கார் மீது ஏறிய ரஷிய ராணுவ டாங்கி- வலைதளத்தில் பரவிய புகைப்படத்தால் பரபரப்பு

கிவ்: உக்ரைன் நாடு மீது ரஷிய ராணுவம் மும்முனை தாக்குதலை நடத்தி வருகிறது. உக்ரைன் அதிபர் மாளிகையை கைப்பற்ற தலைநகர் கிவ் நோக்கி ராணுவத்தின் டாங்கிகள் நகர்ந்து வருகிறது. அவை விளை நிலங்கள் வழியாக செல்வதால் பயிர்கள் அனைத்தும் நாசமாகி விட்டதாக உக்ரைன் மக்கள் தெரிவித்தனர். இதற்கிடையே ரஷிய போர் விமானங்கள் வீசிய ராக்கெட் குண்டுகளால் பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி விட்டது. இதற்கிடையே உக்ரைனின் ஒபலோனின் நகர் பகுதிக்குள் நுழைந்த ராணுவ டாங்கிகள் அங்கிருந்த சாலைகள் … Read more

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தலுக்காக சென்னையில் காலை 7 மணி முதல் வாக்கு பதிவு

சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்க தேர்தலுக்கான வாக்கு பதிவு சென்னையில் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் இயக்குனர் பாக்யராஜ் தலைமையிலான அணியும், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தலைமையிலான அணியும் போட்டியிடுகிறது. சங்கத் தேர்தலில் 1,883 பேர் வாக்களிக்க தகுதியுடைய நிலையில் அஞ்சல் மூலம் 106 பேர் வாக்களித்துள்ளனர்.

உக்ரைனில் இருந்து மாணவர்கள் உட்பட 240 பேருடன் 3-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது

டெல்லி: உக்ரைனில் இருந்து மாணவர்கள் உட்பட 240 பேருடன் 3-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. ஏற்கனவே 2 சிறப்பு விமானங்கள் மூலம் 469 பேர் அழைத்து வரப்பட்டனர். தற்போது உக்ரைனில் இருந்து மாணவர்கள் உட்பட 240 பேருடன் 3-வது சிறப்பு விமானம் டெல்லி வந்தடைந்துள்ளது.

குமரி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடக்கம்

குமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை, தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் மிகவும் பிரசத்தி பெற்றது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் கேரளாவிலிருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வது … Read more

உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல்: அயோத்தி உட்பட 61 தொகுதிகளில் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு

403 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலின் ஐந்தாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த ஐந்தாவது கட்ட தேர்தலில் மொத்தம் 61 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அயோத்தி உள்ளிட்ட இடங்களில் தேர்தல் நடைபெறுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு. வரும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கடைசி இரண்டு கட்டங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் … Read more

ரஜினி வெளியிட்ட தோனி நடிப்பில் உருவான 'அதர்வா – தி ஆரிஜின்' கிராஃபிக் நாவல்

இதுவரை கண்டிராத அவதாரத்தில் முன்னாள் இந்திய  கிரிக்கெட் வீரர் & கேப்டன் எம்.எஸ். தோனி நடிப்பில் அதர்வா – தி ஆரிஜின், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய யுக கிராஃபிக் நாவலின் முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெருமையுடன் வெளியிட்டார். புராஜெக்ட் ஹெட் எம்.வி.எம் வேல்மோகன் தலைமையில் ரமேஷ் தமிழ்மணி எழுதி, வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் திரு அசோக் மேனர் தயாரித்த புராணக் கதையின் முதல் பிரதியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டார்.  அதர்வா, தி … Read more

உக்ரைனில் இருந்து வந்துள்ள கர்நாடகாவினர்| Dinamalar

பெங்களூரு : ”உக்ரைனில் இருந்து வந்துள்ள கர்நாடகாவினரை அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க கர்நாடக அரசே ஏற்பாடு செய்யும். அனைவரும் பாதுகாப்பாக அழைத்து வரப்படுவர்,” என முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்றுவதற்காக, அந்நாட்டுக்குள் சென்று ரஷ்ய வீரர்கள் போர் தொடுத்து வருகின்றனர். இதனால் அங்கு சிக்கியுள்ள கர்நாடகாவினரை மீட்க, மாநில அரசு மத்திய வெளியுறவு துறை அமைச்சகத்துடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.எம்.பி.பி.எஸ்., படிக்க சென்ற மாணவர்கள், தங்களை காப்பாற்றி கொள்ள … Read more

சித்தி, சந்திரமுகி, உடன் பிறப்பே – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்.,27) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்… சன் டிவிகாலை 09:30 – அந்நியன்மதியம் 03:00 – வேங்கைமாலை 06:30 – சந்திரமுகிஇரவு … Read more

ஏவுகணை தாக்குதலில் தப்பிய ஆசிரியை | Dinamalar

கீவ்,-உக்ரைன் நாட்டில் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ஆசிரியையின் படம், ‘போர் முகம்’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனில் ஏவுகணை மற்றும் குண்டுமழை பொழிந்து வருகிறது. ராணுவ தளங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் கட்டடங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இந்நிலையில், கார்கிவ் நகரின் சுகுவேவ் என்ற இடத்தில் வசிக்கும் ஆசிரியை ஒலேனா குரிலே, 52, என்பவர் வீட்டின் … Read more

உக்ரைன் மக்களுக்காக திறந்திருக்கும் அண்டை நாட்டு எல்லைகள்… சண்டையிட தயாராகும் ஆண்கள்

உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல நகரங்களில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைனியர்கள், பாதுகாப்பிற்காக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். உ18 முதல் 60 வயதுடைய ஆண்கள் நாட்டைவிட்டு வெளியேற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தடை விதித்துள்ளதால், பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். இதுவரை கிட்டத்தட்ட 120,000 பேர் உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளதாக ஐநா அகதிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மக்கள் எவ்வித அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இன்றி வரலாம் … Read more