பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற புதிய நடைமுறையில் விண்ணப்பம்

ஆதார் எண்ணை, இந்திய தனி அடையாள ஆணையம் (UIDAI) இலவசமாக வழங்குகிறது. இதன் மூலம் அரசின் நலத் திட்டங்கள் சரியான பயனாளியைச் சென்றடைவது உறுதி செய்யப்படுவதுடன், பல்வேறு துறைகளில் நடைபெறும் மோசடிகளும் தடுக்கப்படுகின்றன. இந்நிலையில் யுஐடிஏஐ, அண்மைக்காலமாக கையடக்கமான, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளை விநியோகித்து வருகிறது. இதற்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பதிவு செய்யப்படாத செல்பேசி எண்: ஆதாரில் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஓடிபி எண்ணை உள்ளீடு செய்தால் மட்டுமே … Read more

உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டிய எலான் மஸ்க், ஜப்பானிய பணக்காரர்!

கீவ்: ரஷ்யா தொடுத்துள்ள உக்கிரமான போரில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள உக்ரைனுக்கு உலக நாடுகளும், தனிநபர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அதில், எலான் மஸ்க் மற்றும் ஜப்பானிய பணக்காரர் ஒருவரின் உறுதுணை கவனத்துக்குரியதாக இருந்தது. போர் தொடங்கியது முதல் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்து வந்தார். ரஷ்யாவுக்கு அனைவரும் அஞ்சுவதாகக் கூறியிருந்தார். பொருளாதாரத் தடைகளைத் தாண்டி உதவிகள் வேண்டும் என்று கேட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு 350 … Read more

மீண்டும் முழு ஊரடங்கு – அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு?

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் பரவியது. இது, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது பல்வேறு வகைகளில் உருமாற்றம் … Read more

AK 61 படத்தில் அஜித்ததுடன் இணையும் பிரபலம்…! அடடே இவரா ?

நடிகர் அஜித் நடிப்பில் உருவான வலிமை படம் ஒருவழியாக வெளியானது. வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் கடந்த இரண்டு வருடங்களாக உருவான வலிமை பட பலப்போராட்டங்களுக்கு பிறகு பிப்ரவரி 24 ஆம் தேதி திரைக்கு வந்தது. அஜித் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வந்தாலும் பொதுவான சினிமா ரசிகர்கள் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களையே கூறிவருகின்றனர். இருப்பினும் வலிமை படத்தின் வசூல் அடித்து நொறுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிலேயே 34 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது … Read more

ரஷ்யாவில் குவிந்து கிடக்கும் அணுவாயுதங்கள்! அம்பலமாகும் மறைக்கப்பட்ட ரகசியங்கள் (PHOTOS)

 பல வல்லரசு நாடுகளின் கடும் எச்சரிக்கையையும் கண்டுகொள்ளாத ரஷ்யா, உக்ரேன் மீது போரை முன்னெடுத்ததன் பலமாக அணுவாயுமே உள்ளதாக இராணுவ ஆய்வாளர்களின் கருத்தாகும். உலகிலேயே அதிகளவு அணுவாயுதங்களை கொண்ட நாடாக ரஷ்யா உள்ளது. நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் அணுவாயுதம் உள்ளது. எனினும் எண்ணிக்கையில் கணக்கிடும் போது ரஷ்யாவிடம் பெருந்தொகையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகின் 14,000 அணு ஆயுதங்களில் 50% வீதத்திற்கும் மேலானவை ரஷ்யாவிடம் உள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. … Read more

ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டது உக்ரைன்! ஜெலன்ஸ்கி முக்கிய அறிவிப்பு

 ரஷ்யா உடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒப்புக்கொண்டதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். பெலாரஸ் ஜனாதிபதி Alexander Lukashenko உடன் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இன்று நடத்திய உரையாடலைத் தொடர்ந்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், உக்ரேனிய பிரதிநிதிகள் குழு, ரஷ்ய பிரதிநிதிகள் குழுவை முன்நிபந்தனையின்றி உக்ரேனிய-பெலாரஷ்யன் எல்லையில், பிரிபியாட் ஆற்றுக்கு அருகில் சந்திப்பதாக நாங்கள் ஒப்புக்கொண்டோம். உக்ரேனிய பிரதிநிதிகள் குழுவின் பயணம், பேச்சுவார்த்தைகள் மற்றும் நாடு திரும்பும் போது, பெலாரஸில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் … Read more

அணுஆயுத தடுப்புப் படையை சிறப்பு போர் முறைக்கு தயாராக ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்

அணுஆயுத தடுப்புப் படையை சிறப்பு போர் முறைக்கு தயாராக ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது நாட்டு ராணுவத்தைச் சேர்ந்த அணுஆயுத தடுப்புப் படையை சிறப்பு போர் முறைக்கு தயாராக இருக்க பாதுகாப்பு அமைச்சர் ஷோய்ஜ் மற்றும் ஜெனரல் ஸ்டாஃப் ஜெராசிமோவ் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார். ரஷ்ய ராணுவ வரையறைப்படி அணு ஆயுதம் மற்றும் மரபு சார்ந்த பல்வேறு ஆயுதங்களை பாதுகாப்பு மற்றும் தாக்குதலுக்காக ஒரே மாதிரியாக பயன்படுத்த இந்த தடுப்புப் படையினருக்கு … Read more

மூன்றாவது டி20 கிரிக்கெட்- 146 ரன்களில் இலங்கையை கட்டுப்படுத்தியது இந்தியா

தரம்சாலா: இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் 3வது மற்றும் கடைசி போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய இலங்கை அணி, முன்வரிசை வீரர்களை அடுத்தடுத்து இழந்தது. குணதிலக ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினா. நிசங்கா (1), அசலங்கா (4), ஜனித்லியாங்கே (9) ஆகியோர் … Read more

சாகும் நாள் வரை வாரணாசி மக்களுக்கு சேவை செய்வேன்- பிரதமர் மோடி உருக்கம்

வாரணாசி: பிரதமர் மோடி இன்று தனது பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது, மக்கள் தங்கள் இறுதிக்காலத்தில் வாரணாசிக்கு (காசி) வருவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, ‘நான் இறக்கும் நாள் வரை வாரணாசி மக்களுக்கு சேவை செய்வதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன்’ என்றார். எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சிகளை தனிப்பட்ட சொத்தாகக் கருதுகிறார்கள். தொண்டர்களின் கட்சியான பாஜகவுக்கு அவர்களால் ஒருபோதும் சவால் … Read more

கனடா நாட்டின் வான்வெளியில் ரஷிய விமானங்கள் பறக்க தடை

உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலை நகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷியா அழைப்பு … Read more