உ.பி., யில் சட்டசபைத் தேர்தல் 5ம் கட்ட ஓட்டுப்பதிவு துவங்கியது| Dinamalar

லக்னோ: உ.பி., சட்டசபைக்கான ஐந்தாம் கட்ட ஓட்டுப்பதிவு 61 தொகுதிகளில் இன்று (பிப்.,27) காலை 7 மணிக்கு துவங்கியது.. 692 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 403 தொகுதிகளை கொண்ட உ.பி., யில் சட்டசபை ஆட்சி காலம் 2022ம் ஆண்டு மே மாதம் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அங்கு 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்து வருகிறது. அதன்படி, ஏற்கனவே பிப்ரவரி 10, … Read more

தனுஷ் பட டிரைலரை சிம்பு வெளியிடுகிறாரா?

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடித்துள்ள படம் மாறன். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகயிருப்பதாக தெரிவித்துள்ள படக்குழு, டிரைலரை யார் வெளியிடுகிறார்கள் என்பதை கெஸ் பண்ணுங்கள் என்று ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இந்த நிலையில் மாறன் பட டிரைலரை பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சிம்பு, அந்த நிகழ்ச்சியின்போதே வெளியிடப் போவதாக இன்னொரு செய்தியும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. இப்படம் டிஸ்னி பிளஸ் … Read more

உக்ரைன் போரை மாதிரியாக வைத்து தைவான், இந்தியாவை சீனா தாக்க திட்டம்?| Dinamalar

பெய்ஜிங்: ரஷ்ய-உக்ரைன் போரை முன்மாதிரியாக வைத்து தைவான், இந்தியாவைத் தாக்க சீனா திட்டமிடுவதாக கருத்து முன்வைக்கப்படுகிறது. சீனா தொடர்ந்து பல ஆண்டு காலமாக தனது அண்டை நாடான தைவானை தன்வசம் ஆக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. சிறிய தீவு நாடான தைவானில் ஜனநாயக முறையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் பிரதமர் சாய் இங் வென் பல ஆண்டுகாலமாக தைவானை சுற்றி அச்சுறுத்தல் ஈடுபடும் சீன கடற்படை மற்றும் விமானப் படைக்கு தங்கள் படை மூலம் பதிலடி … Read more

நம்புங்க… இங்கே மேயர் பதவிக்கு போட்டியே இல்லை: முத்து நகரில் முரட்டு பக்தர் குடும்ப கொடி!

த. வளவன் தமிழகத்தின் அனைத்து  மாநகராட்சிகளிலும் மேயர் பதவிக்கு மல்லுக்கட்டு நடக்கிறது. நெல்லை போல சில மாநகராட்சிகளில் கூவத்தூர் பாணியில் அடைகாக்கும் பணியும் தொடர்கிறது.  ஆனால் முத்து நகர் என்று அழைக்கப்படும் தூத்துக்குடியில் மட்டும்  எந்த அரவமும் இல்லை. மேயர் பதவிக்கு வெற்றிக்  கோட்டை தொட்ட திமுக  கவுன்சிலர்கலில் ஒருவரைத் தவிர யாருமே மேயர் கனவிலும்  இல்லை. அந்த பதவிக்கு எந்த போட்டியும் இல்லாமலேயே  ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரது தந்தையின் திமுக விசுவாசத்திற்கு கிடைத்த பரிசாகவும் இதைக் … Read more

சென்னையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்.. தமிழக முதல்வர் தொடக்கம்.!

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தேனாம்பேட்டையில் முதலமைச்சர் இன்று காலை தொடங்கி வைத்துள்ளார். இளம்பிள்ளை வாதம் என்னும் போலியோ நோயை ஒழிக்க இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக போலியோ நோய் இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சொட்டுமருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா முழுமைக்கும் … Read more

“உங்க மனைவிக்காக என் வாய்ப்பை மறுப்பதா?" – செந்தில் பாலாஜி முன்பு கொந்தளித்த மகளிரணி நிர்வாகி

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும் வெற்றியைப் பெற்றது. முக்கியமாக, கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளை திமுக முழுவதுமாக கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், ஒருங்கிணைந்த கோவை திமுக செயற்குழுக் கூட்டம் ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கோவை மாநகராட்சி மேயர் கனவுடன் தீவிரமாகப் பணியாற்றிவந்தவர் மாநில மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார். வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பே தேர்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்தார். ஆனால், … Read more

மார்ச் 1 – மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவன் கோயில்களில் இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள்: இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாடு

சிவராத்திரியன்று சிவன் கோயில்களில் இரவு முழுவதும் கலைநிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்து சமயஅறநிலையத் துறை நேற்று வெளிட்ட செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி திருவிழா, மார்ச் 1-ம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.1-ம் தேதி மாலை முதல் 2-ம் தேதிவரை சிவபெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் … Read more

ஹிஜாப் வழக்கின் நீதிபதியை விமர்சித்த நடிகருக்கு ஜாமீன்

கர்நாடக கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதற்கு கன்னட நடிகர் சேத்தன் குமார் அஹிம்சா எதிர்ப்பு தெரிவித்தார். கர்நாடக அரசையும், வழக்கை விசாரிக்கும் கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித்தையும் விமர்சித்தார். இதனால் பெங்களூரு சேஷாத்ரிபுரம் போலீஸார் தாமாக முன்வந்து சேத்தன் மீது வழக்குப் பதிவு செய்து 23-ம் தேதி கைது செய்து பெங்களூரு சிறையில் அடைத்தனர். இதையடுத்து சேத்தன் தரப்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு பெங்களூரு மாநகர … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை புறக்கணித்தது இந்தியா – உக்ரைனில் 3-வது நாளாக ரஷ்யா குண்டுமழை: ரஷ்ய ராணுவ தாக்குதலில் 198 பேர் உயிரிழப்பு – 35 குழந்தைகள் உட்பட 1,115 பேர் படுகாயம்

உக்ரைன் போர் நேற்று 3-வது நாளாக நீடித்தது. அந்த நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து வரும் ரஷ்யா, பெரும் பகுதிகளை கைப்பற்றியிருக்கிறது. தலைநகர் கீவில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 198 பேர் உயிரிழந்துள்ளனர். 35 குழந்தைகள் உட்பட 1,115 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் பங்கேற்காமல் இந் தியா புறக்கணித்தது. கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் 800 ராணுவ … Read more