உக்ரைன் விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

டெல்லி: உக்ரைன் விவகாரம் தொடர்பாக உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்துகிறார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் விலை உயர்வு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. திருப்பதியில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆர்ஜித சேவைகளில் பக்தர்களை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் விரைவில் மீண்டும் அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்  தேவஸ்தான அறங்காவலர் குழு அண்மையில் அவசர ஆலோசனை நடத்தியது. அதில் தரிசன டிக்கெட்டின் விலையை உயர்த்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில் டிக்கெட்டுகளின் விலை விவரத்தை தேவஸ்தானம் நேற்றிரவு வெளியிட்டுள்ளது. அதன்படி ரூ.120க்கு வழங்கப்பட்டு வந்த சுப்ரபாத சேவை டிக்கெட் ரூ.2 ஆயிரமாகவும், … Read more

உக்ரைனில் சிக்கி தவிக்கும் குன்னூர் மாணவி – மீட்கக் கோரி பெற்றோர் கண்ணீர்

உக்ரைனில் சிக்கியுள்ள குன்னூரைச் சேர்ந்த மாணவியை மீட்கக் கோரி அவரது பெற்றோர் கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். உக்ரைனில் போர் சூழல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதால் அங்குள்ள இந்திய மாணவிகள் தாய்நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களில் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் சாய் ஷோனு என்ற மருத்துவ மாணவியும் ஒருவர். இவர் உக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில், அங்கு போதிய உணவு, குடிநீர் இல்லாமல் தங்கள் மகள் … Read more

உக்ரைனில் இருந்து நாடு திரும்ப மறுக்கும் ஹரியானா மாணவி – ஓர் நெகிழ்ச்சிப் பின்னணி

போர் முடியும் வரை உக்ரைன் நாட்டிலேயே தங்கியிருந்து அவர்கள் குடும்பத்தினரை பார்த்துக்கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார் ஹரியானா மாணவி. உக்ரைன் மீது ரஷ்யா 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா உள்பட உலகம் முழுவதும் மக்கள் திரண்டு போர் வேண்டாம் என்ற ஒருமித்தக் குரலை ஒலிக்கச் செய்து வருகின்றனர். இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்களும், உக்ரைனில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, மத்திய, மாநில அரசின் உதவியுடன் பல்வேறு மாணவ மாணவிகள் … Read more

அருண் விஜயின் 'யானை' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

அருண்விஜய்யின் யானை திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஹரியும் அருண் விஜய் முதன்முறையாக ‘யானை’ படத்தில் இணைந்துள்ளனர். யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. இந்நிலையில் யானை திரைப்படம் மே 6ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘யானை’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் … Read more

இந்தியாவின் வெற்றிக்கு 147 ரன்| Dinamalar

தரம்சாலா: இலங்கைக்கு எதிரான மூன்றாவது ‘டி-20’ போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 147 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்தியா வந்துள்ள இலங்கை அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டியில் வென்ற இந்தியா, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி தரம்சாலாவில் நடக்கிறது. இந்திய அணியில் இஷான் கிஷான், பும்ரா, யுவேந்திர சகால், புவனேஷ்வர் குமாருக்கு ஓய்வு வழங்கப்பட்டு குல்தீப் யாதவ், அவேஷ் கான், ரவி பிஷ்னாய், முகமது சிராஜ் தேர்வாகினர். ‘டாஸ்’ … Read more

'தில்லுக்கு துட்டு' 3 ஆம் பாத்தில் சந்தானம் : இயக்குனர் மாற்றம்

சந்தானம் நடிப்பில் கடந்த 2016ல் வெளியாகி ஹிட்டான திரைப்படம் 'தில்லுக்கு துட்டு'. இப்படத்தை 'லொள்ளு சபா' ராம்பாலா இயக்கியிருந்தார். மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்தானம் மற்றும் ராம்பாலா கூட்டணியில் 'தில்லுக்கு துட்டு' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாம் பாகத்தை ராம்பாலாவிற்கு பதிலாக ராம்பாலாவின் இணை இயக்குனர் ஆனந்த இந்த படத்தை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேசமயம் நாயகனாக … Read more

ஒரே வாரத்தில் ரூ.3.3 லட்சம் கோடி காலி.. RIL, டிசிஎஸ்-க்கு பெரும் இழப்பு..முதலீட்டாளர்கள் கண்ணீர்!

கடந்த வாரத்தில் பங்கு சந்தையானது பலத்த சரிவினைக் கண்ட நிலையில், டாப் 10 நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பானது, 3,33,307.62 கோடி ரூபாய் இழப்பினை கண்டுள்ளது. இது கடந்த 7 மாதத்தில் இல்லாத அளவுக்கு இழப்பினை கண்டுள்ளது. இதில் வழக்கம்போல சந்தை மதிப்பில் முதலிடத்தில் எப்போதும் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சந்தை மதிப்பு இழப்பிலும் முதலிடத்தில் உள்ளது. இது இந்த வார தொடக்கத்தில் உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் பெரும் சரிவினைக் கண்டது குறிப்பிடத்தக்கது. … Read more

Toilet Rules: கழிப்பறை பயன்பாடு தொடர்பாக கடுமையான விதிகள் உள்ள ‘நாடுகள்’ !

ஒவ்வொரு நாட்டிலும் சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அமலில் உள்ளன. சட்ட ஒழுங்கை பாதுகாக்க சட்ட விதிக்கப்படுவது மிகவும் அவசியம். ஆனால், உலகில் கழிப்பறையைப் பயன்படுத்துவது தொடர்பாக சில விதிகள் உள்ளன என்றால், ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா. இதில் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் அடங்கும். சிங்கப்பூரில் மோசமான பழக்கவழக்கங்களுக்கு கடுமையான தண்டனைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், கழிப்பறையை உபயோகப்படுத்தியக்குப் பிறகு ஃப்ளஷ் செய்யாத பலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பொது கழிப்பறையை பயன்படுத்தும் பலர் இது போன்று பொறுப்பில்லாமல் … Read more