சாலை விபத்தில் மரணம் – இழப்பீட்டு தொகை 8 மடங்காக அதிகரிப்பு!

சாலை விபத்துகளில் உயிரிழப்பவா்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை 8 மடங்காக உயா்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, 2 லட்சம் ரூபாய் இழப்பீடமாக வழங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் சாலை விபத்துகளில் மரணம் அடைபவர்களுக்கு, மத்திய அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், காயம் அடைபவர்களுக்கும் நிவாரணத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாலை விபத்துகளில் உயிரிழப்பவா்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை 8 மடங்காக உயா்த்தப்பட்டு உள்ளது. அதன்படி, 25 லட்சம் ரூபாயில் இருந்து 2 … Read more

போங்க.. போய் ரஷ்யாவுடன் சண்டை போடுங்க.. கைதிகளை திறந்து விட்ட உக்ரைன்!

ரஷ்யப் படையினருடன் சண்டையிட விரும்பும் கைதிகளை விடுதலை செய்து வருகிறது உக்ரைன் . ரஷ்யப் படையினரின் தாக்குதலை விதம் விதமாக சமாளித்துக் கொண்டிருக்கிறது உக்ரைன். அந்த நாட்டுக்கு ஐரோப்பிய நாடுகள் பலவும் ஆயுத உதவிகளைச் செய்து வருகின்றன. பொருளாதார ரீதியாக ரஷ்யாவை பலவீனப்படுத்தும் வகையில் பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யப் படையினருக்கு எதிராக கைதிகளையும் போரில் ஈடுபடுத்த ஆரம்பித்துள்ளது உக்ரைன். ராணுவத்தினரின் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் கைதிகளை கையில் எடுத்துள்ளது உக்ரைன். அதன்படி … Read more

Dhanush:ஐஸ்வர்யாவுடன் சேர்ந்தாலும் தனுஷுக்கு 'அது' மட்டும் நடக்காது போல

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தாங்கள் பிரிவதாக ஜனவரி மாதம் 17ம் தேதி இரவு சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர். அவர்களை சேர்த்து வைக்க இரு வீட்டாரும், நண்பர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகன்களுக்காக மீண்டும் சேரப் போகிறார்களாம். தன் தலைவர் ரஜினியை வைத்து படம் இயக்க ஆசைப்படுகிறார் தனுஷ் . தலைவர் 170 படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு … Read more

Google Play Pass அறிமுகம் – 1000க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் கேம்கள் இலவசம்!

பெரும்பாலான மக்கள் நிராகரிக்க முடியாத இடத்தில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது. பல மேம்பட்ட சேவைகள் மூலம் பயனர்களை மகிழ்வூட்டும் கூகுள், தற்போது Google Play Pass எனும் புதிய சந்தா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள், தங்களுக்குத் தேவையான செயலிகள் மற்றும் கேம்களை Google Play Store அல்லது கூகுள் ப்ளே பயன்பாடு மூலம் பதிவிறக்கம் செய்கின்றனர். இந்த நிலையில், கூகுள் இந்தியா அறிவித்திருக்கும், புதிய சந்தா திட்டம் பயனர்களுக்கு பெரும் வசதியாகப் பார்க்கப்படுகிறது. … Read more

"ஞாயிற்றுக்கிழமை கடினமான நாள்’’ உக்ரைன் இராணுவம் அறிவிப்பு

ரஷ்யா – உக்ரைன் போரானது தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் நேற்றைய நாளில் போர் களத்தை மேலும் சூடுபிடிக்க வைக்கும் வகையில் பதிவான சம்பவங்கள் தொடர்பான தொகுப்பினை இங்கே பார்க்கலாம், உக்ரைனியர்களுக்கு நேற்று “கடினமான நாள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய துருப்புக்கள் எல்லா திசைகளிலும் எறிகணை  தாக்குதலை நடத்தியுள்ளன.                                          … Read more

ரஷ்யா மீது விதிக்கப்பட்டு வரும் தடைகளை ஏற்க முடியாது – சீனா கண்டனம் <!– ரஷ்யா மீது விதிக்கப்பட்டு வரும் தடைகளை ஏற்க முடியாது – சீ… –>

