உக்ரைனில் போர் தீவிரம்: நாட்டின் எல்லையை விட்டு குடும்பம் குடும்பமாக வெளியேறும் மக்கள் <!– உக்ரைனில் போர் தீவிரம்: நாட்டின் எல்லையை விட்டு குடும்பம்… –>
உக்ரைனில் போர் தீவிரம் அடைந்துள்ளதால் உயிரைக் காக்க கையில் கிடைத்த உடைமைகளுடன் நாட்டின் எல்லையை விட்டு குடும்பம் குடும்பமாக மக்கள் வெளியேறி வருகின்றனர். பலர் வீடுநிலம் போன்ற சொத்துகளையும் கைவிட்டு சென்றனர். போலந்து, ஸ்லோவேக்கியா ஆகிய அண்டை நாடுகளில் அகதிகள் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.அங்கு பல்லாயிரக்கணக்கில் உக்ரைன் மக்கள் குழந்தைகளுடன் தஞ்சம் புகுந்துள்ளனர். உக்ரைனில் குண்டு வெடிப்பில் காயம் அடைந்த பலரும் ஆம்புலன்சுகள் மூலமாக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுவதால் எல்லைகளில் ஆம்புலன்சுகளின் சத்தங்களும் அதிகளவில் கேட்கின்றன. Source link