நம் சொந்த மக்களை நாமே கைவிடக் கூடாது: ராகுல்| Dinamalar

புதுடில்லி: உக்ரைனில் சிக்கியுள்ள மாணவர்களை மாணவர்களை மத்திய அரசு எப்படி வெளியேற்ற போகிறது என்ற திட்டத்தை உடனடியாக பகிர வேண்டும் எனவும், நம் சொந்த மக்களை நாமே கைவிடக் கூடாது என்றும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனில் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உக்ரைனை விட்டு அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைகின்றனர். உக்ரைனில் சிக்கி தவித்து வரும் இந்தியர்கள், உக்ரைனை விட்டு வெளியேறுவதற்காக போலந்து எல்லையை கடக்க … Read more

'வலிமை' பின்னணி இசை : ஜிப்ரானை வாழ்த்திய யுவன்

வினோத் இயக்கத்தில், அஜித் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'வலிமை'. இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன். அவர் இசையமைத்த மூன்று பாடல்கள் மற்றும் விசில் தீம் மியுசிக், தி இன்டன்ஸ் ஆப் பயர் தீம் ஆகியவை யு டியூபில் வெளியிடப்பட்டன. படத்தின் டீசருக்கும் யுவன்தான் இசையமைத்திருந்தார். ஆனால், வலிமை டிரைலர் வெளியான போது அதற்கு இசையமைத்தது யார் என்ற கேள்வி எழுந்தது. படத்திற்குப் பின்னணி இசையை யுவன் அமைக்கவில்லை. இசையமைப்பாளர் ஜிப்ரான் தான் அமைத்து வருகிறார் என்ற … Read more

உக்ரைனின் கார்கிவ் நகரை குறிவைத்த ரஷ்யா| Dinamalar

கீவ்-உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரில் ரஷ்யா – உக்ரைன் நாட்டு ராணுவத்தினர் இடையே பயங்கர சண்டை நடந்து வருகிறது. உக்ரைனில் உள்ள விமான தளங்கள், எரிபொருள் கிடங்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்தன. முக்கிய துறைமுகங்களையும் கைப்பற்றின. இந்நிலையில், உக்ரைனின் அண்டை நாடான பெலாரசில் அமைதி பேச்சுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் விடுத்த அழைப்பை, முதலில் ஏற்க மறுத்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி, பின் அழைப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.தீப்பிழம்புசோவியத் யூனியனில் … Read more

மார்ச் மாதத்தில் 13 நாட்கள் விடுமுறையா? வங்கி ஸ்ட்ரைக்கும் இருக்கு.. கவனமா இருங்க!

நாளை மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், இந்த மார்ச் மாதத்தில் உள்ள 31 நாட்களில் 13 நாட்கள் வங்கி விடுமுறை நாட்களாக உள்ளது. இதில் தமிழகத்தில் எவ்வளவு நாள் விடுமுறை. பொது விடுமுறைகள் எத்தனை நாட்கள்? இம்மாதத்தில் வங்கி ஸ்ட்ரைக்கும் உண்டு. ஆக மொத்தம் எத்தனை நாட்கள் வங்கிகள் செயல்படாது, வாருங்கள் பார்க்கலாம். பொதுவாக ஒரு மாதம் தொடங்குவதற்கு முன்னதாக வங்கி விடுமுறை பற்றி அறிவிக்கப்படும். இதன் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் முன் கூட்டியே தங்களது வங்கி … Read more

உலகளவில் கொரோனா தொற்றினால் 43.59 கோடி பேர் பாதிப்பு

உலகளவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 43.59 கோடியை கடந்துள்ளது.  சீனாவில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகள் பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் இதுவரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 கோடியே 59 இலட்சத்து 93 ஆயிரத்து 305 … Read more

அருண் விஜய் பட அப்டேட்.. விக்ரம் ரசிகருக்கு பதில் அளித்த இயக்குநர்.. மேலும் சினிமா செய்திகள்

நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் ‘யானை’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், ராஜேஷ், போஸ் வெங்கட், யோகி பாபு, இமான் அண்ணாச்சி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யானை திரைப்படத்தை டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கடந்த டிசம்பரில் யானை திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு … Read more

நிரந்தர பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு! டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளில் பங்கேற்போர் ஒருமுறை நிரந்தர பதிவு கணக்குடன் தங்களின் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு நீட்டித்துள்ளது. தமிழக அரசுப் பணிகளுக்கு தேர்வாணையம் மூலம் பணியாளர்கள் நியமணம் செய்யப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு உரிய தகுதிகளுடன் இருப்பவர்கள் மட்டுமே பணி நியமணம் பெற முடியும். தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஒருமுறை பதிவு செய்யப்பட்ட நிரந்தர கணக்கு வைத்திருப்பது கட்டாயம். தேர்வர்கள் ஒருமுறை நிரந்தர … Read more

சென்னை: இரண்டாவது மனைவியைக் கொலை செய்தது ஏன்?! – கணவன் அதிர்ச்சி தகவல்

சென்னை கொளத்தூர் லட்சுமிபுரம் வ.உ.சி. தெருவைச் சேர்ந்தவர் இளங்கோவன் (29). எலெக்ட்ரீசியனாக வேலைப் பார்த்து வருகிறார். இவரின் இரண்டாவது மனைவி வெண்ணிலா (23). கடந்த 26-ம் தேதி இளங்கோவன், புழல் எம்.ஜி.ஆர் நகரில் குடியிருக்கும் தன்னுடைய தாத்தா வீட்டுக்கு மனைவியை அழைத்துக் கொண்டு சென்றார். அப்போது கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இளங்கோவன், மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுவிட்டார். மனைவியுடன் இளங்கோவன் இதுகுறித்து புழல் காவல் நிலையத்துக்கு … Read more

மறைமுகத் தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மறைமுகத் தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் என மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்கு கடந்த பிப்.19-ம் தேதி நடந்த தேர்தலில் கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரலிங்கம் உள்பட 15 அதிமுக கவுன்சிலர்கள், மார்ச் 4-ம் தேதி நடக்கவுள்ள மறைமுகத் தேர்தலை தள்ளிவைக்க கூடாது என மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தங்களை ஆளுங்கட்சியினர் மிரட்டுவதாக … Read more

ஆபரேஷன் கங்கா | பிரதமர் மோடி மீண்டும் அவசர ஆலோசனை; மீட்புப் பணியில் 4 அமைச்சர்கள்

புதுடெல்லி: உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடி இன்று மீண்டும் அவசர ஆலோசனை மேற்கொண்டார். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார். இதில் பங்கேற்ற மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, உக்ரைனில் இருந்து இந்தியமாணவர்களை மீட்க எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளை விவரித்தார். மாணவர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு … Read more