பெரும் ஏமாற்றம்.. இறங்கிய வேகத்தில் ஏற்றம் கண்டு வரும் தங்கம் விலை.. இனி குறையுமா?

தங்கம் விலையானது கடந்த அமர்வில் உக்ரைன் – ரஷ்யா பதற்றத்தின் மத்தியில் மீண்டும் பலமான ஏற்றத்தினை கண்டு வருகின்றது. சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய கமாடிட்டி வர்த்தகத்திலும் தங்கம் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது. இதன் காரணமாக தங்க ஆபரண விலையும் உச்சம் தொட்டுள்ளது. இந்தளவுக்கு ஏற்றம் கண்டு வருகின்றதே? இனி குறையவே குறையாதா? இனி என்ன தான் நடக்கும்? நிபுணர்களின் கணிப்பு தான் என்ன? முக்கிய காரணிகள் என்ன வாருங்கள் பார்க்கலாம். இன்னும் போர் பதற்றமானது … Read more

உக்ரேனில் உள்ள 20 இலங்கையர்கள்

உக்ரேனில் உள்ள 20 இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக உக்ரேன் – போலந்து எல்லைக்கு அருகாமையில் வந்துள்ளனர். இவர்களை போலந்துக்கு அழைத்து வந்து இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கைமேற்கொண்டுள்ளதாக துருக்கியில் உள்ள இலங்கைத் தூதுவர் எம்.ஆர்.ஹசன் தெரிவித்துள்ளார்.இலங்கையர்கள் தொடர்பில் போலந்தில் உள்ள அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. உக்ரைனில் சிக்கியுள்ள இலங்கையர்கள் அனைவரையும் போலந்து ஊடாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைமுன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தூதுவர் எம்.ஆர். ஹசன் கூறினார்.

உக்ரைனிற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய 'Mriya' விமானத்தை வீழ்த்திய ரஷ்யா!

ரஷ்யா-உக்ரைன் போரால், இப்போது உலக அளவில், பெரும் பதற்றத்தையும்,மூன்றாம் உலக போர் மூளுமோ என்ற அச்சத்தையும் விதைத்துள்ளது. அதே நேரத்தில், பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுத்ததைத் தொடர்ந்து ரஷ்யா தனது தாக்குதல்களின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.   இந்நிலையில் இதுவரை உக்ரைனில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய விமானத்தை ரஷ்யா அழித்துள்ளதாக முக்கிய செய்தி வந்துள்ளது. இந்த விமானத்தின் பெயர் ‘மரியா’ என்றும், இந்த தகவலை உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைன் வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட  தகவல்  உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ … Read more

பிளாஸ்டிக் ஒழிப்பை சட்டப்பூர்வமாக்க இந்தியா எதிர்ப்பது, உலக நலனுக்கு எதிரானது – மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

 வலிமையான பிளாஸ்டிக் ஒழிப்பு ஒப்பந்தம் உருவாக இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று, பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பிளாஸ்டிக் மாசுபாடு ஒழிப்புக்கான பேச்சுகளை தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நிரல்களுடன் ஐநா சுற்றுச்சூழல் பேரவை (United Nations Environment Assembly) மாநாடு கென்யாவின் தலைநகர் நைரோபியில் இன்று தொடங்குகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்ற பிற நாடுகளின்  நிலைப்பாட்டுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது; … Read more

IND vs SL: ஷ்ரேயாஸுக்கு ஹாட்ரிக் அரைசதம்; உலக சாதனையுடன் தொடரை முடித்த இந்தியா!

