கருணை அடிப்படையில் அரசுப்பணி! – லட்சக்கணக்கில் லஞ்சம்; சர்ச்சையில் புதுச்சேரி சுகாதாரத்துறை
புதுச்சேரியில் அரசின் துறைகளில் பணியின்போது உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசுப்பணிகள் வழங்கும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி சுகாதாரத்துறையில் பணிகளை வழங்குவதாகக் கூறி கோடிக்கணக்கில் பணத்தை வசூலித்து மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இது தொடர்பாக புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் கவுரவத்தலைவர் பாலமோகன், பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன், ஆலோசகர் கீதா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, “சுகாதாரத்துறையில் பணிக்காலத்தில் உயிரிழந்த சுகாதார ஊழியர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் பணி வழங்குவது வழக்கம். அதன்படி … Read more