கொரோனா பாதிப்பு 10 ஆயிரமாக சரிவு: கேரளாவில் தொடர்ந்து அதிக பலி

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் வீசிய கொரோனா 3வது அலையின்போது, தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தையும் தாண்டியது. தற்போது, இந்த எண்ணிக்கை நாள்தோறும் மளமளவென சரிந்து வருகிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:* கடந்த 24 மணி … Read more

பாதயாத்திரை சென்றால் சிவகுமார் முதல்வரா? சிவகுமாருக்கு மத்திய அமைச்சர் கேள்வி| Dinamalar

பெங்களூரு : ”பாதயாத்திரை நடத்துவதால் முதல்வராகி விடுவோம் என, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் நினைக்கிறார்,” என மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.பெங்களூரில் அவர் நேற்று கூறியதாவது:காங்கிரசாருக்கு தர்ணா, பாதயாத்திரை, சத்யா கிரகம் நடத்தும் சக்தியை, கடவுள் அளிக்கட்டும். வரும் நாட்களிலும், எதிர்க்கட்சி இடத்தில் அமரட்டும். மேகதாது மட்டுமின்றி, மகதாயி திட்டத்துக்காகவும், போராட்டம் நடத்த காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர். பாத யாத்திரை நடத்தி, சித்தராமையா முதல்வரானார். அதே போன்று நடத்தினால், தானும் முதல்வராவோம் என்பது, சிவகுமாரின் எண்ணம். … Read more

என் 'மார்க்கெட்' உயர்கிறது : நடிகர் ஜெய்

'சுப்பிரமணியபுரம்' படத்தில் லோக்கல் காதல் மன்னனாக வந்து 'கண்கள் இரண்டால்' என பாட்டு பாடி அசத்தி, சாக்லேட் பாயாக காதல் காட்சிகளில் கலக்கி… நடிப்பு மட்டுமல்ல இசையும் நான் தான்… என இசையமைப்பாளராகவும் வளர்ந்து வரும் நடிகர் ஜெய் மனம் திறக்கிறார்… * உங்க நடிப்பில் வெளிவரக்கூடிய படங்கள் பற்றி சுசீந்திரன் இயக்கத்தில் 'குற்றம் குற்றமே', வெங்கட்பிரபு இயக்கத்தில் 'பார்ட்டி', கோபி நயினார் இயக்கத்தில் 'கருப்பன் நகரம்', பத்ரி இயக்கத்தில் 'பட்டாம்பூச்சி' சுந்தர் சி இயக்கத்தில் ஒரு … Read more

போர்க்களத்தில் நடமாடும் தகன மேடை; உயிரிழப்பை மறைக்கிறதா ரஷ்யா?| Dinamalar

லண்டன்-உக்ரைன் மீதான போரில், ரஷ்ய தரப்பு வீரர்களின் உயிரிழப்பை மறைப்பதற்காக, நடமாடும் தகன மேடையை ரஷ்யா பயன்படுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர், நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் கீவ்வை கைப்பற்ற, உச்சகட்ட போர் நடந்து வருகிறது. ‘வீடியோ’போர் துவங்கியது முதல், உக்ரைனில் மூன்று குழந்தைகள் உட்பட, 198 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக, அந்நாட்டு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ரஷ்யா தரப்பில் உயிரிழந்த வீரர்களின் … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் குறித்து அறிய புதிய டுவிட்டர் பக்கம் உருவாக்கம்!

புதுடெல்லி, உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்டு வரும் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் ஒரு பகுதியாக  புதிதாக டுவிட்டர் பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அந்த டுவிட்டர் பக்கத்தில்,  உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் விமான சேவை மற்றும் இந்தியர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த புதிய டுவிட்டர் பக்கத்திற்கு  ‘ஓப்கங்கா ஹெல்ப்லைன்’  என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் அரிந்தாம் பாக்சி தெரிவித்தார்.  … Read more

தேசிய அளவிலான கார்பந்தயம்: சென்னை வீரர் முதலிடம்

கோவை, கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடு வேயில் தேசிய அளவிலான கார்பந்தயம் 2 நாட்களாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, அசாம், டெல்லி, கர்நாடகா, மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 40 வீரர்கள் கலந்து கொண்டனர். நேற்று முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றது. இதையடுத்து இன்று 2-ம் சுற்று போட்டிகள் நடந்தன. போட்டியில் பங்கேற்ற வீரர்கள் மின்னல் வேகத்தில் கார்களை இயக்கி பார்வையாளர்களை கவர்ந்தனர். இன்று நடைபெற்ற எல்.பி.ஜி. … Read more

மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் – உக்ரைன் எம்.பி.

கீவ்,  உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் தாக்குதல் கடந்த பிப் 24 ஆம் தேதி அதிகாலை அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில் போர் 4வது நாளாக நடந்து கொண்டிருக்கிறது.  உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலைநகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. ஆனால் உக்ரைன் ராணுவ வீரர்கள் தலைநகரை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதிகொண்டு அங்கு சண்டை செய்து வருகின்றனர். இதேபோல் மற்றொரு … Read more

தேசிய பங்குச் சந்தையின் ரகசிய தகவல்களை பகிர்ந்த யோகி யார்? காட்டிக்கொடுத்த ஜியோடேக் புகைப்படம்

தேசியப் பங்குச்சந்தையின் (என்.எஸ்.இ) ரகசிய தகவல்களை பகிர்ந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட, என்.எஸ்.இ முன்னாள் இயக்குநர் சித்ரா ராமகிருஷ்ணாவின் ஆலோசகர் ஆனந்த் சுப்பிரமணியத்தை மார்ச் 6ம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. தேசிய பங்குச் சந்தையின் (என்.எஸ்.இ) முன்னாள் குழு செயல் அதிகாரியான ஆனந்த் சுப்ரமணியனின் சென்னை இல்லத்திலிருந்து வெறும் 13 மீட்டர் தொலைவில் உள்ள ஜியோடேக் செய்யப்பட்ட படங்கள், ஹிமாலயன் யோகி ஹோட்டல் முன்பதிவு செய்ததற்கு சுப்பிரமணியன் … Read more

வீடு புகுந்து பள்ளி மாணவியை கொலை செய்த நாடக காதலன்?! வேலூர் அருகே பெரும் பரபரப்பு.!

வீடு புகுந்து பள்ளி மாணவியை கழுத்தை நெரித்து கொலை செய்த நாடக காதலன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வேலூர் நகர பகுதியை சேர்ந்தவர் பாரதிதாசன். இவரும் இவரின் மனைவியும் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் பணியாற்றி வருகின்றனர். இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிறுவயதிலேயே இழந்த நிலையில், 16 வயதான மற்றொரு மகள் அதே பகுதியில் … Read more