இலங்கையில் ரயில் சேவைகள் முழுமையாக ஸ்தம்பிக்கும் அபாயம்

ரயில்வே திணைக்களத்திடம், அடுத்து வரும் ஐந்து நாட்களுக்கு மட்டுமே எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். ரயில்வே திணைக்களத்தினால் 10 நாட்களுக்கு எரிபொருளை சேமித்து வைக்க முடியும் என்ற போதிலும், தற்போது சுமார் 50 வீதத்தினால் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். திணைக்களத்தின் எரிபொருள் கையிருப்பு குறைந்துள்ள போதிலும், ரயில் சேவைக்கு அது தடையாக இருக்காதென தான் நினைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாளொன்றுக்கு சுமார் 100,000 லீற்றர் எரிபொருள் பயன்பாட்டில் ரயில்கள் இயங்குவதாகவும், … Read more

உக்ரைனை தாக்க அலைஅலையாய் செல்லும் ரஷ்ய போர் துருப்புகள்.. செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியீடு.! <!– உக்ரைனை தாக்க அலைஅலையாய் செல்லும் ரஷ்ய போர் துருப்புகள்….. –>

உக்ரைன் மீது ரஷ்ய போர் துருப்புகள் அலைஅலையாக தாக்கும் வகையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணி வகுத்து செல்லும் செயற்கை கோள் படம் வெளியாகி உள்ளது. Kyiv நகரில் இருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் டாங்கிகள் உள்ளிட்ட இந்த படைகளின் அணிவகுப்பு நீண்ட வரிசையுடன் காணப்படுவதாக இதனை வெளியிட்ட அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனம் கூறியுள்ளது.  நூற்றுக்கும் மேற்பட்ட ரஷ்ய ராணுவ வாகனங்கள் 5கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்டு காணப்படுவதாக செயற்கை கோள் புகைப்படங்கள் மூலம் … Read more

மருத்துவமனை ஐ.சி.யு. வார்டில் துப்பாக்கிச் சூடு… இளைஞர் காயம் <!– மருத்துவமனை ஐ.சி.யு. வார்டில் துப்பாக்கிச் சூடு… இளைஞர்… –>

அரியானா மாநிலம் அம்பாலாவில் ஐசியு வார்டில் இளைஞரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு மருத்துவமனையின் கதவை உடைத்து தப்பியோடிய மற்றொரு இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர். ஐசியு வார்டில் இளைஞர்கள் இருவர் சண்டையிட்டுக் கொண்டதாகவும், அதில் பண்டி என்பவன், துப்பாக்கியால் அமன் என்பவனை சுட்டதாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையின் கதவை உடைத்து பண்டி தப்பியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த அமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து அறிந்து வந்த போலீசார் தப்பியோடிய இளைஞனை சிசிடிவி காட்சி மூலம் தேடி வருகின்றனர்.   … Read more

உக்ரைனில் ஆயுதம் ஏந்த பிரித்தானியர்களுக்கு அனுமதி!

புடினுக்கு எதிராக உக்ரைனில் போரில் கலந்துகொள்ள பிரித்தானியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உக்ரைன் சென்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக போரில் கலந்துகொள்ள பிரித்தானியர்களுக்கு நேற்று இரவு அனுமதி வழங்கப்பட்டது. போராட்டத்தில் சேர விரும்பும் தன்னார்வத் தொண்டர்களிடம் பிரித்தானிய வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் (Liz Truss) கூறியதாவது: “மக்கள் அந்தப் போராட்டத்தை ஆதரிக்க விரும்பினால், அதைச் செய்வதற்கு நான் அவர்களுக்கு ஆதரவளிப்பேன்” என்று கூறியுள்ளார். உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ள லிஸ் … Read more

பெலாரஸில் ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தை  நடத்த உக்ரைன் ஒப்புதல்?

கீவ் பெலாரஸில் ரஷ்யாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைன் நாட்டுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 4 மாதங்களாக அமைதியின்மை நிலவி வந்தது.   உக்ரைன் எல்லையில் ரஷ்யப்படைகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.  இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் உக்ரைனில் கடும் சேதம் ஏற்பட்டு வருகிறது.  ரஷ்யாவின் விமானப்படை தாக்குதலால் உக்ரைனில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் அழிக்கப்பட்டன  இதனால் அங்குள்ள வெளிநாட்டவர் நாட்டை விட்டு வெளியேற … Read more

உக்ரைன் விவகாரம்: உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.  அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. சனிக்கிழமை முதல் 900 க்கும் மேற்பட்டோர் மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர். உக்ரைன்- ரஷிய போர் 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் உள்ள கீவ், கார்கிவ், சுமி நகரங்களில் உள்ள இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும், இந்த சூழலில் வெளியே செல்வது … Read more

மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் கட்ட தேர்தல்

லம்பேல்பட்: ஐந்து மாநில தேர்தலில் 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.  இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அடுத்த கட்ட வாக்குப் பதிவு மார்ச் 5-ந் தேதி நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. . 15 பெண்கள் உள்பட மொத்தம் 173 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். … Read more

ரஷிய ராணுவத்தை எதிர்க்க தேவைப்பட்டால் துப்பாக்கியை எடுப்பேன் – உக்ரைன் பெண் எம்.பி. அதிரடி

கீவ்,  ரஷியா-உக்ரைன் போரினால் இரு நாடுகளுக்கும் பெருமளவில் உயிரிழப்பும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது.   இந்நிலையில், ரஷியாவிற்கு எதிராக போரிட ராணுவ சேவைக்கு தகுதியாக உள்ள  நபர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முழு ராணுவத்தை திரட்டும் பணிகளை முடிக்க வேண்டும் என உக்ரைன் ராணுவ அதிகாரிகளுக்கு அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டிருந்தார்.  அதிபரின் அழைப்பை ஏற்று உக்ரைன் டென்னிஸ் வீரர் செர்கி ஸ்டாகோவ்ஸ்கி ரஷ்யாவுக்கு எதிராக போரிட தனது நாட்டு ராணுவத்தில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக ரஷிய ராணுவத்தை … Read more

பிப்-28: பெட்ரோல் விலை ரூ. 101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கிரிப்டோகரன்சி, உக்ரைன் பற்றி பதிவு பாஜ தலைவர் நட்டாவின் டிவிட்டர் கணக்கு ஹேக்

புதுடெல்லி: பாஜ தலைவர் ஜே.பி.நட்டாவின் டிவிட்டர் கணக்கு விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் சமீப காலமாக முக்கிய அரசுத் துறைகள், தலைவர்களின் டிவிட்டர், பேஸ்புக் கணக்குகள், விஷமிகளால் அடிக்கடி ஹேக் செய்யப்படுகிறது. கடந்தாண்டு டிசம்பரில் பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அதில் பிட்காயின் பற்றிய பதிவு வெளியிடப்பட்டது. இந்நிலையில், பாஜ தலைவர் ஜே.பி.நட்டாவின் டிவிட்டர் கணக்கை விஷமிகள் நேற்று ஹேக் செய்தனர். அதில், உக்ரைனுக்கு நிதி உதவி அளிப்பதாகவும், ரஷ்யாவுக்கு உதவிகள் செய்யும்படி வேண்டுகோள் … Read more