துரத்தும் போர்! – உக்ரைனில் தஞ்சம் புகுந்த ஆப்கன் இளைஞர்; புகலிடம் தேடி போலந்து பயணம்

வார்சா: ஒரு போர் என்ன செய்யும் என்பதற்கு அஜ்மல் ரஹ்மானியின் வாழ்க்கை ஓர் உதாரணம். ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அஜ்மல் ரஹ்மானி (40), 18 ஆண்டுகளாக காபூல் சர்வதேச விமான நிலையத்தில் பணியாற்றி வந்தார். நேட்டோ சார்பில் அவர் பணியில் இருந்துள்ளார். மனைவி, இரண்டு குழந்தைகள் வசிப்பதற்கு சொந்தமாக ஒரு வீடு, பயணிக்க கார் என்று வசதியாக வாழ்ந்துள்ளார். ஆனால், ஆப்கனிலிருந்து நேட்டோ, அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரஹ்மானிக்கு அச்சுறுத்தல்கள் … Read more

உக்ரைனில் போய் படிக்க இந்தியர்கள் குவிவது ஏன்.. "நீட்" தேர்வுதான் காரணம்?

உக்ரைன் நாட்டுக்குப் படிக்கப் போய், போரில் சிக்கித் தவித்த மாணவர்களை சிலர் விமர்சிக்க ஆரம்பித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்தியாவில் இல்லாத வசதியா, கல்லூரியா என்று இவர்கள் கேட்கின்றனர். ஆனால் இந்தியாவில் உள்ள பல தடைகள், முட்டுக்கட்டைகள், இடையூறுகள், உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் இல்லை என்பதால்தான் இந்த நாடுகளுக்கு அதிக அளவில் இந்திய மாணவர்கள் படிக்கப் போகிறார்கள் என்று பெற்றோர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள். உக்ரைனில் போர் உக்கிரமாகியுள்ளது. ரஷ்யப் படைகளின் தாக்குதல் நிற்பது போலத் தெரியவில்லை. பேச்சுவார்த்தைக்கு … Read more

உலகின் மிகப்பெரிய விமானத்தை தகர்த்த ரஷ்யா!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ஐந்தாவது நாளாக ரஷ்ய படைகள் நடத்தி வரும் பல்முனை தாக்குதலால் உக்ரைனின் பல்வேறு இடங்கள் சேதமடைந்துள்ளன. ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், தலைநகர் கீவ்-யை சுற்றி வளைத்து அந்நகரத்தை பிடிக்கும் நோக்கில் கடுமையான தாக்குதலை நடத்தி வருகின்றன. உக்ரைன்- ரஷ்ய எல்லை, பெலாரஸ் நாடு, கிரீமியா தீபகற்பம், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் பகுதி ஆகியவற்றில் இருந்து ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதலை நடத்தி … Read more

அண்ணாச்சி படம் அங்கதான் நடந்துச்சாம்… சூப்பர் ஷூட்டிங் ஸ்பாட்டாய் இருந்து உருக்குலைந்து போன உக்ரைன்!

உக்ரைன் மீதான ரஷிய தொடுத்துள்ள போர் இன்று ஐந்தாவது நாளாக நீடிக்கிறது. உக்ரைன் நாட்டின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரத்தை பிடித்ததாக ரஷிய படை அறிவித்தது. ஆனால் உக்ரைன் அந்த நகரை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தெரிவித்துள்ளது. ரஜினின்னு பேர் வச்சா படம் ஜெயிச்சுடுமா… ஆடியோ லாஞ்சில் அனலை கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்! ஐந்து நாட்களாக நடைபெற்று வரும் போரில் இதுவரை இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைன் உருக்குலைந்துள்ளது. … Read more

ஊடகவியலாளர் நிமலராஜனின் கொலை விவகாரம்! பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

2000 ஆம் ஆண்டு இலங்கை ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பிரித்தானிய பொலிஸார் கைது செய்துள்ளனர். 20 வருடங்களுக்கு முன்னர் இலங்கை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் அண்மையில் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டிருந்தார். பிரித்தானியாவின் போர் குற்ற அதிகாரிகள் குழுவொன்றினால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, நிமல்ராஜனின் கொலை தொடர்பிலான தகவல்களை அறிந்தவர்களிடம் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் உதவிகளை … Read more

