மும்பையில் பவர்கட் ரயில் சேவை பாதிப்பு| Dinamalar

மும்பை,-மஹாரஷ்டிர மாநில தலைநகர் மும்பையின் பல பகுதிகளில் நேற்று காலையில் திடீரென மின் வினியோகம் தடைபட்டது. இதனால் உள்ளூர் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. தலைநகர் மும்பையின் பல பகுதிகளில் நேற்று காலை 9:50 மணிக்கு மின் வினியோகம் தடைப்பட்டது.மும்பையின் இருதயமாகக் கருதப்படும் மின்சார ரயில் சேவையும், ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தில் பாதிக்கப்பட்டது. ஒரு மணி நேரத்துக்குப் பிறகே மின் வினியோகம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து … Read more

தனுஷின் மாறன் டிரைலரை வெளியிடும் ரசிகர்கள்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாறன் ' படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். சமுத்திரகனி, அமீர் ,ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசைமைத்துள்ளார் .இந்த படம் அடுத்த மாதம் டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் டிரைலர் நாளை மாலை வெளியாகவுள்ளது. இதை தனுஷ் ரசிகர்கள் வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர வகுப்பு பெண்களிடம் உல்லாசமாக இருக்கலாம் – நிர்வாக அதிகாரியிடம் ரூ.40 லட்சம் மோசடி

மும்பை, பால்கர் மாவட்டத்தை சேர்ந்த 56 வயது நபர். தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு அடையாளம் தெரியாத நம்பர் ஒன்றில் அழைப்பு வந்தது. இதனை எடுத்து பேசிய போது எதிர்முனையில் பெண் ஒருவர் குயிக் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் இருந்து மகி சர்மா பேசுவதாகவும், தங்களிடம் உயர்தர வகுப்பை சேர்ந்த பெண்கள் தங்களிடம் இருப்பதாகவும், தங்களிடம் உறுப்பினராக சேர்ந்தால் அவர்களிடம் உல்லாசம் அனுபவித்து கொள்ளலாம் என தெரிவித்தார். நட்சத்திர … Read more

இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டி, காயம் காரணமாக இஷான் கிஷன் விலகல்

தர்மசாலா இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்ற மைதானமான தரம்சாலாவிலேயே நடைபெறுகிறது. இந்த போட்டியானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.  நேற்று நடைபெற்ற  போட்டியின் போது இலங்கை வீரர் லஹிரு குமாரா வீசிய நான்காவது ஓவரின் இரண்டாவது பந்து இஷான் கிஷனின் ஹெல்மெட்டை தாக்கியது. உடனடியாக அவருக்கு களத்தில் இந்திய மருத்துவக் குழுவினர் சோதனையிட்டனர்.இந்த நிலையில் தற்போது அவருக்கு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களுக்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம்!

புதுடெல்லி, இந்தியாவை பொறுத்தவரை, உக்ரைனில் சிக்கியிருக்கும் சொந்த நாட்டு மக்களை மீட்பதுதான் உடனடி சவாலாக மாறியிருக்கிறது. மாணவர்கள் உள்பட சுமார் 16 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. உக்ரைனின் வான்பகுதி பயணிகள் விமான போக்குவரத்துக்கு மூடப்பட்டது. அதேநேரம் உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டாலும், உக்ரைன்வாழ் இந்தியர்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரி எல்லைகளுக்கு அழைத்து வரப்படுகின்றனர். பின்னர் அங்கிருந்து அவர்கள் அந்தந்த நாடுகளின் தலைநகரான முறையே புகாரெஸ்ட் மற்றும் புதாபெஸ்டுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். பின்னர் … Read more

கடும் போராட்டத்திற்கு பிறகு ரிலையன்ஸின் அதிரடி முடிவு.. அனைவருக்கும் சாதகமான முடிவுதான்..!

இந்தியாவின் மிக பெரிய வணிக குழுமங்களில் ஒன்றாக இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் அதன் சில்லறை வர்த்தக பிரிவிலும் மிகப்பெரிய வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஜியோமார்ட் என்ற பெயரில் இ-காமர்ஸ் சேவையினையும் செய்து வருகின்றது. இந்த நிலையில் தங்களது வணிகத்தினை மேற்கொண்டு விரிவாக்கம் செய்யும் விதமாக பல்வேறு நிறுவனங்களை கைபற்றி வருகின்றது. பல நிறுவனங்களுடன் கூட்டணி சேர்ந்து வருகின்றது. மிகப்பெரிய அளவில் முதலீடுகளையும் செய்து வருகின்றது. அப்படி முதலீடு செய்ய திட்டமிட்டு போடப்பட்ட ஒப்பந்தம் தான் … Read more

அமைதி பேச்சுவார்த்தைக்கு சம்மதம்… ரஷ்யா- உக்ரைன் லேட்டஸ்ட் 10 நிகழ்வுகள்

Ukraine Russia crisis latest news in Tamil: உக்ரைன் மீது ரஷ்யா 4ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இன்று இரு நாடுகளும் அமைதி பேச்சு வார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளன. இந்த பேச்சு வார்த்தை பெலாரஸ் எல்லையில், இரு நாட்டு உயர் மட்ட அதிகாரிகள் மத்தியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், உக்ரைன் – ரஷ்ய விவகாரத்தில் நடந்த லேட்டஸ்ட் நிகழ்வுகளைப் பார்ப்போம். SWIFT-ல் இருந்து ரஷ்யாவை நீக்க முடிவு; சர்வதேச ஜூடோ கூட்டமைப்பின் … Read more

இலங்கையை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி.! மேன் ஆஃப் தி சீரியஸ் யார் தெரியுமா?!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது.  இதில் முதல் 2 டி20 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய நிலையில் இன்று மூன்றாவது டி20 போட்டி தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.  இதனையடுத்து பேட்டிங் செய்வதற்கு முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு, இந்திய அணியின் பந்துவீச்சு … Read more

Veto அதிகாரத்தால் வீழ்த்திய ரஷ்யா: Veto என்றால் என்ன? ரஷ்யாவின் Vetoவால் இந்தியா பயன்பட்டது எப்படி?

‘உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா உடனே நிறுத்த வேண்டும், தன் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும்’ என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்துவிட்டது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட் நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் நடுநிலை வகித்தன. ரஷ்யா தன் ஒற்றை அதிகார வாக்கைப் பயன்படுத்தி தீர்மானத்தை முறியடித்துவிட்டது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அதிகாரம் … Read more