கீவில் இருந்து பாதுகாப்பாக வெளியேறலாம்: ரஷ்ய ராணுவம்| Dinamalar

கீவ்: உக்ரைனில் போர் விமான தாக்குதல் எச்சரிக்கை ஒலி நிறுத்தப்பட்ட நிலையில், தலைநகர் கீவில் இருந்து மக்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என ரஷ்ய ராணுவம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 5வது நாளாக தொடர்ந்து வருகிறது. ரஷ்ய படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களில் கடுமையான தாக்குதலைகளை நடத்தி வருகின்றன. இதனால் அங்குள்ள மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (பிப்.,28) நடைபெற உள்ள … Read more

யார் இந்த மாதபி புரி பச்.. செபியின் புதிய தலைவராக நியமனம்..!

இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் தலைவராக மாதபி பூரி புச் நியமிக்கப்பட்டுள்ளார். செபியின் தலைவர் அஜய் தியாகியின் காலம் பிப்ரவரி 28 அன்று முடிவடையவுள்ள நிலையில், அவருக்கு மீண்டும் பதவி காலம் நீட்டிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் தான் மாதபி தலைவராக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளார். நிதி அமைச்சகம் கடந்த அக்டோபர் மாதம் தலைவர் பதவிக்கான விண்ணப்பங்களுக்கு அழைப்பு விடுத்தது. இதற்கான காலக்கெடு டிசம்பர் 6 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ரஷ்யா – … Read more

ரயில் சேவை ரத்து செய்யப்படவில்லை

ரயில் சேவைக்கு தேவையான டீசல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் எந்தவொரு ரயில் சேவையும் ரத்து செய்யப்படவில்லை என்று ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக விஜேசுந்தர குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மின்சார சபைக்கு எரிபொருளை விநியோகிக்கக்கூடிய மாற்று முறை தொடர்பில் விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. எரிபொருள் கூட்டுத்தாபனம் மற்றும் இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.   

உக்ரைன்: கண்ணீருடன் இசைக்கப்பட்ட தேசிய கீதம்; மனதை உருக்கும் வீடியோ

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து போராடி வரும் நிலையில், ஏவுகணை மற்றும் ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டு பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர், மேலும் தாக்குதலில் இருந்து தப்ப, பதுங்கு குழிகளிலும், மெட்ரோ நிலையங்களிலும், பாதுகாப்பான இடங்களிலும் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இருப்பினும், ரஷ்ய துருப்புக்களின் தாக்குதலில், வெடிகுண்டு வெடிக்கும் சத்தத்திற்கு மத்தியில், பலர் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் உட்பட உக்ரைனின் பொதுமக்கள் சமூக … Read more

தைலாபுரம் விசாரணை: பாமக நிர்வாகிகளை துளைத்து எடுத்த ராமதாஸ்

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாமக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், பாமகவை வலுப்படுத்தும் பணியை அக்கட்சியினர் தொடங்கியுள்ளனர். வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கும், அதையடுத்து 2 ஆண்டுகள் கழித்து வர உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் பாமகவை இப்போதிலிருந்தே வலுப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் டாகர் ராமதாஸ் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, பாமக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. 20க்கும் மேற்பட்ட இடங்களில் … Read more

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையான இளைஞர்.. ரம்மி விளையாட பணம் தராததால் எடுத்த விபரீத முடிவு..!

ஆன்லைனில் ரம்மி விளையாட பணம் தராததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவருக்கு கீதா என்ற மனைவியும் விக்னேஷ், பிரகாஷ்  என்ற இரு மகன்களும் உள்ளனர். மாடசாமி அந்த பகுதியில் சென்ட்ரிங்க் வேலை செய்து வருகிறார். விக்னேஷ் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். பிரகாஷ் வேலை தேடி வந்துள்ளார். இதற்கிடையில் குடும்பத்தினரிடம் வேலைக்கு இண்டர்வியூக்கு செல்ல வேண்டும், கோசிங்க் கிளால் செல்ல வேண்டும் என … Read more

`ரஷ்ய தாக்குதலின் தீவிரம் குறைந்துள்ளது!' – உக்ரைன் ராணுவம்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ரஷ்யப் படைகளின் தாக்குதலால், உக்ரைனில் ராணுவத்தினர் மட்டுமின்றி குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்களும் உயிரிழந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் உலக நாடுகள் மட்டுமல்லாமல், ரஷ்ய மக்களும் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவில் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். உக்ரைன் : தாக்குதல் நடைபெற்ற இடம் இந்த நிலையில் ரஷ்யா – உக்ரைன் நாடுகள் இடையே பெலாரஸில் பேச்சுவார்த்தை நடைபெறும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் … Read more

ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்..! <!– ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்..! –>

ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல் நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல் ஜெயக்குமாரை மார்ச் 11 வரை சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவு ரூ.5 கோடி மதிப்பிலான தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் நடவடிக்கை Source link

நரேஷ்குமாரை கைது செய்திருந்தால் ஜெயக்குமார் சம்பவமே நடந்திருக்காது: ஆர்ப்பாட்டத்தில் இபிஎஸ் பேச்சு

சேலம்: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட 13 சதவீத கள்ள ஓட்டுகளைப் பதிவு செய்து சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் … Read more

‘‘உக்ரைனில் இந்தியர்கள் மீது தாக்குதல்; சொந்த மக்களை கைவிட முடியாது’’- மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: உக்ரைனில் இந்தியர்கள் தாக்கப்படும் வீடியோவை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சொந்த மக்களை நாம் கைவிட முடியாது என வலியுறுத்தியுள்ளார். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது வரை ஆபரேஷன் கங்கா மூலம் ருமேனியாவிலிருந்து 5 விமானங்கள் இந்தியர்களை மீட்டுத் திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ளோரில் மீட்பதில் மிகப்பெரிய சவால்கள் உள்ளன. உக்ரைனில் தவிக்கும் இந்தியர்கள், … Read more