மேற்கிந்திய தீவுகளை வைட் வாஷ் செய்த ஒரே வாரத்தில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும் முழுமையாக வென்றிருக்கிறது இந்திய அணி. நேற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம் அடித்து அசத்த எளிதாகப் போட்டியை வென்றது இந்தியா. இத்தொடரில் அவர் அடிக்கும் மூன்றாவது அரைசதம் இது. மூன்று போட்டிகளில் அவர் மொத்தமாக அடித்துள்ள மொத்த ரன்கள் 204 (ஸ்ட்ரைக் ரேட் – 174.35) Ind vs SL முதல் ஆட்டத்தில் பொறுமையாகத் தொடங்கி இறுதியில் அதிரடி காட்டிய ஷ்ரேயாஸ் அதற்கடுத்த … Read more

தூத்துக்குடியில் சொத்து தகராறு காரணமாக முதியவர்களை வீடு புகுந்து தாக்கிய 5 பேர்.! <!– தூத்துக்குடியில் சொத்து தகராறு காரணமாக முதியவர்களை வீடு ப… –>

தூத்துக்குடி மாவட்டம் முத்துகிருஷ்ணாபுரத்தில் சொத்து தகராறு காரணமாக முதியவர்களை வீடு புகுந்து தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. பொன்னம்மாள், ஜான் ரவீந்திரன் தம்பதிக்கும், பொன்னம்மாளின் தம்பி ஞான திரவியம் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஞான திரவியம் குடும்பத்தினர் 5 பேர் சேர்ந்து சொத்தை எழுதித் தருமாறு கேட்டு பொன்னம்மாள், ஜான் ரவீந்திரன் தம்பதியை வீடு புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் தம்பதி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் உரிய விசாரணை நடத்த … Read more

முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் முதல் பாகம்: சென்னையில் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார்

முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூலின் முதல் பாகத்தை சென்னையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிடுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ என்ற பெயரில் தனதுவாழ்க்கை வரலாற்று நூலை எழுதி வருகிறார். இதன் முதல் பாகம் இம்மாதஇறுதியில் வெளியிடப்படும் என்று சமீபத்தில் நடந்த சென்னை புத்தகக் காட்சி தொடக்க விழாவில் அறிவித்திருந்தார். இந்த நூலில் அவரின் 23 ஆண்டுகால வாழ்க்கை பயணத்தின் சுவடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இளமைக்காலம், பள்ளிப் படிப்பு, … Read more

டெல்லியில் இந்திய மாணவர்களை வரவேற்ற மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அங்கிருக்கும் இந்தியர்கள், இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசுசிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி விமானங்களில் இந்திய மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இந்நிலையில், ருமேனியால் இருந்து 250 இந்திய மாணவர்களுடன் 2-வது விமானம் நேற்றுஅதிகாலை டெல்லி வந்து சேர்ந்தது. அப்போது விமானத்துக்குள் சென்ற மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை வரவேற்றார். அப்போது அவர்களிடையே ஜோதிர் ஆதித்ய சிந்தியா … Read more

ஐ.நா. பொதுச்சபை அவசரக் கூட்டத்துக்கான வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா: மாணவர்கள் மீட்பே பிரதானம் என விளக்கம்

ஜெனீவா: ஐ.நா. பொதுச் சபை அவசக் கூட்டத்தைக் கூட்டும் நிமித்தமாக பாதுகாப்பு கவுன்சில் சார்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பங்கேற்பதிலிருந்து இந்தியா விலகிக் கொண்டது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பு நாடுகளில் 11 நாடுகள் வாக்களித்தன. ரஷ்யா உறுப்பு நாடாக இருந்தாலும் அதற்கு எதிரான தீர்மானம் என்பதால் எதிர்த்து வாக்களித்தது. இந்தியா, சீனா, யுஏஇ ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. 1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஐ.நா. பொதுச்சபை அவசரக் கூட்டத்துக்காக 11வது முறையாக வாக்கெடுப்பு நடந்துள்ளது. … Read more

திருப்பதி தரிசன டிக்கெட் விலை அதிரடி உயர்வு: உண்டியல் வருமானம் எவ்வளவு தெரியுமா?

திருப்பதியில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்து நாடு முழுவதும் இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் ஆர்ஜித சேவைகளில் பக்தர்களுக்கு அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தேவஸ்தான அறங்காவலர் குழு அண்மையில் அவசர ஆலோசனை நடத்தியது. அதில் தரிசன டிக்கெட்டின் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் டிக்கெட்டுகளின் விலை விவரத்தை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு சிபாரிசு கடிதங்கள் … Read more