மகா சிவராத்திரி: நாளை இரவு சிவாலயங்களில் 4 சாமத்திலும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை

சிவராத்திரியை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், அலங்காரங்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டு உள்ளார். அதனடிப்படையில் அனைத்து சிவாலயங்களிலும் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருவதாக அறநிலையத்துறை அறிவித்து உள்ளது. இந்த நிலையில் சிவராத்திரியன்று சிவாலயங்களில் நடத்தப்படும் வழிபாடுகள் குறித்து மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தலைமை அர்ச்சகர் ஜெயா குருக்கள் (எ) வெங்கட சுப்பிரமணியம் சிவாச்சாரியார் கூறியதாவது:- சிவாலயங்களில் … Read more

ருமேனியாவில் இருந்து 249 இந்தியர்களுடன் புறப்பட்ட 5-வது விமானம் டெல்லி வந்தடைந்தது

புதுடெல்லி: உக்ரைன்-ரஷியா போரினால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை அண்டை நாடுகள் உதவியுடன் மீட்கும் ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ்  மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  இந்தியர்கள் மீட்பு நடவடிக்கைக்காக ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரில் இருந்து ஐந்து விமானங்களும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இருந்து 2 விமானங்களும் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களின் பட்டியலை வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா வெளியிட்டுள்ளார்.   இதற்கிடையே, ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து 249 இந்தியர்களுடன் 5-வது சிறப்பு விமானம் … Read more

ரஷியாவுடனான போரில் 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிரிழப்பு – உக்ரைன் அரசு தகவல்

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் ஏராளமான ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்துள்ள ரஷிய படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றன. தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தற்போது உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.  ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் கடுமையாக சண்டையிட்டு … Read more

உக்ரைனுக்கு மேலும் 54 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கும் அமெரிக்கா!!

ரஷ்யாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு மேலும் 54 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குகிறது அமெரிக்கா. உக்ரைன் நலனை கருத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் நிதியுதவி அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

5வது விமானம் டெல்லி வருகை.. ருமேனியா, ஹங்கேரி எல்லைகளில் இருந்து உக்ரைனில் வசித்த 1,156 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்!!

கீவ் : ருமேனியா, ஹங்கேரி எல்லைகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 1000த்திற்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் கங்கா’ என ஒன்றிய அரசு பெயரிட்டுள்ளது. இதன் மூலம் நேற்று வரை உக்ரைனின் அண்டை நாடுகள் வழியாக 4 விமானங்கள் மூலம் இந்திய மாணவர்கள் நாடு திரும்பி உள்ளனர். ருமேனியாவின் புக்கரெஸ்டில் இருந்து புறப்பட்ட முதல் ஏர் இந்தியா விமானம் நேற்று முன்தினம் … Read more

'வாகன கடனை கட்டவில்லை' தனியார் வங்கி ஊழியர்கள் செய்த அராஜகம்

கறம்பக்குடி அருகே வாகன தவணை தொகையை கட்டவில்லை என தாய் மகன் மீது தனியார் வங்கி ஊழியர் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பெத்தாரிகுளம் பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவரின் மனைவி பராசக்தி. தர்பூசணி பழ வியாபாரம் செய்து வரும் பராசக்தி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் வங்கி மூலம் கடன் பெற்று டாட்டா ஏஸ் வாகனம் ஒன்றை வாங்கி அதன் மூலம் பழ வியாபாரம் செய்து … Read more

"இந்தியர்களின் பாதுகாப்பே முக்கியம்" – அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட பிரதமர் மோடி

உக்ரைனிலிருந்து இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். ரஷ்யாவின் தாக்குதலை தொடர்ந்து உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 2 மணிநேரம் நீடித்த இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம் என குறிப்பிட்ட பிரதமர் மோடி, அவர்களை தாயகத்திற்கு அழைத்துவர போதிய … Read more

இயக்குநர்கள் சங்கத் தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவராக ஆர்.கே. செல்வமணி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இயக்குநர் சங்கத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், ஆர்.கே. செல்வமணி 955 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாக்யராஜ் 566 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். இதன் மூலம், 389 வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்.கே. செல்வமணி மீண்டும் இயக்குநர்கள் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மணிப்பூர் சட்டசபைத் தேர்தல் முதல் கட்ட ஓட்டுப் பதிவு துவங்கியது| Dinamalar

இம்பால்: மணிப்பூர் சட்டசபைத் தேர்தல் முதல் கட்ட ஓட்டுப் பதிவு இன்று (பிப்;28) காலை 7 மணிக்கு துவல்கியது மணிப்பூர் மாநிலத்தில் முதல் கட்டமாக 38 சட்டசபை தொகுதிகளில் ஓட்டுப் பதிவு துவங்கி உள்ளது. இந் நிலையில் பயங்கரவாதிகள் நேற்று நடத்திய வெடிகுண்டு தாக்குதல்களில் 2 பேர் பலியாகி உள்ளது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 60 சட்டசபை தொகுதிகளைக் கொண்டது மணிப்பூர். இங்கு இன்றும் , மார்ச் 5-ந் தேதியும் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற … Read more