புதுவையில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு….

ஒயிட் ஏரியா என்று அழைக்கப்படும் புதுவை அரவிந்தர் ஆசிரமத்தை ஒட்டிய பகுதியில் உள்ள பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டினர் அரவிந்தர் ஆசிரமம் வழியாக செல்ல ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த வழியாக சென்ற இரண்டு வெளிநாட்டு பெண்களை விசாரித்த போலீசார் அரசு உத்தரவுப் படி செயல்படுவதாக கூறி அவர்களின் ஆடை குறித்து விமர்சித்தனர். புதுச்சேரியின் ஆரோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வரும் வெளிநாட்டினர் தங்கள் நாட்டு கலாச்சார படி ஆடை அணிந்து செல்வது வழக்கமான ஒன்று என்ற … Read more

சாலை அடையாளங்கள் அழிப்பு: எதிரிகள் நேராக நரகத்திற்கு செல்ல உதவும்- உக்ரைன் நிறுவனம்

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாட்களாக போர் தொடுத்து வருகிறது. முதலில் கிழக்கு பகுதியில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு எதிராக போர் தொடுத்ததாக ரஷியா தெரிவித்தது. பின்னர் பெலாரஸ் உடன் இணைந்து கிழக்கு, வடக்கு, தெற்கு என மூன்று திசைகளிலும் இருந்து வான்வெளி தாக்குதலை நடத்தியது. அதன்பின் பாராசூட் மூலம் உக்ரைன் நகருக்குள் ரஷிய வீரர்கள் தரையிறங்கினர். இதற்கிடையே சரண் அடையமாட்டோம். நாட்டை இழக்கமாட்டோம் என உக்ரைன் அதிபர் உறுதியாக தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்த ரஷியா … Read more

7 ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து 200 சிலைகளை மீட்டுள்ளோம் – மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

புதுடெல்லி: பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலியில் ‘மன் கி பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில், மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் தான்சானியா நாட்டை சேர்ந்த கிலி, நீமா ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தார். இந்திய இசை, பாடல்களுக்கு ஏற்றவாறு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பிரபலம் அடைந்த அவர்களை பாராட்டுவதில் பெருமை அடைவதாக குறிப்பிட்டார்.  … Read more

4-வது நாளாக தொடரும் போர்: கார்கிவ் நகரில் தாக்குதல் நடத்தும் ரஷியா

கீவ்: உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்க தொடங்கின. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலைநகர் கீவில்  இணையதள சேவை தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. கீவ் நகரின் குடியிருப்பு பகுதிகளை ரஷிய படைகள் நேற்று தாக்கின. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கீவ் நகரில் இருந்து வெளியேறினர். ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரெயில் … Read more

உலகம் முழுவதும் ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட கூகுள் நிறுவனம் தடை

வாஷிங்டன்: உலகம் முழுவதும் ரஷ்ய அரசு ஊடகம் விளம்பரம் செய்து வருவாய் ஈட்ட கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த நிறுவனங்கள், தனிநபர்கள் இனி கூகுள் வலைத்தளம் மூலம் விளம்பரம் எதையும் செய்ய முடியாது என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பல சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்பு: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: கடந்த காலங்களில் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பல சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வேலூரில் இருந்து கடத்தப்பட்ட 600 ஆண்டுகள் பழமையான அனுமன் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்டுளளதாக மோடி கூறினார். மேலும் வாரணாசி, பீகாரில் இருந்து கடத்தப்பட்ட பழமையான சிலைகளும் மீட்கப்பட்டுள்ளதாக மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியுள்ளார். .

"நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு குறிப்பிடத்தக்க வானிலை நிகழ்வு" – ஆய்வாளர் வெளியிட்ட தகவல்

மார்ச் 3ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு குறிப்பிடத்தக்க வானிலை நிகழ்வு. தமிழ்நாட்டில் அரிதான நிகழ்வாக வரும் மார்ச் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. Time for an weather post for an significant event after a … Read more

மீண்டும் தொடரும் மீனவர் கைது… அச்சத்தில் ராமேஸ்வர மீனவர்கள்! அரசுகள் உதவ கோரிக்கை

ராமேஸ்வரத்தை சேர்ந்த 8 மீனவர்களை கைது செய்து, மீனவர்களின் ஒரு விசைப்படகையும் இன்று கைப்பற்றியுள்ளனர் இலங்கை கடற்படையினர். இதுபோன்ற தொடர் கைது நடவடிக்கையால் மீனவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதிச் சீட்டை பெற்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், `இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்துள்ளனர்’ எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. … Read more

“இது பீஸ்ட் மோட்” – 12 நாட்களில் புதிய மைல்கல்லை எட்டிய அரபிக் குத்து பாடல்!

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘அரபிக் குத்து’ பாடல் கடந்த 14-ஆம் தேதி வெளியாகி இருந்தது.   View this post on Instagram A post shared by Sun Pictures (@sunpictures) பாடல் வெளியாகி 12 நாட்கள் கடந்துள்ள நிலையில் யூடியூப் தளத்தில் சுமார் … Read more

களைக்கட்ட தயாராகும் ஈஷா மஹாசிவராத்திரி!| Dinamalar

இசை கலைஞர்களின் விவரங்கள் இதோ உலகளவில் புகழ்பெற்ற ஈஷா மஹாசிவராத்திரி விழா இந்தாண்டும் பல்வேறு மாநில கலைஞர்களுடன் களைக்கட்ட தயாராகிவிட்டது. பல பிரபல தமிழ் படங்களில் சிறந்த பாடல்களை பாடிய பின்னணி பாடகர் திரு. ஷான் ரோல்டன் இந்தாண்டு ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் பாட உள்ளார். திரை பாடல்கள் மட்டுமின்றி கர்நாடக இசை சங்கீதத்திலும் அவர் கரைக்கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு தன் கம்பீர குரலால் சிவனை போற்றி பாடல்கள் பாடி மக்களை கவர்ந்த தெலுங்கு பாடகி … Read more