ரஷ்யா மீது விதிக்கப்பட்டு வரும் தடைகள் ஒருதலைபட்சமானது என சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பின் காரணமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன. இந்நிலையில், ரஷ்யா மீது விதிக்கப்பட்டு வரும் தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதனை ஒருபோதும் ஏற்கமுடியாது என்றும் சீன வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான பிரச்சனைகள் மேலும் அதிகரிக்காமல் இருக்க அனைத்து தரப்பினரும் நிதானமாக செயல்பட வேண்டும் என்றும் சீனா … Read more

கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்த மாநில அரசுகளுக்கு ரூ .1 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்படும் – பிரதமர் அறிவிப்பு <!– கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்த மாநில அரசுகளுக்கு ரூ .1 … –>

கூட்டுறவு அமைப்புகளை வலுப்படுத்த மாநில அரசுகளுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இணையவழிக் கருத்தரங்கில் பேசிய அவர், அரசின் பல்வேறு துறைகளின் உட்கட்டமைப்புத் திட்டமிடல், செயல்படுத்துதல், கண்காணிப்பு ஆகியவற்றைப் பிஎம் கதிசக்தி ஒருங்கிணைக்கும் எனத் தெரிவித்தார். தேசிய நெடுஞ்சாலை, ரயில்வே, விமான நிலையம், நீர்வழிகள், புதுப்பிக்கவல்ல எரியாற்றல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான முதலீடுகளை அரசு அதிகரித்துள்ளதாகவும், இதன் விளைவாகக் கிடைக்கும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்ற துறைகளின் பொருளாதார உற்பத்தித் … Read more

தபு, பூமிகா முதல் லைலா வரை… தமிழில் மீண்டும் களமிறங்கும் 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் நாயகிகள்!

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்டான நாயகிகள் சிலர் தற்போது மீண்டும் தமிழுக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். நடிகைகள் பூமிகா, மாளவிகா, லைலா, மதுபாலா, தபு உள்பட பலரும் மீண்டும் கோடம்பாக்கத்துக்கு விசிட் அடித்து வருகின்றனர். ஒரு காலத்தில் இங்கே பிசியாக நடித்துக் கொண்டிருந்த இவர்கள் அதன்பின் கல்யாணம், குடும்பம், குழந்தைகள் என்று போய்விட, நடிப்பில் இருந்தே முற்றிலும் ஒதுங்கினார்கள். முழுநேர இல்லத்தரசியாகவும் இன்ஸ்டாவில் புகைப்படங்களைத் தெளித்து வந்தார்கள். தபு உள்ளிட்ட சிலர் மட்டும் பாலிவுட்டில் நிறைய படங்கள் … Read more

உக்ரைன் ஜனாதிபதியின் உரையை மொழிபெயர்க்கும்போது உணர்ச்சி வசப்பட்டு அழுத ஜேர்மன் செய்தியாளர்

நேற்று உலகின் பல பகுதிகளில் தேவாலயங்களுக்குச் சென்றவர்கள், உக்ரைன் நாட்டில் போரால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கண்ணீருடன் பிரார்த்தனை செய்ததைக் குறித்த செய்திகள் வெளியானவண்ணம் உள்ளன. அந்த அளவுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர். இந்நிலையில், போர் குறித்த செய்திகளை வாசிக்கும் செய்தியாளர்கள், செய்திகளை மொழிபெயர்ப்போர், என பல தரப்பினரும் உக்ரைன் செய்திகளை வாசிக்கும்போது உணர்ச்சி வசப்பட்டு அழுவதைக் காட்டும் செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வகையில், உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky … Read more

ரஷ்யாவிற்கு எதிரான போரில் சிறை கைதிகளும் ஈடுபடுத்தப்படுவார்கள்! உக்ரைன் அதிபர் தகவல்…

கீவ்: ரஷ்யாவிற்கு எதிரான போரில்  இராணுவ அனுபவமுள்ள கைதிகளை ஈடுபட விரும்பினால், அவர்களையும் உக்ரைன் அரசு விடுவிக்கும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது இன்று 5வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷியா இன்று சற்று தாக்குதலை குறைத்துள்ளது. அதே வேளையில், இரு நாடுகளுக்கும் இடையே பெலாரசில் இன்று பேச்சுவார்த்தையும் தொடங்க உள்ளது. இந்த நிலையில், தலைநகர் கீவ்வில் இருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேறலாம் என்று ரஷியா ராணுவ மும் அறிவித்து … Read more