மணிப்பூர் மாநில வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது பாஜக: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அடுத்த 25 ஆண்டுகளுக்கான சிறப்பான அடித்தளத்தை பாஜக அமைத்துக் கொடுத்துள்ளது என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மணிப்பூர் சட்டப்பேரவைக்கு வரும் 28 மற்றும் மார்ச் 5-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இதை முன்னிட்டு தலைநகர் இம்பாலில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மணிப்பூர் மாநிலம் … Read more

'நான் தான் ரஷ்யாவின் நம்பர் 1 டார்கெட்; 2-வது இலக்கு என் குடும்பம்' – உக்ரைன் அதிபர்

கீவ்: ‘நான் தான் ரஷ்யாவின் நம்பர் 1 டார்கெட்; 2-வது இலக்கு என் குடும்பம்’ என்று கூறியுள்ளார் உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி. போர் முற்றியுள்ள சூழலில், ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ அவரது ஃபேஸ்புக் பக்கத்திலிருந்து அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர், “உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. 2-வது நாளாக தாக்குதல் நடக்கும் சூழலில் உலக நாடுகள் அனைத்தும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. நாங்கள் தனித்து போராடிக் கொண்டிருக்கிறோம். உலக நாடுகள் எங்களுக்கு … Read more

ஒத்துழைப்பு தராவிடின் சர்வதேச விண்வெளி நிலையம் பூமியில் விழும்! இந்தியா – சீனாவுக்கு ரஷ்யா மறைமுக மிரட்டல்

500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீனா மீது விழுந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று ரஷ்யா மிரட்டல் விடுத்துள்ளது.   உக்ரைன் மீது ரஷ்யா இன்று நான்காவது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனில் நடத்தி வரும் பயங்கர தாக்குதலால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால், ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு நாடுகளும் தாக்குதலை நிறுத்தும்படி குரல் கொடுத்து வருகின்றன. இன்னும், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா  மீது பொருளாதார தடைகளை விதித்து … Read more

பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் <!– பெலாரசில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு ஒப்புக்கொண்டு… –>

பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக ரஷ்ய அரசின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைனை தாக்க பெலாரஸ் நாட்டை ரஷ்யா பயன்படுத்துவதால் அங்கு பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்றும், அதற்கு பதில் வேறொரு இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினால் அதில் பங்கேற்க தயார் என்றும் அதிபர் செலன்ஸ்கி அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோவுடன் உக்ரைன் அதிபர் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்தே பேச்சுவார்த்தைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும், பெலாரசின் கோமல் நகருக்கு … Read more

இந்தியர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது – பிரதமர் <!– இந்தியர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகி… –>

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு அனைத்து வித நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தின் பஸ்தி பகுதியில் நடைபெற்ற பாஜகவின் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர், ஆபரேசன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கித் தவித்த ஏராளமான இந்தியர்கள் மீட்கப்படுவதாக கூறினார். மேலும், இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு இரவு, பகல் பாராமல் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், தற்போது நிலவும் இடையூறுகளையும், சிக்கல்களையும் கடந்து அவர்கள் பத்திரமாக … Read more

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க மறுப்பு தெரிவித்த ஐரோப்பிய நாடு

உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க ஹங்கேரி மறுப்பு தெரிவித்துள்ளது. ஹங்கேரி ஆயுதங்கள் அனைத்தும் உள்நாட்டில் தேவைப்படுவதால் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்பாது என்று ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார். “ஹங்கேரிய ஆயுதப் படைகளுக்கு நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்க அவர்களின் அனைத்து ஆயுதங்களும் தேவைப்படுவதால், ஹங்கேரி தனது நிலையை மாற்றிக்கொள்ளாது. எனவே, இத்தாலி மற்றும் ஜேர்மனியைப் போலல்லாமல், நாங்கள் உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப மாட்டோம்” என்று பிரதமர் விக்டர் ஓர்பன் M1 ஒளிபரப்பு நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார். அதே … Read more

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் புதிய பொலிவு பெறுகிறது

2011 உலக கோப்பை போட்டியின் போது முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம். ஓவல் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தை பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்ட இந்த மைதானத்தில் இருந்த மெட்ராஸ் கிரிக்கெட் அகாடமி கட்டிடம் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டு அதனை இடிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர், ஐ, ஜெ, கே ஆகிய காலரிகள் முறையான அனுமதி இன்றி கட்டப்பட்டதாக கூறி பார்வையாளர்களை அனுமதிக்க அரசு தடை விதித்தது. இதனால் பல சர்வதேச போட்டிகளை நடத்தும் வாய்ப்பை சென்னை இழந்தது. … Read more

உக்ரைன்-ரஷியா பேச்சு வார்த்தையை வரவேற்கிறோம்: ஐ.நா. பாதுகாப்பு சபை சிறப்பு கூட்டத்தில் இந்தியா தகவல்

நியூயார்க் : ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பாதுகாப்பு சபையின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.   இந்த சிறப்பு கூட்டத்தில் இந்திய தரப்பில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது: பெலாரஸ் எல்லையில் பேச்சு வார்த்தை நடத்த இரு தரப்பினரும்(ரஷியா-உக்ரைன்) அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். போரினால் ஏற்படும் வன்முறையை உடனடியாக நிறுத்துவதுடன், அனைத்துப் பகைமைகளுக்கும் இரு நாடுகளும் முடிவு கட்ட வேண்டும் என்ற எங்களின் அழைப்பை மீண்டும் வலியுறுத்துகிறோம்.  ரஷியா … Read more

திருப்பதியில் இலவச தரிசனத்தில் பக்தர்களை உடனடியாக அனுமதிக்க வேண்டும்- பொதுமக்கள் வலியுறுத்தல்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆன்லைனில் மட்டுமே தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 16-ந்தேதி முதல் நேரடி இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இலவச தரிசன டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் 4 நாட்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே இலவச தரிசன … Read more

ரஷிய போர் விமானங்களை சுட்டு வீழ்த்த உக்ரைனுக்கு ஏவுகணைகள் – அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: ரஷியாவுடனான போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு பல்வேறு நாடுகளும் ஆயுத உதவி மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.  உக்ரைனுக்கு ஆயுதங்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படும் என்று ஜெர்மனி நேற்று அறிவித்திருந்தது.இந்நிலையில் முதன்முறையாக உக்ரைனுக்கு ஆயுதங்களை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.  உக்ரைனுக்கு உதவும் வெள்ளை மாளிகையால் அங்கீகரிக்கப்பட்ட தொகுப்பின் ஒரு பகுதியாக போர் விமானங்களை எதிர்கொள்ளும் அதிவேக ஏவுகணைகளை நேரடியாக வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அந்த ஆயுதங்களை உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகள் … Read more