@opganga : உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் தொடர்புக்கு பிரத்யேக ட்விட்டர் ஐ.டி.

@opganga உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களின் தொடர்புக்கு பிரத்யேக ட்விட்டர் ஐ.டி. உக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. தலைநகர் கிவ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள வெளிநாட்டினரின் வசதிக்காக இலவச ரயில்களை உக்ரைன் அரசு இயக்கி வருகிறது அங்குள்ள மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள இந்திய தூதரக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். போலந்து, ஹங்கேரி, ருமேனியா மற்றும் ஸ்லோவாகியா ஆகிய நாடுகளுக்கு வந்து சேரும் இந்தியர்கள் … Read more

கடைசி டி20 போட்டியிலும் அசத்தல் வெற்றி- இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

இலங்கைக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் 45 பந்துகளில் 9 பவுண்டரி 1 ஒரு சிக்சருடன் 73 ரன்கள் குவித்தார்.

உக்ரைன் விவகாரம்: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை

புதுடெல்லி: உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைத் தொடர்ந்து அங்குள்ள மாணவர்கள் உள்பட ஏராளமான இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.  அவர்களை தாய்நாடு அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. சனிக்கிழமை முதல் 900 க்கும் மேற்பட்டோர் மீண்டும் அழைத்து வரப்பட்டுள்ளனர். உக்ரைன்- ரஷிய போர் 4வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் உள்ள கீவ், கார்கிவ், சுமி நகரங்களில் உள்ள இந்தியர்கள் வெளியே செல்ல வேண்டாம் என்றும், இந்த சூழலில் வெளியே செல்வது … Read more

மாதம் ரூ.2.52 லட்சம்… உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்தார் அதிபர்

கீவ்: உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைனின் ஏராளமான ராணுவ தளங்கள் மற்றும் போர் தளவாடங்களை அழித்துள்ள ரஷிய படைகள், தொடர்ந்து முன்னேறி வருகின்றன. தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தற்போது உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.  ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் கடுமையாக … Read more

ரஷ்யாவுடன் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டதாக தகவல்

கீவ்: ரஷ்யாவுடன் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் பிரதிநிதிகள் வந்து கொண்டிருப்பதாகவும் ரஷ்ய பத்திரிகைகள் தகவல் தெரிய வந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சிபாரிசு கடிதங்களுடன் வர பக்தர்களுக்கு தடை; தேவஸ்தானம் அறிவிப்பு.!

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சிபாரிசு கடிதங்களுடன் வருபவர்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி கோபிநாத் அளித்த பேட்டி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும் தரிசன டிக்கெட் வைத்திருக்கவேண்டியது கட்டாயம். டிக்கெட்களை காண்பித்தால் மட்டுமே அலிபிரி சோதனை சாவடியில் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். அலிபிரி சோதனைச்சாவடியிலிருந்து அதிகாலை 3 மணி … Read more

தமிழ்நாட்டை கடந்து செல்ல வேண்டும் சமூக நீதிப் பயணம் – முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

“சமூக நீதிப் பயணத்தில் தமிழ்நாட்டைக் கடந்து, இந்திய ஒன்றியம் முழுவதும் திமுக பயணிக்க வேண்டியிருப்பதாக தமிழக முதல்வரும், அக்கட்சியின் தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ‘உங்களில் ஒருவன்’ என்ற சுயசரிதை புத்தகத்தின் முதல் பாகம் வெளியீடு மற்றும் மார்ச் 1-ம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தொண்டர்களுக்கு மு.க, ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், “திமுக தலைவராக இருந்த கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, கட்சியை காக்க வேண்டிய பொறுப்பைச் சுமந்த தலைவனாகவும், மக்கள் ஆதரவுடன் வெற்றி … Read more

செங்கல் சூளைக்காரர் கண்டெடுத்த வைரம்: எத்தனை கோடிக்கு ஏலம் போனது தெரியுமா?

மத்தியப் பிரதேசத்தில் செங்கல் சூளை நடத்துபவர் கண்டெடுத்த 26.11 காரட் மதிப்புடைய வைரம் ரூ.1.62 கோடிக்கு ஏலம் போயுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா கல்யாண்பூர் பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருபவர் சுஷில் சுக்லா. இவருக்கு கடந்த பிப்ரவரி 21 அன்று 26.11 காரட் வைரங்கள் கிடைத்தது. அவை மாவட்ட கலெக்டர் தலைமையில் ஏலம் விடப்பட்டது. ஒரு காரட்டின் மதிப்பு ரூ.3 லட்சத்தில் தொடங்கி ரூ.6.2 லட்சம் வரை சென்றது. இறுதியாக உள்ளூர் … Read more

மூன்றாவது போட்டியில் அசத்தல் வெற்றி| Dinamalar

தரம்சாலா: இலங்கைக்கு எதிரான மூன்றாவது ‘டி-20’ போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 3-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி தரம்சாலாவில் நடந்தது. இந்திய அணியில் இஷான் கிஷான், பும்ரா, யுவேந்திர சகால், புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு வழங்கப்பட்டு குல்தீப் யாதவ், … Read more

நடிக்க வரும் முன் ஆஷா கவுடா என்ன செய்தார் தெரியுமா?

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'கோகுலத்தில் சீதை' என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருபவர் ஆஷா கவுடா. இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் நடிகையானது எப்படி என்ற சுவாரசியமான கதையை தற்போது கூறியுள்ளார். ஆஷா கவுடாவுக்கு முதலில் நடிகையாக வேண்டும் என்ற ஆசை எதுவும் இல்லையாம். அவரது குடும்ப உறுப்பினர் பலரும் ஜிம்மில் டிரெய்னராக இருந்து வந்ததால் இவருக்கும் பிட்னஸ் டிரெய்னராக வேண்டும் என்ற ஆசை தான் இருந்ததாம். சிறிது காலம் ஒரு ஜிம்மில் ஏரோபிக்ஸ் … Read more