கடும் பனியில் விடாது ஒலிக்கும் ஏவுகனை சத்தம்- வீடியோ வெளியிட்டு காப்பாற்றக்கோரும் கொடைக்கானல் மாணவி

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகில் உள்ள பாக்கியபுரத்தை சேர்ந்த ஜோசப் சகாயராஜ் – ஜோஸ்பின் தம்பதியின் மகள் வியானி (வயது 20). இவர் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் இறுதியாண்டு படித்து வருகிறார். தற்போது அங்கு போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் பதுங்கு குழியில் தங்கியுள்ள தங்கை ள காப்பாற்ற வேண்டுமென அவர் தங்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- கார்கிவ் நகரில் தற்போது மிகுந்த பதட்டமான சூழல் நிலவி வருகிறது. … Read more

அரியானா தனியார் கம்பெனியில் 3 ஊழியர்களை கொன்ற கொள்ளையர்கள்

குர்கிராம்: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் புபேந்திரா, புஷ்பேந்திரா, நரேஷ். இவர்கள் 3 பேரும் அரியானா மாநிலம் குர் கிராம் பகுதியில் உள்ள ஒரு தனியார் இயற்கை எரிவாயு கம்பெனியில் ஊழியர்களாக வேலை பார்த்து வந்தனர். நேற்று இரவு இவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2.30 மணி அளவில் ஒரு மர்ம கும்பல் கையில் பயங்கர ஆயுதங்களுடன் கம்பெனிக்குள் புகுந்தது. அவர்கள் 3 ஊழியர்களையும் அரிவாள் போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் பலத்த காயம் … Read more

ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் குழு பெலாரஸ் சென்றடைந்தது

பெலாரஸ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும்.    ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்ப ஒப்புக்கொண்டிருப்பதாக … Read more

பிப்.12-ல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை விடுவித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு

இலங்கை: பிப்.12-ல் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் விடுவித்து கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆஜர்படுத்தப்பட்ட 12 தமிழக மீனவர்களை இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

மீட்பு பணியை ஒருங்கிணைக்க 4 அமைச்சர்கள் பயணம்?.. உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று மீண்டும் உயர்மட்ட ஆலோசனை

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி இன்று மீண்டும் உயர்மட்ட ஆலோசனை நடத்துகிறார். ரஷ்யா – உக்ரைன் எல்லையில் இன்று மூன்றாவது நாளாக போர் நடந்து வருகிறது. உக்ரைன் தரப்பில் 250க்கும் மேற்பட்டோரும், ரஷ்யா தரப்பில் 1,000க்கும் மேற்பட்ட வீரர்களும், பொதுமக்களும் பலியாகி உள்ளனர். நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருவதால், மக்கள் குடும்பம் குடும்பமாக தலைநகர் கீவில் இருந்து வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அண்டை நாடுகள் வழியாக வெளியேற்றும் … Read more

போஸ்டர் ஒட்டுவதில் தகராறு: திமுக கவுன்சிலர் மீது தாக்குதல்

பெரம்பலூரில் போஸ்டர் ஒட்டக்கூடாது என கூறிய திமுக கவுன்சிலரை, அதிமுக பிரமுகர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் நகராட்சி 5-வது வார்டில் கவுன்சிலராக திமுகவை சேர்ந்த சேகர் என்பவர் உள்ளார். இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பான போஸ்டரை அ.தி.மு.க. பிரமுகர் நாகராஜ் என்பவர், சேகர் வீட்டின் சுவற்றில் ஒட்டியுள்ளார். இதையடுத்து என் வீட்டின் சுவற்றில் அ.தி.மு.க. போஸ்டரை ஒட்டக்கூடாது என்று சேகர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ், தி.மு.க. கவுன்சிலர் சேகரை … Read more

'புர்கா'வில் மறைக்கப்பட்ட தங்கம்: விமான நிலையத்தில் சிக்கிய பெண் !

தெலுங்கானாவில் புர்காவில் தங்கத்தை தைத்து கடத்தி செல்ல முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தின் தெலுங்கானாவின் ஷாம்ஷாபாத் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் ரூ.18 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் எடைகொண்ட தங்கத்தை தனது உடையில் கட்டி கடத்த முயன்ற துபாயை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த தங்கத்தை கடத்துவதற்காக, சிறு சிறு பாசிகளாக அதை செய்து கொண்டு, பின் அதை ரோடியத்தின் (rhodium) மூலம் முலாம் பூசி தனது புர்காவில் தைத்து அதை அணிந்திருந்திருக்கிறார் அந்தப் … Read more

வலிமை – 3 நாட்களில் ரூ.100 கோடி வசூல்

அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்க வினோத் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் 'வலிமை'. கொரோனா மூன்றாவது அலைக்குப் பிறகு கடந்த இரண்டு மாதங்களாக தியேட்டர்களில் வெளிவந்த படங்கள் சுமாரான வசூலைக் கூடத் தரவில்லை. அஜித் நடித்த 'வலிமை' படம் வந்தால்தான் தியேட்டர்களுக்கு மீண்டும் மக்களை வரவழைக்க முடியும் என்ற எதிர்பார்ப்பில் தியேட்டர்காரர்கள் இருந்தனர். பொங்கலுக்கே வெளிவர வேண்டிய படம் கொரோனா பாதிப்பால் கடந்த வாரம் பிப்ரவரி 24ம் தேதி வெளியானது. படம் … Read more

இன்று ஐ.நா., பொதுசபை கூட்டம்| Dinamalar

நியூயார்க்: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் போர் நீடித்து வரும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா., பொதுசபை கூட்டம் கூடுகிறது. ரஷ்யா உக்ரைன் போர் தொடர்பாக ஆலோசனை நடத்த ஐக்கிய நாடுகள் பொதுசபை கூட்டம் இன்று நியூயார்க்கில் அவசர கூட்டமாக கூடுகிறது. 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஐ.நா., பொதுசபை கூட்டம் அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்கிறது. அவசர கூட்டத்திற்கு பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 11 நாடுகள் ஆதரவு அளித்த நிலையில் ரஷ்யா எதிர்த்து வந்தது. பாதுகாப்பு கவுன்சிலில் … Read more