ரஷ்யாவில் இனி எல்லாம் தடை.. ஆப்பிள், கூகுள், டிவிட்டர், ஸ்டார்லிங்க் எடுத்த அதிரடி முடிவுகள்..!

உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது உலக நாடுகள் பல்வேறு தடைகளை விதித்து வரும் நிலையில், ரஷ்யாவை ஒட்டுமொத்த உலக நாடுகளிடம் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகள் திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவில் இயங்கி வரும் அல்லது சேவை அளித்து வரும் பல அமெரிக்க நிறுவனங்கள் தனது சேவையை முடக்கவும், உக்ரைனுக்கு உதவி செய்யவும் முடிவு செய்துள்ளது. குறிப்பாக வர்த்தகம் செய்ய உதவும் பல முன்னணி நிறுவனங்கள் அடுத்தடுத்து தடைகளை … Read more

“தேயிலை சாயம்” புகைப்பட கண்காட்சி

மலையக மண்வாசனை சொல்லும் மலையக இளைஞர், யுவதிகளின் புகைப்பட கண்காட்சி இன்று 28 ஆம் திகதி கொட்டகலை ஆசிரியர் கலாசாலையில் நடைபெறுகின்றது. தேயிலை சாயம் எனும் தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இக்கண்காட்சியை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை பார்வையிடமுடியும் என நிகழ்வு ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. மலையகத் தமிழர்களின் கலை, கலாச்சார மற்றும் பண்பாட்டு விழுமியங்களையும், வாழ்வியலையும் பிரதிபலிக்கும் வகையிலான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மக்களின் வலி சுமந்த வாழ்க்கையை எடுத்துக்காட்டும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

நம்பவே முடியவில்லை… விஜயகாந்த் தானா இது? ஷாக் போட்டோ!

Actor cum Politician Vijayakant latest photo goes viral fans shocks: சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள, நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களையும், அவரது கட்சி தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 80 களில் இருந்து தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம் பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். ஒருபுறம் ரஜினியும் கமலும் போட்டி போட்டுக்கொண்டு புகழின் உச்சியில் ஏறிக் கொண்டிருக்க, மறுபுறம் தனது திறமையாலும், யதார்த்த, ஏழை மக்களை சென்றடையும் வகையிலான படங்களினாலும் புகழின் … Read more

25 ஆண்டுகளை நிறைவு., ரசிகர்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா கடிதம்.!

திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு பெற்றதை அடுத்து தனது ரசிகர்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா கடிதம் எழுதியுள்ளார்.  அவரின் அந்த கடிதத்தில், “முதலில், எனது ரசிகர்கள், விசுவாசிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது நன்றியையும் அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  நீங்கள் அனைவரும் இல்லாமல், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்காகவும் உங்கள் அனைவருக்காகவும் நான் விரும்புவதைச் செய்ய நான் இங்கு இருக்க மாட்டேன். என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி.   பல ஆண்டுகளாக என் மீது நம்பிக்கை வைத்து, … Read more

இருளிலிருந்து வெளிச்சத்துக்கு… மலேசியத் தமிழ் இளைஞர்களின் நம்பிக்கையான தோழமை | இவர்கள் | பகுதி 24

இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! – ஆசிரியர். – மலைப் பிரசங்கம்.“குழந்தைகளின் பாதைகளுக்குத் தடை விதிக்காதீர்கள். நாளைய உலகத்துக் கதவுகளின் திறவுகோல் அவர்களிடமே உள்ளது.” இனிமையான குழந்தைப் பருவமும், பெற்றோரின் அரவணைப்பும், அவர்கள் ஏற்படுத்தித்தரும் வாய்ப்புகளும் அனைவருக்கும் சாத்தியப்படுவதில்லை. மகிழ்ச்சியற்ற குழந்தைப் பருவமென்பது ஆகப்பெரும் துயரம். களிப்பும் கொண்டாட்டமும் சூழ்ந்து வாழவேண்டிய வயதில், வறுமையும் அவமானங்களும் துரத்த வாழ்கிற குழந்தைகள் எல்லாவற்றையும் கண்டு அச்சப்படுகிறவர்களாக மாறுகிறார்கள். இந்த … Read more

ஓடும் பேருந்தில் ஏற முயன்று கால் இடறி கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த பள்ளி மாணவர் <!– ஓடும் பேருந்தில் ஏற முயன்று கால் இடறி கீழே விழுந்து சக்கர… –>

கும்பகோணம் அருகே ஓடும் பேருந்தில் ஏற முயன்று தடுமாறி கீழே விழுந்த பள்ளி மாணவர், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார். வலங்கைமானில் இருந்து கும்பகோணம் செல்லும் நகரப் பேருந்து ஒன்று, காலை அரியத்திடல் கிராமம் வழியாகச் சென்றுள்ளது. நிறுத்தத்தில் இருந்து பேருந்து கிளம்பிய பின் முகம்மது ஆதில் என்ற 11ஆம் வகுப்பு மாணவர் ஓடி வந்து முன்பக்க படிக்கட்டு வழியாக பேருந்தில் ஏற முயன்றுள்ளார். அப்போது கால் இடறி கீழே விழுந்த மாணவரின் உடல் மீது பேருந்தின் … Read more

திருப்பத்தூர் அருகே 14-ம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டெடுப்பு – பின்புலத் தகவல்கள்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர்.ஆ.பிரபு தலைமையிலான ஆய்வு மாணவர்கள் சரவணன், சந்தோஷ், ஸ்ரீமன் உள்ளிட்டோர் ஜவ்வாதுமலையடிவாரத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அதில், 700 ஆண்டுகளுக்கு முந்தைய விஜயநகர மன்னர் காலத்தைச் சேர்ந்த நடுகற்களை அவர்கள் கண்டெடுத்துள்ளனர். இது குறித்து முனைவர்.ஆ.பிரபு கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலை அடிவாரத்தில் எங்கள் ஆய்வுக்குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குரும்பேரி பகுதியில் பெரியவர்கள் … Read more

‘‘மாணவர்களை மீட்பது உங்களுக்கு முக்கியம்; போரை நிறுத்துவது எங்களுக்கு முக்கியம்’’- உக்ரைன் தூதர் ஆதங்கம்

புதுடெல்லி: மாணவர்களை பத்திரமாக மீட்டு வருவதே இந்தியாவின் முன்னுரிமையாக உள்ளது, அதேசமயம் போரை நிறுத்துவதும், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுப்பதும் எங்கள் முன்னுரிமையாக உள்ளது என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து இன்று 5-வது நாள். பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தீவிரத் தாக்குதலுக்கு ரஷ்யா சற்றே இடைவேளை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தநிலையில் இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் பொலிகா டெல்லியில் இன்று … Read more

தொடங்கியது பேச்சுவார்த்தை: நிபந்தனை விதிக்கும் ரஷ்யா; உறுதி காட்டும் உக்ரைன்

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து இன்று 5-வது நாள். பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டது. தீவிரத் தாக்குதலுக்கு ரஷ்யா சற்றே இடைவேளை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. பெலாரஸில் இருதரப்பு பேச்சுவார்த்தை இந்திய நேரப்படி 3.50 மணிக்குத் தொடங்கியது. உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு அமைச்சர் ஒலக்ஸி ரெஸ்னிகோவ், வெளியுறவு இணை அமைச்சர் அலக்ஸாண்டர் லுகாஷென்கோ ஆகியோர் … Read more