ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளியிடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என அறிவிப்பு <!– ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளியிடங்களில் முகக்கவசம் அணியத் … –>

ஐக்கிர அரபு அமீரகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில், அங்கு வெளியிடங்களில் முகக் கவசம் அணியத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ள நிலையில், முழுமையாக தடுப்பூசி செலுத்தி நாட்டிற்குள் வருவோருக்கு கொரோனா பரிசோதனை சான்று அவசியமில்லை என அந்நாட்டின் அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல், பொருளாதாரம் மற்றும் சுற்றுலா சார்ந்த இடங்களில் தனி மனித இடைவெளி கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிட்ட அந்த ஆணையம், உள்ளரங்கு … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி "சவாலாக இருப்பினும் மத்திய அரசு துரிதமாக செயல்படுகிறது" – அமைச்சர் எல்.முருகன் <!– உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணி &quot;சவாலாக இ… –>

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுக்கொண்டு வருவது சவால் நிறைந்த பணி என்றாலும், மத்திய வெளியுறவுத்துறை அங்குள்ள 20 ஆயிரம் மேற்பட்ட இந்தியர்களை மீட்டுக் கொண்டுவர துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறினார். சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு தொடர்பான புகைப்படக் காட்சியை திறந்துவைத்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார்.  Source link

ரஷ்யா மீது புதிய தடை அமுல்படுத்திய ஜேர்மனி!

ஜேர்மன் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் மத்திய போக்குவரத்து மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சக அறிவிப்பின்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணி முதல் (1400 UTC) ரஷ்ய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல நாடுகள் ரஷ்ய விமானங்களுக்கு தங்கள் வான்வெளியில் பறக்க தடை விதித்ததை அடுத்து, ஜேர்மன் பொறுப்பு அமைச்சர் வோல்கர் விஸ்சிங் (Volker Wissing) இந்த முடிவை எடுத்தார். தொடர்ந்து மூன்று நாட்களாக ரஷ்ய படைகள் உக்ரைன் தலைநகர் வரை … Read more

தமிழகத்தில் இன்று 439 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  27/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,49,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 60,304 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 6,43,42,340 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இன்று 439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 34,49,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 38,003 பேர் உயிர் இழந்துள்ளனர். இன்று 1,209 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 34,04,611 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி … Read more

மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

டாமோ: மத்திய பிரதேச மாநிலம், டாமோ மாவட்டம், பார்கேரா பெஸ் கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மேந்திரா ஆத்யா. இவர் தனது நிலத்தில்  உள்ள ஆழ்துளை கிணற்றில் (30 அடி) தண்ணீர் இல்லாததால் அதை பயன்படுத்தாமல் வைத்திருந்தார். அதேசமயம், அது மூடப்படாமல் திறந்தே கிடந்துள்ளது. இன்று பிற்பகல் அவரது மூன்று வயது குழந்தை பிரின்ஸ் ஆத்யா, விளையாடிக்கொண்டிருந்தபோது அந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டான்.  இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். 5 … Read more

வெளிநாடுகளில் உள்ள இந்திய விஞ்ஞானிகள் நாடு திரும்ப ஆர்வமாக உள்ளனர்: மத்திய மந்திரி தகவல்

ஃபரிதாபாத்: அரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள உயிரி தொழில்நுட்ப மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார்.   வெளிநாடுகளில் உள்ள இந்திய விஞ்ஞானிகளை மீண்டும் தாய்நாட்டுக்கு அழைத்து வரும் நோக்கில் உருவாக்கப்பட்ட  ராமலிங்கசாமி அடைவு மற்றும் ஆராய்ச்சியாளர்களின் கருத்தரங்கத்தை அவர் தொடங்கி வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ள அறிவு பூர்வமான அறிவியல் சூழல் காரணமாக, வெளிநாடுகளில் உள்ள இந்திய விஞ்ஞானிகள் பலர் நாடு திரும்புவதில் ஆர்வமாக உள்ளனர். வெளிநாடு … Read more

உக்ரைன் எல்லையில் இருந்து இந்தியர்கள் போலந்திற்குள் செல்ல 10 பேருந்துகள் இயக்கம் – தூதரகம் தகவல்

வார்சா: ரஷியா-உக்ரைன் போர் காரணமாக வான் பகுதியை உக்ரைன் மூடியுள்ளது. இதனால் அங்கு பயணிகள் விமான போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி சவாலாக மாறியுள்ளது.  மாணவர்கள் உள்பட சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் சிக்கி யிருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டாலும், உக்ரைன் வாழ் இந்தியர்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.  அங்கிருந்து அவர்கள் ருமேனியா தலைநர் புகாரெஸ்ட்டிற்கும், ஹங்கேரி தலைநகர் புதாபெஸ்டுக்கும் … Read more

கார்கிவ், கீவ் நகரங்களில் இந்தியர்கள் பயணிக்க வேண்டாம்; இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

கீவ்: உக்ரைனில் உள்ள கார்கிவ், கீவ் நகரங்களில் இந்தியர்கள் பயணிக்க வேண்டாம் என இந்திய தூதரகம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. சண்டை தீவிரமாக உள்ளதால் ரயில் நிலையங்களுக்கும் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

உக்ரைனில் உள்ள கார்கிவ், கீவ், சுமி ஆகிய நகரங்களில் இந்தியர்கள் பயணிக்க வேண்டாம்: இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

டெல்லி: உக்ரைனில் உள்ள கார்கிவ், கீவ், சுமி ஆகிய நகரங்களில் இந்தியர்கள் பயணிக்க வேண்டாம் என இந்திய தூதரகம் கூறியுள்ளது. சண்டை தீவிரமாக நடப்பதால் ரயில் நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உத்தரபிரதேச 5ஆம் கட்டத் தேர்தல்: வாக்குப்பதிவு நிலவரம் என்ன?

உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவில் மாலை 6 மணி வரை சுமார் 55.31 சதவிகித வாக்குகள் பதிவாகின. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 12 மாவட்டங்களைச் சேர்ந்த 61 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை 53 புள்ளி 98 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 692 வேட்பாளர்கள் போட்டியிடும் 5ஆம் கட்டத் தேர்தலில் துணை … Read more