அடித்தது ஜாக்பாட்.. ஓரே நாளில் 19% லாபம்..!

பியூச்சர் ரீடைல் நிறுவனத்தை நீண்ட காலமாகச் சுற்றி வந்த பிரச்சனைகள் தொடர்ந்து இருந்தாலும், தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் ரீடைல் கடைகள் தற்போது ரிலையன்ஸ் ரீடைல் கைப்பற்றத் துவங்கியுள்ளது. இதன் மூலம் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் சுமை குறைந்துள்ளது. இதன் வாயிலாகப் பல மாதங்களாகத் தொடர்ந்து சரிவிலேயே இருக்கும் பியூச்சர் நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு இன்று மிகப்பெரிய ஜாக்பாட் கிடைத்துள்ளது. யார் இந்த மாதபி புரி பச்.. செபியின் புதிய தலைவராக நியமனம்..! பியூச்சர் ரீடைல் இந்தியாவின் … Read more

ரஷ்யாவின் ரூபள் நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி

ரஷ்யா – உக்ரேன் நெருக்கடிக்கு மத்தியில் இந்த நாடுகள் இரண்டிலும் நிதி செலவினம் அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் ரூபிள் நாணயமொன்று டொலருக்கு அமைவாக 30 சதவீதத்தினால் வீழ்ச்சி கண்டுள்ளது. இதேபோன்று பங்கு சந்தையும் வீழ்ச்சி கண்டுள்ளது. ரஷ்ய உக்ரேன் யுத்தத்தின் ஆரம்பத்தில் எரிபொருள் விலை அதிகரித்தது. இருப்பினும் தற்பொழுது ஓரளவு குறைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதற்கமைவாக அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய் 97.22 அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது. லண்டன் ப்ரண்டி சந்தையில் இது … Read more

Russia-Ukraine crisis Live: உக்ரைன் – ரஷ்யா இடையே அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பம்

Go to Live Updates உக்ரைனின் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுடன் “முன்நிபந்தனைகள் எதுவும் இல்லாமல்” பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஒப்புக்கொண்டார். பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோவிடம் தொலைபேசியில் பேசிய பிறகு விலாடிமிர் ஜெலன்ஸ்கி இதனை தெரிவித்தார். பேச்சுவார்த்தையில் உக்ரைன் அதிகாரிகள் பங்கேற்க தயார் என்றும் உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் பிரிப்யத் நதி அருகே பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார். ஐ.நா. அவசரக் கூட்டம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் ஐ.நா. பாதுகாப்பு … Read more

பா.ம.க.வை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும் – மருத்துவர் இராமதாஸ்.!

பா.ம.க.வை அனைத்து நிலைகளிலும் வலுப்படுத்த கடுமையாக உழைக்க வேண்டும் என்று, பா.ம.க. நிர்வாகிகள் கூட்டத்தில் மருத்துவர் இராமதாஸ் பேசியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும்  வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை  மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடன்  பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்  மருத்துவர் இராமதாஸ் அவர்கள்  இன்று ஆலோசனை நடத்தினார். கட்சி வளர்ச்சிப்பணிகள் மருத்துவர் இராமதாஸ் அவர்கள் நடத்தி வரும் தொடர் … Read more

“அரசாங்கமும் ஒதுக்கினா என்ன பண்றது?!” -திருத்தணி கோவிலில் பணிக்கு போராடும் திருநங்கை அகல்யா வேதனை

‘திருத்தணி முருகன் கோவிலில் கடைநிலை ஊழியர் பணிக்கு அப்ளை செய்துருந்தேன். அந்த பணியில், மூன்றாம் பாலினத்தவருக்கு என தனி இட ஒதுக்கீடு இல்லாததால் என்னுடைய வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது!’ என்கிறார், திருநங்கை அகல்யா. இது குறித்து அவரிடம் பேசினோம். திருநங்கை அகல்யா “என்னோட சொந்த ஊர் திருத்தணி. பன்னிரண்டாம் வகுப்பில் 968 மதிப்பெண் வாங்கினேன். காலேஜ் செகண்ட் இயர் படிக்கும் போது என்னோட உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் தொடர்ந்து படிக்க முடியாம படிப்பை நிறுத்திட்டேன். எங்க வீட்டில் என்னை … Read more

