பிரதமர் மோடி நாட்டின் கவனத்தை திசை திருப்புகிறார்- ராகுல் காந்தி விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் கவனத்தை திசை திருப்புவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதாரம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே பிரதமர் மோடி முயற்சிக்கிறார் என்று ராகுல் காந்தி விமர்சித்து உள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- நம் நாட்டிற்கு நடவடிக்கை தேவை. பிரதமர் மோடி கவனச்சிதறலை மட்டுமே வழங்குகிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். … Read more

ருமேனியாவில் இருந்து 249 இந்தியர்களுடன் 5-வது விமானம் டெல்லி புறப்பட்டது

புகாரெஸ்ட்: உக்ரைன்-ரஷியா போரினால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை அண்டை நாடுகள் உதவியுடன் மீட்கும் ஆபரேசன் கங்கா திட்டத்தின் கீழ்  மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  இந்தியர்கள் மீட்பு நடவடிக்கைகாக ருமேனியாவின் புகாரெஸ்ட் நகரில் இருந்து ஐந்து விமானங்களும், ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இருந்து 2 விமானங்களும் இயக்கப்படுகின்றன. இந்த விமானங்களின் பட்டியலை வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா வெளியிட்டுள்ளார். ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு தூதர்களையும் தனித்தனியாக அழைத்து, இந்திய குடிமக்களின் பாதுகாப்பு குறித்த தமது … Read more

செல்போன் சேவையில் குறைபாடு ஏற்பட்டால் நுகர்வோர் நீதிமன்றத்தை நேரடியாக அணுகலாம்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: குஜராத் மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்தவர் அஜய் குமார் அகர்வால். கடந்த 2014ம் ஆண்டு தனியார் செல்போன் நிறுவனத்துக்கு எதிராக மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். அதில், ‘போஸ்ட் பெய்ட்’ முறையில் செல்போன் சேவையை பயன்படுத்தி வந்தேன். 2013ம் ஆண்டு நவ.8ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரையிலான கட்டணம்  ரூ.24,609.51 செலுத்தும்படி கூறினார்கள். எனக்கு சராசரியாக மாதந்தோறும் ரூ.555 கட்டணம் மட்டுமே  வந்தது. ஆனால், திடீரென அதிக கட்டணம் கேட்டது அதிர்ச்சியை  எனக்கு … Read more

உக்ரைன்-ரஷ்யா விவகாரம்; பிரதமர் தலைமையில் அவசர ஆலோசனை| Dinamalar

புதுடில்லி-உக்ரைன் – ரஷ்யா விவகாரம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு நடந்தது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனில், ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல்களை நடத்தி வருவது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, உக்ரைன் – ரஷ்யா இடையில் பேச்சு நடத்தப்பட வேண்டும் என, இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, போர் நடக்கும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வரும் பணிகளில் மத்திய அரசு … Read more

கையால் வரையப்பட்ட சேலையில் தங்கச்சிலையாக சமந்தா

சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக உள்ளவர் சமந்தா. அவ்வப்போது தான் அணியும் புதுவகையான உடைகளையும் ஆபரணங்களையும் உடனுக்குடன் ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் கவனத்துக்கு கொண்டுவந்து விடுவார். அந்தவகையில் தற்போது பேஸ்டல் பச்சை நிறத்தில் தங்க நிற சரிகை வேயப்பட்ட சேலை ஒன்றை அணிந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார் சமந்தா. இந்த சேலையின் சிறப்பம்சமே இதில் இடம்பெற்றுள்ள டிசைன்கள் அனைத்தும் கையால் பெயிண்டிங் செய்யப்பட்டவை என்பதுதான்.. அவர் அணிந்துள்ள ஜாக்கெட்டும் கூட இதே விதமாக உருவாக்கப்பட்டது தான். இந்த … Read more

ரஷ்ய ராணுவ வீரர்களின் உடல்களை அந்நாட்டுக்கு அனுப்ப உக்ரைன் தூதர் வலியுறுத்தல்| Dinamalar

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடந்து வருவதால், இருநாட்டு ராணுவத்திலும் உயிரிழப்பு கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், உக்ரைனில் உயிரிழந்த ரஷ்ய ராணுவ வீரர்களின் உடல்களை அந்நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு, சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திடம், ஐ.நா.,வுக்கான உக்ரைன் துாதர் செர்ஜி கிஸ்லிட்ஸ்யா அறிவுறுத்தி உள்ளார். 4,300க்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருப்பதாக, உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு விமானம் தகர்ப்புஉலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான, ‘ஆன்டோனோவ் ஏ.என்., 225’ விமானம், உக்ரைன் நாட்டை சேர்ந்தது. இந்நிலையில் தலைநகர் … Read more

உக்ரைன் எல்லையில் உள்ள இந்தியர்களுக்கு உதவ மத்திய மந்திரி ஜெய்சங்கர் கோரிக்கை..!

புதுடெல்லி,  ரஷ்யா – உக்ரைன் இடையே 4வது நாளாக போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அதன்படி, ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் ருமேனியாவில் இருந்து விமானம் மூலம் இந்தியர்களை மீட்டு வருகின்றனர்.  அந்த வகையில், ஹங்கேரியின் புடாபெஸ்டில் இருந்து 240 இந்தியர்கள் மூன்றாவது விமானத்தில் இன்று காலை மும்பை வந்தனர். ருமேனியாவில் இருந்து நேற்று வந்த 2 விமானங்களில் மொத்தம் 469 இந்தியர்கள் மீட்கப்பட்டனர். … Read more

இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டி; இந்தியா வெற்றி பெற 147 ரன்கள் இலக்கு!

தரம்சாலா, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.  இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாச ஸ்தலமான தரம்சாலாவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 7 மணிக்கு தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை … Read more

ரஷியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம்! – உக்ரைன் அதிபர் விளக்கம்

கீவ், உக்ரைன் மீது 4-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் ரஷியா, உக்ரைனுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்துள்ளது.  பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் தங்கள் நாட்டின் பிரதிநிதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.  பெலாரசில் வைத்து நடைபெற உள்ள ரஷியாவுடனான பேச்சுவார்த்தைக்கு முதலில் மறுப்பு தெரிவித்த உக்ரைன் அரசு, இப்போது பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டுள்ளதாக ரஷிய ஊடகங்கள் தெரிவித்தன. ஆனால், … Read more