவில் முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.07.2022 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆனால்  SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு வயது வரம்பு இல்லை.

சம்பளம் : ரூ. 56,100 – 2,05,700

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதையும் படியுங்கள்: TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு… கடைசி தேதி நீட்டிப்பு; உடனே இந்த வேலைய முடிங்க!

எழுத்துத் தேர்வில் இரண்டு தாள்கள் உண்டு. முதல் தாளில் சம்பந்தப்பட்ட பிரிவில் இருந்து வினாக்கள் கேட்கப்படும். இரண்டாம் தாள் இரு பிரிவுகளாக கேள்விகள் கேட்கப்படும். முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இரண்டாம் பிரிவில் பொது அறிவுப் பகுதியிலிருந்து வினாக்கள் கேட்கப்படும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 28.05.2022

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.tnpsc.gov.in அல்லது  http://www.tnpscexams.in  என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.03.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/english/2022_04_AD_Town%20and%20Country%20Planning_Eng.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.