கோவில் திருவிழாவில் பக்தரின் தலையில் தீ மூட்டி, பொங்கல் வைத்து நூதன வழிபாடு <!– கோவில் திருவிழாவில் பக்தரின் தலையில் தீ மூட்டி, பொங்கல் வ… –>

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் பக்தர் ஒருவரது தலையில் தீமூட்டி பொங்கல் வைத்து நூதன வழிபாடு நடைபெற்றது. சேப்பாக்கம் கிராமத்தில் அங்காளம்மன் கோவில் திருவிழா நடைப்பெற்றது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட திருவிழாவில் பம்பை இசைக்கு ஏற்ப ஆண், பெண் பக்தர்கள் அருள் வந்து ஆடினர். விழாவில் வயதான பக்தர் ஒருவரின் தலையில் சும்மாடு வடிவில் துணியைச் சுற்றி, அதன் மேற்பரப்பில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து, அதன் மீது சில்வர் பாத்திரத்தை வைத்து … Read more

"போர்ச் சூழலால் பயம்… மீட்கும் அரசால் நம்பிக்கை…" – உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய தமிழக மாணவர்கள்

புதுடெல்லி: “உக்ரைனில் நிலவிய போர்ச் சூழலால் இந்தியா திரும்புவதில் எங்களுக்கு பயம் இருந்தது” என்று உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்திறங்கிய தமிழகத்தைச் சேர்ந்த பிரேமா, லேகா என்ற இரு மாணவிகள் உக்ரைனில் நிலவும் சூழல் தொடர்பாக பேசினர். “உக்ரைனில் நிலவிய போர்ச் சூழலால் இந்தியா திரும்புவதில் எங்களுக்கு பயம் இருந்தது. அரசின் உதவியால் நாங்கள் இன்று நாடு திரும்பியுள்ளோம். இப்போது எங்களுக்கு தமிழக அரசு … Read more

கரோனா பரிசோதனை முடிவு, தடுப்பூசி, தனிமைப்படுத்துதல்: உக்ரைன் மாணவர்களுக்கு விலக்கு

புதுடெல்லி: உக்ரைனில் இருந்து வரும் பயணிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மத்திய அரசு மீட்டு வருகிறது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்பதற்கு வெளியுறவு அமைச்சகம், சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சகம், உள்துறை அமைச்சகம், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆகியவை ஒருங்கிணைந்து அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு … Read more

உக்ரைனின் போர் சின்னமான செயின்ட் ஜாவ்லின்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

உக்ரைனின் சின்னமாக செயின்ட் ஜாவ்லின் போற்றப்படுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள வேளையில் தற்போது செயின்ட் ஜாவ்லின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்நிலையில், செயின்ட் ஜாவ்லின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஜாவ்லின் எனப்படும் ஏவுகணையைச் செலுத்தும் கருவியுடன் ஒரு பெண் துறவி காணப்படுவதுதான் செயின்ட் ஜாவ்லின் புகைப்படமாகும். ரஷ்யா போர் தொடுத்திருக்கும் வேளையில், செயின்ட் ஜாவ்லின்தான் உக்ரைனின் மீட்பராகப் போற்றப்படுகிறார். அதனால்தான் இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. … Read more

இந்திய அறிவியல் தினத்துக்கு வித்திட்ட 'ராமர் விளைவு' நடந்தது எப்படி?

இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற இந்தியர் விஞ்ஞானி சர் சி. வி.ராமனைப் பெருமைப்படுத்தும் வகையில் இந்தியாவில் தேசிய அறிவியல் நாள் – பிப்ரவரி 28-ம் நாள் கொண்டாடப்படுகிறது. 1928 ஆம் ஆண்டு இதே நாளில் ஃபோட்டான்கள் சிதறும் ஒரு நிகழ்வை அவர் கண்டுபிடித்தார், அது பின்னர் ‘ராமன் விளைவு’ என்று அறியப்பட்டது. கண்டுபிடிப்பு நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு,1930 இல் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது, இது அறிவியல் துறையில் இந்தியாவிற்கான முதல் நோபல் பரிசு ஆகும். … Read more