குஜராத்தி மொழியில் ரீமேக்காகும் ஆண்டவன் கட்டளை

விஜய்சேதுபதி, ரித்திகா சிங் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம் ஆண்டவன் கட்டளை. காக்காமுட்டை மணிகண்டன் இயக்கிய இந்த படத்தில் யோகிபாபு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. இந்தநிலையில் இந்த படம் குஜராத்தி மொழியில் தற்போது ரீ-மேக் ஆக இருக்கிறது. இதை ரீமேக் செய்து தயாரிக்கப் போகிறவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான். நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல் முறையாக நடந்திருந்தால் உக்ரைன் பிரச்னை பூதாகரமாகி இருக்காது: டிரம்ப்| Dinamalar

புளோரிடா: அமெரிக்க அதிபர் தேர்தல் முறையாக நடந்திருந்தால் உக்ரைன் பிரச்னை பூதாகரமாகி இருக்காது என முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உக்ரைன்-ரஷ்ய மோதல் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 350 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டை விட்டு வெளியேற விரும்பினால் அதற்கு உதவி செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் தான் நாட்டை விட்டு வெளியேறப்போவதில்லை என்று ஜெலன்ஸ்கி … Read more

ரஷ்யா – உக்ரைன் பதற்றம்.. தங்கம் விலை ரூ.10,000 வரை அதிகரிக்கலாம்.. இது வாங்க சரியான தருணம்..!

தங்கத்தின் தேவையானது நடப்பு ஆண்டில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டலாம் என சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று சுட்டிக் காட்டியது. இதற்கிடையில் தற்போது இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக ரஷ்யா – உக்ரைன் இடையேயான பதற்றமானது சாதகமாக அமையலாம். மேலும் இதனை இன்னும் ஊக்குவிக்கும் விதமாக பங்கு சந்தைகளும் கடும் ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிக சேமிப்பு மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார வளர்ச்சி விகிதம் மீண்டு வந்து கொண்டுள்ள நிலையில், தேவையானது தொடர்ந்து … Read more

ரஷ்யா உக்ரைன் போர்: பேஸ்புக்கை தொடர்ந்து ட்விட்டரையும் தடை செய்த ரஷ்யா

உக்ரைன் ரஷ்யா போர் நடந்துவரும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக பேஸ்புக் செயல்பட்டு வருவதாக கூறி பேஸ்புக்கிற்கான அணுகலை ரஷ்யா மட்டுப்படுத்தியது. இந்நிலையில்,  தற்போது ரஷ்யா ட்விட்டரை முடக்கி தகவல் ஓட்டத்தை நிறுத்தியுள்ளது. ரஷ்யாவில்  ட்விட்டர் இயங்குதளத்திற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து  நிறுவனம் அறிந்திருப்பதாகக் ட்விடரும் கூறியுள்ளது. “ரஷ்யாவில் சில நபர்களுக்கு ட்விட்டர் தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை நாங்கள் அறிவோம், மேலும் எங்கள் சேவையை பாதுகாப்பாகவும் அணுகக்கூடியதாகவும் வைத்திருக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்று ட்விட்டர் சனிக்கிழமை பிற்பகுதியில் ஒரு … Read more

75 நகரங்களின் தலைவர்கள், சி.இ.ஓ., ஆணையர்கள் பங்கேற்ற ஓட்டப் பந்தயம்; முதலிடம் பிடித்த அமைச்சர் மா.சு

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, பெருநகர சென்னை மாநகராட்சியின் சாா்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற மக்களின் உடல் நலன் சாா்ந்த பயிற்சிகளை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இந்திய அளவில் 75 நகரங்களைச் சேர்ந்த தலைவா்கள், பல்வேறு நிறுவனங்களின் சி.இ.ஓ, ஆணையா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா். இணையதளத்தின் வாயிலாகப் பதிவு செய்த நபா்களின் … Read more

பயிற்சி நர்சை கட்டாய திருமணம் செய்த ஏஜென்ட்..போக்சோவில் தூக்கிய போலீசார்.!

பயிற்சி நர்சை கடத்தி கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த தனியார் நிறுவன கலெக்ஷன் ஏஜெண்டை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி நர்சாக 17 வயது பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இந்தப் பெண்ணை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட … Read more

'கல்வெட்டில் தேவதாசி' ஆய்வு நூல்; புத்தக கண்காட்சியில் வெளியீடு!

கல்வெட்டுகளில், தேவதாசிகள் பற்றி சொல்லப்பட்டுள்ள தரவுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட ‘கல்வெட்டில் தேவதாசி’ என்கிற நூல், தமிழ் மரபு அறக்கட்டளை சார்பாக நேற்று சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டது. கல்வெட்டுகளில் இடம்பெற்றிருக்கும் தேவதாசிகள் பற்றிய செய்திகளை, அவர்களின் வாழ்வைப் பேசுவதால் இந்த நூல் கவனம் பெறுகிறது. தேவதாசி என்கிற விளிப்பெயர் சரியானது தானா என்கிற கேள்வியையும் இந்தப் புத்தகம் முன்வைக்கிறது. தேவரடியார்கள், தேவமகளார் என்று கல்வெட்டுகளில் சுட்டப்படும் இவர்களின் வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட ஆதாரங்களோடு விரிவான ஆய்வைச் செய்து … Read more

மனநிலை பாதிக்கப்பட்டவரை பேச வைத்து எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.! <!– மனநிலை பாதிக்கப்பட்டவரை பேச வைத்து எடுக்கப்பட்ட வீடியோவை … –>

தேனி மாவட்டம் கம்பம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரை விசாரணை என்ற பெயரில் பேச வைத்து, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் பழனிசெட்டிப்பட்டியிலுள்ள வீடு ஒன்றில் திருட முயன்றதாக ஒரு நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தமிழிலும் ஆங்கிலத்திலும்  சம்மந்தமே இல்லாமல் ஏதேதோ பேசிய அந்த நபர், போதைக்கு அடிமையாகி, மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் என்பது தெரியவந்தது. சாவியுடன் … Read more

உக்ரைனில் படித்து வரும் காரைக்கால் மாணவர்களின் குடும்பத்தினருடன் அமைச்சர் சந்திர பிரியங்கா சந்திப்பு 

காரைக்கால்: உக்ரைனில் படித்து வரும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களின் குடும்பத்தினரை புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று (பிப்.27) நேரில் சந்தித்து பேசினார். காரைக்கால் பி.எஸ்.ஆர் நகரைச் சேர்ந்த வி.கார்த்தி விக்னேஷ், அ.சிவசங்கரி, கோட்டுச்சேரியைச் சேர்ந்த அ.பிரவினா, கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த அ.சந்துரு ஆகிய 4 பேர் உக்ரைன் நாட்டில் தங்கி படித்து வருகின்றனர். தற்போது அங்கு போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் மாணவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய … Read more

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் மீட்கப்படுவர்: பிரதமர் மோடி

பஸ்தி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள் அனைவரும் மீட்கப்படுவர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் 6 மற்றும் 7 ஆம் கட்டத் தேர்தல்கள் எஞ்சியுள்ள நிலையில் பஸ்தியில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்தப் பேரணியில் பிரதமர் மோடி பேசியதாவது: ஆப்பரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு வருகிறோம். உக்ரைனில் சிக்கியுள்ள நமது மகள்களும், மகன்களும் முழுமையாக மீட்கப்படுவார்கள். இதற்காக அரசாங்கம் இரவு, பகலாக பணியாற்றிக் … Read more