மணிப்பூர் முதல்கட்ட தேர்தலில் வன்முறை- பிற்பகல் 3 மணி நிலவரப்படி 67.53 சதவீத வாக்குப்பதிவு

இம்பால்: 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், முதல்கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட 5  மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலையில் வாக்குபப்திவு மந்தமாக இருந்த நிலையில், அதன்பின்னர் விறுவிறுப்படைந்தது.  காலை 11 மணி நிலவரப்படி 27.34 சதவீதம் வாக்குகளும், மதியம் 1 மணி நிலவரப்படி 48.88 சதவீதம் வாக்குகளும் பதிவாகி … Read more

இந்தியர்கள் விசா இல்லாமல் போலந்து எல்லைக்குள் வரலாம்- தூதர் தகவல்

வர்சா: உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள், உக்ரைனை விட்டு வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.  உக்ரைனில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், அண்டை நாடுகள் வழியாக இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இதற்காக சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே, உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளான ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியர்கள் விரைந்தவண்ணம் … Read more

நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல் என தொடர் வெற்றிகளை குவித்தவர் மு.க.ஸ்டாலின்: உமர் அப்துல்லா பேச்சு

சென்னை:  என்னை போல ஸ்டாலினும் சிறை வாசத்தை அனுபவித்துள்ளார் என புத்தக வெளியிட்டு விழாவில் உமர் அப்துல்லா பேசினார். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி தேர்தல் என தொடர் வெற்றிகளை குவித்தவர் மு.க.ஸ்டாலின் என கூறினார். 13 வயதில் இருந்தே களத்தில் இருப்பவர் மு.க.ஸ்டாலின், தன் செயலால் மக்கள் மனதில் நிற்பவர் என தெரிவித்தார்.

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுதலை!: கிளிநொச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

கொழும்பு: இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை  சேர்ந்த 12 மீனவர்களை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 12ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களின் வழக்கு, கிளிநொச்சி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் இருக்கும் 12 மீனவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார். ஆனால் … Read more

ராகுலை தம்பி என அழைத்த சத்யராஜ் – 'உங்களில் ஒருவன்' நூல் வெளியீட்டு விழாவில் கலகல பேச்சு!

ராகுல்காந்தியை தம்பி என நடிகர் சத்யராஜ் அழைத்துள்ளார். மேலும், அண்ணா ஸ்டாலின் எனவும், தம்பி ராகுல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  சென்னை நந்தம்பாக்கத்தில், உள்ள வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சுயசரிதை நூலான, ‘உங்களில் ஒருவன்’ புத்தகம் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சத்யராஜ் பேசுகையில், ”நான் ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். என்னுடைய ஆங்கிலம் சற்று மோசமானதாக இருக்கும். காரணம், தமிழ் மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்த ராகுல்காந்திக்கு எனது பாராட்டுக்கள். ஒரு சிங்கத்தைப்போல அவர் நாடாளுமன்றத்தில் … Read more

உக்ரைன் எல்லை நாடுகளுக்கு பயணிக்க இருக்கிறார்களா இந்திய அமைச்சர்கள்? யார்…யார்?

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைக்க 4 அமைச்சர்கள் அங்கு பயணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரகம் சார்பில் வெலியான தகவலில், மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, விகே சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்று அங்கு சிக்கித்தவிக்கும் மாணவர்களை மீட்கும் மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பர் என்றும், போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் சுமார் 15,000 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டு எல்லையில் … Read more

ஒரே நாளில் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ ட்ரெய்லர் வெளியீடு

நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படங்களில் ட்ரெய்லர் ஒரே நாளில் வெளியாகின்றன. ‘ஜெய் பீம்’ வெற்றிக்குப்பிறகு நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. வரும் மார்ச் 10 ஆம் தேதி ’எதற்கும் துணிந்தவன்’ தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில், வரும் மார்ச் 2 ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது படக்குழு. அதேசமயம், … Read more

இந்தியர்களை மீட்க உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விரையும் மத்திய அமைச்சர்கள்| Dinamalar

புதுடில்லி: உக்ரைனில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு 4 மத்திய அமைச்சர்களை உக்ரைன் அண்டை நாடுகளுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ‛ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று (பிப்.,27) அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதில் பங்கேற்ற மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை மீட்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை விவரித்தார். … Read more

மன்மதலீலை வெளியீட்டு தேதி அறிவிப்பு

மாநாடு படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் மன்மதலீலை. சமீபத்தில்தான் இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தின் டீசர் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் அதற்குள் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து விட்டார்கள். வருகிற ஏப்ரல் 1ம் படம் வெளிவருவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியமானது தெரியுமா?. மாநாடு படத்திற்கு முன்பே மன்மதலீலை படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பை முடித்திருந்தார் வெங்கட்பிரபு. இந்த படம் அடல்ட் கண்டன்ட் படமாக ஓடிடி வெளியீட்டுக்காக தயாரானது. … Read more

ரஷ்யாவின் வங்கி சேவைகளை முடக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முடிவு| Dinamalar

வாஷிங்டன்-உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில், ‘ஸ்விவ்ட்’ எனப்படும், சர்வதேச வங்கி சேவை ஒத்துழைப்பு முறையில் இருந்து ரஷ்ய வங்கிகளை நீக்க, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முடிவு செய்துள்ளன. 11 ஆயிரம் வங்கிகள்’ஸ்விவ்ட்’ எனப்படும் உலகளாவிய வங்கிகள் இடையேயான நிதி தகவல் தொடர்பு சொசைட்டி வாயிலாக, உலகில் உள்ள வங்கிகள் இடையே தகவல்கள் பரிமாறப்படுகின்றன. இதில், 200 நாடுகளைச் சேர்ந்த, 11 ஆயிரம் வங்கிகள் இடம்பெற்றுள்ளன. இதன் வாயிலாக, ஒரு நாட்டில் இருந்து … Read more