'என் மகன் உங்க வெறித்தனமான ஃபேன்னு விஜய் சார் சொன்னாரு' – யுவன்சங்கர் ராஜா

‘என் மகன் உங்க வெறித்தனமான ஃபேன்னு விஜய் சார் சொன்னாரு’ என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற தன்னுடைய 25 வருட இசைப்பயணம் குறித்த நிகழ்ச்சியில் யுவன் பேசுகையில், ”25 வருடம் எப்படி வேகமாக சென்றது எனக்கு தெரியவில்லை. நா.முத்துகுமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவருடன் எராளமான பாடல்கள் வேலை செய்துள்ளோம். நாங்கள் பணியாற்றிய பெரும்பாலான பாடல்கள் வெற்றியடைந்துள்ளன. நான் பயணங்களின் போது அப்பா பாடல்களைத்தான் விரும்பிக் … Read more

ரஜினி படத்தில் அடிவாங்கி நடித்தேன்: ஷெரின்

வைத்தியநாதன் பிலிம் கார்டன் சார்பில் வி.பழனிவேல் தயாரிக்கும் படம் ரஜினி. ஏ.வெங்கடேஷ் இயக்கியுள்ளார். விஜய் சத்யா, ஷெரீன் நடித்துள்ளனர். அம்ரீஷ் இசை அமைத்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இந்த விழாவில் நடிகை ஷெரின் பேசியதாவது: படத்தில் விஷூவல், பாட்டு எல்லாமே சூப்பராக இருக்கிறது. எங்கள் படத்திற்கு கவர்ச்சியே ஹீரோ தான். அவர் படம் ஆரம்பத்திலிருந்தே சாப்பிடாமல் 8 பேக் வைக்க பயிற்சி எடுத்து கொண்டிருந்தார். அவரை பார்க்க வைத்து கொண்டு நான் பிரியாணி சாப்பிட்டு … Read more

ரஷ்யா – உக்ரைன் மோதல்.. இந்திய ஐடி நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை கொடுக்கலாம்..!

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமான நிலையானது, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் தங்களது முதலீடுகளை குறைத்து, இந்திய ஐடி நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வெளியான செய்தியறிக்கையில், உக்ரைன் ரஷ்யா மோதல் காரணமாக கிழக்கு ஐரோப்பாவில் தங்கள் முதலீடுகளை குறைக்கலாம். அதற்கு பதிலாக இந்தியாவில் முதலீடுகளை செய்யலாம். இதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் பயனடையலாம். உக்ரைனில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், அது வணிகத்தினையும் பாதிக்கலாம். உக்ரைன் – ரஷ்யா … Read more

 'டிரில்குட்றி அக்ராஸ்' வீதி பொது மக்களிடம் கையளிப்பு

அக்கரபத்தனை பசுமலை நாகசேன வீதியினை இணைக்கும் ‘டிரில்குட்றி அக்ராஸ்’ வீதியை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வு தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் நேற்று (27) இடம்பெற்றது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் தொலைநோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வீதி சுமார் 295 இலட்சம் ரூபா செலவில் காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.

MK Stalin Book Release Live: எப்பொழுதும் உங்களில் ஒருவனாகவே இருப்பேன் – மு.க.ஸ்டாலின் ஏற்புரை

Go to Live Updates MK Stalin Book Release Live: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் இன்று நடைபெறுகிறது. ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்’ நுலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டு சிறப்புரையாற்றுகிறார். திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெறுகிற இந்த நூல் வெளியீட்டு விழாவில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு முன்னிலை வகிக்கிறார். நூல் வெளியிட்டு விழாவில், கேரள முதலமைச்சர் … Read more

#தமிழகம் ||  சாலை விபத்தில் 14,912 பேர் பலி.! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.! கடந்த 5 வருடத்தில் இல்லாத அளவுக்கு அதிகரிப்பு.!

தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்துகளில் 14,912 பேர் உயிரிழந்துள்ளனர். இருசக்கர வாகன விபத்தில் இறப்பு 107% அதிகரித்துள்ளதாக தமிழக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் புள்ளிவிவரபடி, 2021-ல் தமிழகத்தில் நடந்த 55713 வாகன விபத்துகள் நடந்துள்ளன. இதில் 14,912 தங்களின் உயிரை பலிகொடுத்துள்ளார். இதில்,  இருசக்கர வாகன விபத்துகளில் மட்டும் 6,223 பேர் பலியாகியுள்ளனர்.லாரிகளால் ஏற்பட்ட விபத்துகளில் 2,467 பேர் பலியாகியுள்ளனர்.கார்கள் விபத்துகளால் 2,467 பேர் பலியாகியுள்ளனர்.வேன் மற்றம் சிறிய … Read more

“பொய் பேசுவதில் திமுக-வினருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்" – நத்தம் விசுவநாதன் காட்டம் 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எரியோடு பேருந்து நிறுத்தம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதை கண்டித்தும், தி.மு.க அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் அ.தி.மு.க சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், “பொய் பேசுவதில் தி.மு.க-வினருக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம். எந்தக் காலத்திலும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுக்கும் ஆட்சி தான் இந்த தி.மு.க ஆட்சி. அ.தி.மு.க-வில் உள்ள முக்கியத் தலைவர்கள் முதல் முன்னாள் அமைச்சர்கள் மட்டுமின்றி அடிமட்டத் … Read more

மகள் திருமணத்துக்கு 33 ஆண்டுகளாக சேர்த்த 92 சவரன் நகை திருட்டு <!– மகள் திருமணத்துக்கு 33 ஆண்டுகளாக சேர்த்த 92 சவரன் நகை தி… –>

திருவள்ளூர் மாவட்டம் வல்லூர் அனல் மின் நிலைய குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 92 சவரன் நகைகள் திருடு போனது. வல்லூர் அனல்மின் நிலையத்தில் உதவி மேலாளராகப் பணி புரியும் சுரேஷ் சனிக்கிழமை குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று மதியம் அவரது வீட்டு கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கவனித்த பக்கத்து வீட்டுக்காரர் இது குறித்து சுரேஷிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சுரேஷ் வீட்டிற்கு வந்து பார்த்த போது, மகளின் … Read more

மாநில  உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது: பினராயி விஜயன்

சென்னை: கூட்டாட்சிக்கு ஆபத்து வரும்போது முதல் நபராக நிற்பவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும், மாநில உரிமைகளை மீட்பதில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு முக்கியமானது என்றும் கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ தன் வரலாற்று நூலின் முதல் பாகத்தை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி வெளியிட, அதனை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று பிற்பகல் … Read more