Month: February 2022
காங்கிரசாருக்கு பாதயாத்திரை புதிதல்ல.| Dinamalar
காங்கிரசாருக்கு பாதயாத்திரை புதிதல்ல. முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் இடையிலான பனிப்போர் நடக்கிறது. இவர்களுக்கிடையே, குமாரசாமி சிக்கிக்கொண்டுள்ளார். ஆட்சியில் இருந்த போது, எதையும் செய்யாத காங்கிரசாரை, பச்சாதாபம் வாட்டி வதைக்கிறது. இந்த பாவத்துக்கு பரிகாரம் தேட, பாதயாத்திரை நடத்துகின்றனர். சித்தராமையா, சிவகுமார் மோதலை மக்கள் பார்க்கின்றனர். அவர்களுக்குள் நாங்கள் சண்டை மூட்ட வேண்டிய அவசியமே இல்லை.கோவிந்த் கார்ஜோள், அமைச்சர், நீர்ப்பாசனத்துறை காங்கிரசாருக்கு பாதயாத்திரை புதிதல்ல. முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் … Read more
மைசூர் அரண்மனையில் வடிவேலு
மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு நடிக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' நகைச்சுவை திரைப்படத்தை சுராஜ் இயக்குகிறார் . லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார் . இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் ஷிவாணி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மைசூர் அரண்மனையில் நடைபெற்று வருகிறது. பாடல் காட்சி ஒன்று உருவாகி வருவதாகவும் அதற்கான நடன பயிற்சிகளை பிரபுதேவா மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் … Read more
அணு ஆயுதப் போருக்கு தயாராகும் புடின்?| Dinamalar
மாஸ்கோ-உக்ரைனுக்கு எதிரான போர் குறித்து, பல ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அணு ஆயுதப் படைப் பிரிவை தயாராக இருக்கும்படி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார். பொருளாதார தடை ரஷ்யா மீதும், புடின் மீதும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து உள்ளன.மேலும், ரஷ்யாவுக்கு ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. ஆலோசனைஇந்த கடும் விமர்சனங்கள் ரஷ்யாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ரஷ்ய ராணுவ … Read more
உக்ரைனில் உச்சகட்ட போர்: இந்தியர்களை மீட்பது தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை…!!
புதுடெல்லி, ரஷியா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷியா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷியா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இந்த சூழலில் உக்ரைன் மீதான போர் தொடர்ந்து … Read more
“ஆபரேஷன் கங்கா”: உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்காக விமானங்களின் பட்டியல்..!
புதுடெல்லி, உக்ரைனில் இருந்து அண்டை நாடுகள் வழியாக இந்தியர்களை வெளியேற்றுவதற்காக ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் விமானங்களின் பட்டியலை வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “உக்ரைனில் சிக்கித் தவிக்கும் எங்கள் குடிமக்களை வெளியேற்றுவதற்காக இந்திய அரசு ‘பல்முனை’ ஆபரேஷன் கங்காவைத் தொடங்கியுள்ளது. இந்த வெளியேற்ற செயல்முறை அரசாங்க செலவில் இருக்கும். உக்ரைனில் உள்ள வான்வெளி மூடப்பட்டதால், ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ருமேனியாவில் இருந்து வெளியேற்றுவதற்கான விருப்பங்களை நாங்கள் … Read more
உக்ரைன் மீது படையெடுப்பு: பின்லாந்து, ஸ்வீடன் நேட்டோ உறுப்பினராவதை ரஷ்யா எதிர்ப்பது என்?
உக்ரைன்-ரஷ்யா நெருக்கடியில், நோர்டிக் ஐரோப்பாவில் நடந்துகொண்டிருக்கும் முன்னேற்றங்கள், படையெடுப்புடன் தொடர்புடையதாகவும் அதற்கு பதிலளிக்கும் விதமாகவும், பிராந்தியத்தில் மேலும் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும். ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, ஸ்வீடனும் பின்லாந்தும் நேட்டோவில் உறுப்பினர்களாக இருந்திருந்தால், இந்த நடவடிக்கை தீவிரமான ராணுவ மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் என்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். உக்ரைனின் நிலைமை தொடர்பாக காணொலி வழியாக நடைபெற்ற உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு … Read more
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்! டிராவில் முடிந்தது தமிழகம் சத்தீஷ்கர் இடையிலான ஆட்டம்.!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழகம், சத்தீஷ்கர் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. 38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. எலைட், ‘ஹெச்’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி தனது இரண்டாவது போட்டியில் சத்தீஷ்கர் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபா அபரரஜித் 166 ரன்களும், பாபா இந்திரஜித் 127 ரன்களும் எடுத்தனர். ஷாருக்கான் … Read more
விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.! <!– விருதுநகரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந… –>
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்தார். மண்குண்டாம்பட்டியில் சண்முகையா என்பவருக்கு சொந்தமான ஆர்.எஸ்.ஆர் பட்டாசு தொழிற்சாலையில் சனிக்கிழமை வழக்கம் போல ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. அதில் படுகாயமடைந்த ஆலமரத்துப் பட்டியைச் சேர்ந்த 36 வயதான ராஜா, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், … Read more
சமூக நீதிப் பயணத்தின் முதற்கட்ட முயற்சிதான் சமூக நீதிக் கூட்டமைப்பு: திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்
சென்னை: சமூகநீதிப் பயணத்தில் தமிழகத்தைக் கடந்து, இந்திய ஒன்றியம் முழுவதும் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதற்கான முதற்கட்ட முயற்சிதான் அனைத்து இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு என்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத் தமிழக மக்கள் இமாலய வெற்றியை , மகத்தான தீர்ப்பினை மனப்பூர்வமாக அளித்து நல்லாட்சிக்கு நற்சான்றிதழ் … Read more