உக்ரைனின் உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் ரஷ்யாவின் தாக்குதலில் எரிந்து நாசம்.! <!– உக்ரைனின் உலகின் மிகப் பெரிய சரக்கு விமானம் ரஷ்யாவின் தாக… –>

உலகின் மிகப்பெரிய விமானமாக அறியப்பட்ட தங்கள் நாட்டு சரக்கு விமானத்தை ரஷ்ய படை தாக்கி அழித்துள்ளதாக உக்ரைன் வேதனை தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ஐந்தாவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, தலைநகர் கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு அருகே தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், தலைநகர் கிவ் அருகே Hostomel விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு விமானத்தை ரஷ்ய படை தகர்த்து அழித்துவிட்டதாக உக்ரைன் கூறியுள்ளது. இது … Read more

ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம்.. இந்திய பங்குச்சந்தைகள் தொடக்கத்திலேயே சரிவு.! <!– ரஷ்யா – உக்ரைன் போர் பதற்றம்.. இந்திய பங்குச்சந்தைகள் தொட… –>

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் பதற்றம் 5-ம் நாளாக தொடரும் நிலையில் இன்று இந்திய பங்குச்சந்தைகள் தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தன. இரு நாடுகளிடையே போர் தொடங்கிய நாள் முதலே இந்திய பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன. காலை 9.15 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 754 புள்ளிகள் சரிந்து 55,103 புள்ளிகளில் வர்த்தகமாகியது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 216 புள்ளிகள் சரிவடைந்து 16,441 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது. Source link

மூன்று மகள்களுடன் 'வலிமை' படத்தைப் பார்த்த போனி கபூர்! நெட்டிசன்கள் பகிர்ந்த கமென்ட்!

அஜித்குமார், ஹூமா குரைஷி, கார்த்திகேயா ஆகியோரின் நடிப்பில் உருவாக்கிய ‘வலிமை’ படம், பிப்ரவரி 24 திரையரங்குகளில் வெளியானது. குடும்ப ரசிகர்களுக்காக செண்டிமென்ட் காட்சிகள் அஜித் ரசிகர்களுக்காக ஆக்ஷன் சீக்வென்ஸ் எனக் கலந்து கட்டி ஹெச்.வினோத் இயக்கிய இந்தப் படத்திற்கு பல்வேறு வகையிலான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. முதல் நாள் முதல் காட்சியைப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், ஹூமா குரைஷி, கார்த்திகேயா உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை ரோகினி திரையரங்கில் பார்த்தனர். போனி கபூர் மற்றொரு முறை … Read more

துணிச்சலாக ரஷ்ய டாங்குகளை நேருக்கு நேராக எதிர்த்து நிற்கும் உக்ரைன் குடிமக்கள்: ஆச்சரியத்தை ஏற்படுத்தும் காட்சிகள்

உக்ரைன் நாட்டுக் குடிமக்கள் துணிச்சல் மிக்கவர்கள் என்பதை போரால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டிலிருந்து வெளியாகும் புகைப்படங்கள் நிரூபித்தவண்ணம் உள்ளன. போருக்காக சிறுவர்கள் முதல் வயது முதிர்ந்த பெண்மணிகள் வரை ஆயுதப் பயிற்சி எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், ஒற்றை ஆளாக துணிச்சலாக ரஷ்ய இராணுவ டாங்குகளை எதிர்த்து நின்ற உக்ரைன் குடிமகன், உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையிலும், எல்லை பாதுகாப்புப் படையில் இணையும் பெண்கள் என, தொடர்ந்து, சற்றும் அஞ்சாமல் தாங்கள் புடினைக் கண்டு அஞ்சவில்லை என நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள் … Read more

உக்ரைன் மீதான போரில் தங்களுக்கும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது! ரஷியா ஒப்புதல்..

மாஸ்கோ: உக்ரைன் மீதான போரில் தங்களுக்கும் உயிரிழப்பு காயம் ஏற்பட்டுள்ளது என்று ரஷியா ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், எத்தனை பேர் என்ற விவரங்களை வெளியிடவில்லை. உக்ரைன் மீது இன்று 5வது நாளாக ரஷியா தாக்குதலை நடத்தி வருகிறது.  ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் 4300 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடையே ஊடகம் மூலம் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, நாட்டை … Read more