ரஷ்யா – உக்ரைன் போரை அமெரிக்கா தடுக்கத் தவறியதாக டிரம்ப் குற்றச்சாட்டு <!– ரஷ்யா – உக்ரைன் போரை அமெரிக்கா தடுக்கத் தவறியதாக டிரம்ப் … –>

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை தடுக்கத் தவறியது அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் கையாளாகதத் தனத்தை காட்டுவதாக முன்னாள் அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். பொதுகூட்டம் ஒன்றில், ரஷ்ய அதிபர் புடினின் போர் தந்திரங்களை டிரம்ப் வெகுவாகப் பாராட்டினார். பல்வேறு உலக நாடுகள் புடினுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், டிரம்ப் இவ்வாறு பேசியது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மீண்டும் உறுதி செய்த டிரம்ப், புடின் புத்திசாலியாக இருப்பதில் பிரச்சனை இல்லை என்றும், அமெரிக்க … Read more

உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு <!– உக்ரைன் விவகாரத்தில் மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி ஆதரவு –>

உக்ரைன் -ரஷ்யா விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நிலைப்பாட்டுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு மமதா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், இது போன்ற சர்வதேச நெருக்கடி சமயங்களில் உள்நாட்டு கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு தேசமாக ஒன்றிணைந்து நிற்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியா சர்வதேச அமைதியை விரும்புவதாகவும், எல்லை தாண்டிய படையெடுப்பை நிராகரித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள மமதா, தற்போதைய … Read more

ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்த அதே தடைகளை சுவிஸ் விதிக்கும்! ஜனாதிபதி அறிவிப்பு

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் விதித்த அதே தடைகளை சுவிஸ் விதிக்கும் என அந்நாட்டு ஜனாதிபதி Ignazio Cassis அறிவித்துள்ளார். இதுதொடர்பில் சவிஸ் அராசங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் ரஷ்யாவின் தொடர்ச்சியான இராணுவத் தலையீட்டைக் கருத்தில் கொண்டு, பிப்ரவரி 23 மற்றும் 25 ஆம் திகதிகளில் ஐரோப்பிய ஒன்றியத்தால் விதிக்கப்பட்ட தடைகளின் தொகுப்புகளை ஏற்றுக்கொள்ள பெடரல் கவுன்சில் பிப்ரவரி 28 அன்று முடிவு எடுத்தது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், … Read more

உக்ரைனுக்கு மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு

புதுடெல்லி: உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்துப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. உக்ரைன் – ரஷ்யா போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஒருபுறம், போர் நிறுத்தம் தொடர்பாக இரு நாட்டு பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த போதிலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யா நிறுத்தவில்லை. உக்ரைன் விவகாரத்தை பொறுத்தவரை, இந்தியா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதன் காரணமாக, போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் உக்ரைனுக்கு இதுவரை எந்த உதவியையும் இந்தியா செய்யவில்லை. இந்த … Read more

ஈஷா மஹாசிவராத்திரி அனைத்து கலாச்சார தடைகளையும் கடந்தது- குடியரசு துணைத் தலைவர் புகழாரம்

கோவை: ஈஷா மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் சர்மா ஒலி ஆகியோர் சத்குருவுக்கு வாழ்த்து கூறியுள்ளனர். குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அனுப்பியுள்ள வாழ்த்து வீடியோவில், “ஈஷாவில் நடக்கும் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டம், உலகம் முழுவதும் இருந்து வரும் சிவ பக்தர்களுக்கு அனைத்து விதமான கலாச்சார தடைகளையும் தாண்டி, தெய்வீக மற்றும் தனித்துவமான சூழ்நிலையை வழங்குகிறது. இந்த நன்னாளில், சிவ பெருமான் நம் … Read more

உக்ரைனுக்கு முதற்கட்ட நிவாரணப் பொருட்கள் நாளை அனுப்பப்படும்- பிரதமர் மோடி

புதுடெல்லி: போர் நடைபெற்று வரும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. உக்ரைனில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், அண்டை நாடுகள் வழியாக இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.  எனவே, உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளான ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் விரைந்தவண்ணம் உள்ளனர். அதேசமயம், பல்வேறு மாணவர்கள், சண்டை நடக்கும் பகுதிகளில் இருந்து வெளியேற முடியாமல் … Read more

ஆபத்து… ரஷியாவில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்- அமெரிக்கா அறிவுறுத்தல்

வாஷிங்டன்: உக்ரைன் மீது ரஷிய படைகள் 5வது நாளாக தாக்குதல் நடத்துகிறது. ரஷிய படைகளை எதிர்த்து உக்ரைன் ராணுவமும் கடுமையாக சண்டையிட்டு வருகிறது. ரஷியாவின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்ததுடன், உக்ரைனுக்கு உதவி செய்கின்றன. ரஷியாவுக்கு கடுமையான பொருளாதார தடைகளும் விதித்துள்ளன. இதற்கு பதிலடியாக ரஷியாவும் தடைகளை விதித்துவருகிறது. இந்த பதற்றமான சூழ்நிலையில், ரஷியாவில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறும்படி அமெரிக்க அரசு பரிந்துரை செய்துள்ளது. ஏற்கனவே ரஷியாவுக்கு அமெரிக்கர்கள் … Read more

மிக சிறந்த நூலை அண்ணன் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ளார்; புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி பேச்சு

சென்னை: எனது அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள், மிக சிறந்ததொரு நூலை அவர் எழுதியுள்ளார் என புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி பேசியுள்ளார். தமிழகத்திற்கு எப்போது வந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் நான் பேசியதை தமிழகம் கொண்டாடியது.

உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை செய்ய தயார்.! ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை செய்ய இந்தியா தயாராக உள்ளது. மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்படும். உக்ரைனில்  போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உக்ரைன்-ரஷியா இடையே சமாதான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ அமைப்பு நாடுகள் ராணுவ உதவிகளை வழங்கி உள்ளன. இதற்கிடையே, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, உக்ரைனுக்கு  மனிதாபிமான … Read more

”மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும்”-சுயசரிதை நூல்வெளியீட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். மாநிலங்களின் உரிமைகள் பறிபோவதால், அம்மாநில மக்களின் அரசியல் உரிமைகளும் பறிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். உங்களின் ஒருவன் மு.க. ஸ்டாலின் என்ற சுயசரிதை நூல் வெளயீட்டு விழாவில் இந்தக் கருத்தை அவர் முன்வைத்தார். மு.க. ஸ்டாலினின் முழு பேச்சை கீழே உள்ள வீடியோவில் காணலாம். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM