உத்தரகாண்டில் திடீர் நிலச்சரிவு- பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்
ருத்ரபிரயாக்: உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள மலை கிராமமான ஜாலிமத் கிராமத்தில் இன்று கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் மற்றும் மண் குவியல்கள், பல நூறு மீட்டர்கள் ஆழத்தில் உள்ள அலக்நந்தா ஆற்றின் கரையில் சரிந்தது. இதனால் அப்பகுதியில் புழுதி மண்டலமாக காட்சியளித்தது. இதில் கிராம மக்களின் ஏராளமான மாட்டுக் கொட்டகைகள் மற்றும் கழிப்பறைகள் இடிந்தன. நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, அங்கு வசித்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.