போர்களத்தில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள்: வரவேற்பு கொடுத்த அமைச்சர்

உக்ரைனிலிருந்து பத்திரமாக சென்னை திரும்பிய தமிழக மாணவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். உக்ரைனிலிருந்து அண்டை நாடுகள் வழியாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். ருமேனியாவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் முதல்கட்டமாக வந்த தமிழக மாணவர்கள் நேற்றிரவு டெல்லி திரும்பினர். டெல்லியிலிருந்து விமானம் மூலம் அவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர். உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த சென்னையைச் சேர்ந்த ஹரிஹர சுதன், சகீர் அபுபக்கர், சேலத்தைச் சேர்ந்த சாந்தனு பூபாலன், தேனியைச் சேர்ந்த வைஷ்ணவி … Read more

கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பு – என்ன காரணம்? ஏன்?

 நடப்பு நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி ஏழரை லட்சம் கோடி ரூபாயைத் தாண்டவுள்ளதாக பெட்ரோலிய அமைச்சக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2021-22ஆம் நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி மாதம் வரை, 10 மாதங்களில் இந்தியா 7 லட்சத்து 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்திருக்கிறது. 7 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி முதல் கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கிய நிலையில், அந்த மாதத்தில் மட்டும் 87 ஆயிரம் கோடி ரூபாய்க்கு … Read more

'வலிமை' படத்தில் வெட்டப்பட்ட காட்சிகள் யூடியூப்பில் வெளியானது

வலிமை படத்தில் குறைக்கப்பட்ட காட்சிகள் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அஜித் நடித்த வலிமை படம் பிப்ரவரி 24 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டது. அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். இதுவரை தமிழகத்தில் வெளியான படங்களின் முதல் நாள் வசூல் சாதனையை வலிமை முறியடித்துள்ளது. வலிமை படம் முதல் நாளே தமிழகத்தில் மட்டும் 35 கோடிகளை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை விட வெளிநாடுகளில் வலிமை படத்திற்கு வரவேற்பு அதிகம் இருப்பதாக … Read more

மீண்டும் நடிப்புக்கு திரும்பிய வினித் சீனிவாசன்

இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்டவர் வினித் சீனிவாசன். இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு படம் இயக்குவார். அதற்கிடையே கிடைக்கும் இடைவெளியில் சில படங்களில் நடிப்பார். அப்படி சமீபத்தில் மோகன்லால் மகன் பிரணவ் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்த ஹிருதயம் என்கிற படத்தை இயக்கினார் வினித் சீனிவாசன். அந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்து, தற்போதும் கேரள தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் நடிப்பிற்கு … Read more

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் ஒப்புதல்| Dinamalar

மாஸ்கோ: பெலாரஸ் நாட்டில் வைத்து ரஷ்யாவுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்து இருப்பதாவது: பேச்சுவார்த்தை நடத்த பெலாரஸ் நாட்டின் கோமல் நகருக்கு உக்ரைன் நாட்டு பிரதிநிதிகள் செல்வார்கள் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. முன்னதாக பெலாரஸ் நாட்டின் வழியாக உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யபடைகள் நுழைந்துள்ளதால் பெலாரஸ் நாட்டில்வைத்து ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை … Read more

நெருக்கடியான நிலையிலும் நெகிழ்ச்சி.. கிரிப்டோ முதலீட்டாளர்கள் உக்ரைனுக்கு $11 மில்லியன் நன்கொடை.. !

உக்ரைன் ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் மூன்றாம் உலகப்போரே வரலாமோ என்ற அளவுக்கு பதற்றமானது நிலவி வருகின்றது. சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிட்டு வரும் வீடியோக்களை பார்க்கும்போது நம்மையும் அறியாமல் கண்ணீர் வருகின்றது. இதற்கிடையில் பல நாடுகளும் உதவிகளை வாரி வழங்கி வருகின்றன. சில நாடுகள் ராணுவ உபகரணங்களை வழங்கி வருகின்றன. சில நாடுகள் நிதியினையும் வாரி வழங்கி வருகின்றனர். இதே கிரிப்டோ முதலீட்டாளர்கள் 11 மில்லியன் டாலர்காள் நன்கொடையாக கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யா – … Read more

உக்ரைன் யுத்தத்திற்கு அமெரிக்காவே அடிப்படை காரணம்! வடகொரியா குற்றச்சாட்டு

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு, இந்த விவகாரம் தொடர்பான வட கொரியாவின் முதல் கருத்து வெளிவந்துள்ளது. வடகொரிய வெளியுறவு அமைச்சகம் ஒரு ஆய்வாளரின் அறிக்கையை வெளியிட்டு, தனது நிலைப்பாட்டை சூசகமாக தெரிவித்திருக்கிறது. பாதுகாப்பிற்கான ரஷ்யாவின் நியாயமான கோரிக்கைகளை புறக்கணித்து ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தத்தைத் தொடர்ந்த அமெரிக்காவே, ஐரோப்பிய நெருக்கடியின் “மூலக் காரணம்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.. “ரஷ்யாவின் பாதுகாப்பிற்கான நியாயமான கோரிக்கையை புறக்கணித்து இராணுவ மேலாதிக்கத்தை” கடைபிடித்துள்ளது என்று சர்வதேச அரசியல் … Read more

என்னாது உக்ரைன்ல குண்டு வெடிச்சதுல கொரோனா செத்து போச்சா… இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்

Tamil memes news in tamil: உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை என அனைத்தையும் இன்றைய இணைய பக்கங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம். அந்த செய்திகளை புரியும் படியாகவும், தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்படி அன்றாட சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம். இன்றைய கலக்கல் … Read more

கள்ளகாதலுடன் கணவனை கொன்ற மனைவி கைது… கள்ளகாதலனுக்கு காவல்துறை வலைவீச்சு..!

கள்ளகாதலுக்காக கணவனை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குச்சிப்பாளையம் காலனி தெருவை சேர்ந்தவர் இளையராஜா (வயது 42). இவருக்கு தஞ்சை மாவட்டம் நெய்வாசல் பகுதியை சேர்ந்த அனிதா  என்பவருடன் திருமணம்  நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மனைவியை காணவந்த அவரை கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் … Read more