பிப்-27: பெட்ரோல் விலை ரூ.101.40, டீசல் விலை ரூ.91.43-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

நடிகர் புனித் ராஜ்குமார் சமாதியில் விஜய் அஞ்சலி

பெங்களூரு: மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சமாதியில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார். கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு அக்டோபர் 29ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு தென்னிந்திய நடிகர்கள் பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், தமிழ்நாட்டில் இருந்து பெங்களூரு செல்லும் தமிழ் நடிகர்கள் சிலர், கண்டீரவா ஸ்டுடியோவில் அமைந்துள்ள புனித் ராஜ்குமார் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று பெங்களூரு சென்ற … Read more

செய்திகள் சில வரிகளில்| Dinamalar

எடியூரப்பாவுக்கு வயது 79 பெங்களூரு: பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு இன்று பிறந்த தினம். 79 வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதை ஒட்டி, பெங்களூரு குமாரகிருபா சாலையில் காவிரி இல்லத்தில் ஏழை விவசாயிகளுக்கு இலவச டிராக்டர்கள் வழங்குகிறார். கொரோனாவால் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுுவதில்லை என்றும், யாரும் பூங்கொத்து, சால்வை, மாலை கொண்டு வர வேண்டாம் என்றும் கேட்டுகொண்டுள்ளார். 115 பேருக்கு வேலை பெங்களூரு: கர்நாடக திறமை அபிவிருத்தி வாரியம் சார்பில், மல்லேஸ்வரத்தில் நேற்று … Read more

உண்மையாவே குடிச்சீங்களா ஜீவா?

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் வெங்கட் நடித்து வருகிறார். இந்த தொடரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தார் திறக்கவிருந்த புதிய மளிகை கடையை திறக்கவிடாமல் சிலர் சதி செய்கின்றனர். பல போராட்டங்களுக்கு மத்தியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரதர்ஸ் கடையை மீட்டு திறக்கின்றனர். இந்த சந்தோஷமான நிகழ்வை கொண்டாடும் விதத்தில் ஜீவா என்ற கதாபாத்திரம் மது அருந்துவதோடு, வீட்டில் சென்று ரகளை செய்கிறது. இந்த எபிசோடு செம காமெடியாக சென்றதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல … Read more

சரணடைய மாட்டோம்; உக்ரைன் அதிபர் ஆவேசம்| Dinamalar

கீவ்; -ரஷ்யப் படைகளிடம் சரணடையும்படி தன் ராணுவத்துக்கு உக்ரைன் அதிபர் வோலேடிமிர் ஜெலன்ஸ்கி உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியான நிலையில், ”நாங்கள் யாருக்கும் அடிபணிய மாட்டோம்; சரணடைய மாட்டோம்,” என அவர், ‘வீடியோ’ வில் செய்தி வெளியிட்டுள்ளார். உக்ரைனுக்குள் நுழைந்துள்ள ரஷ்யப் படைகள், தலைநகர் கீவ் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கீவ் நகரை ரஷ்யப் படைகள் நெருங்கியுள்ளதால், தன் படைகளை சரணடையும்படி, உக்ரைன் அதிபர் வோலேடிமிர் ஜெலன்ஸ்கி கூறியதாக தகவல் வெளியானது. மேலும் அவர் நாட்டை … Read more

மறுபடியும் ஒண்ணு கூடிட்டாங்கய்யா… ஜாலி டூர் கிளம்பிய பிரியங்கா கேங்!

Biggboss Priyanka Viral Video Travel Vlog : சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 5-ல் பங்கேற்ற விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியான பிரியங்கா மீண்டும் தனது பிக்பாஸ் நண்பர்களுடன் ஒரு இனிய பயணத்தை தொடங்கியுள்ளார்.இது தொடர்பான வீடியோ பதிவை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன், கடந்த ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி தொடங்கி சமீபத்தில் நிறைடைந்தது. இந்நிகழ்ச்சியில் விஜய் டிவியின் தொகுப்பாளினி பிரியங்கா கடைசிவரை பிக்பாஸ் … Read more

இனி இந்த இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது-உயர்நீதிமன்றம் உத்தரவு.!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்கக்கோரி, அந்தப் பகுதியை சேர்ந்த, அருண் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த பகுதி வேளாண் நிலம் என்பதால் டாஸ்மாக் கடை திறக்கப் போவதில்லை. சட்ட விதிகளின்படி உரிய இடத்தில் அமைக்க அனுமதிக்கப்படும் என்று அரசு … Read more

வேலூர் பாலாத்துவண்ணான் கிராமத்தில் எருது விடும் விழா: 10+ பார்வையாளர்கள் காயம்

வேலூர்: வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த பாலாத்துவண்ணான் கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட பாலாத்துவண்ணான் கிராமத்தில் உள்ள ஸ்ரீ காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு காளை விடும் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. தமிழக அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும் இந்தப் போட்டியில் பங்கேற்கும். ஒவ்வொரு காளையும் கண்டிப்பாக இரண்டு சுற்றுகள் விடப்படுகின்றன. இந்தப் போட்டியை நடத்துகின்ற … Read more

கடைசி 3 கட்ட சட்டப்பேரவைத் தேர்தலில் உ.பி.யில் முக்கியத்துவம் பெறும் கூட்டணி கட்சிகள்: 57 தொகுதிகளால் பாஜக, சமாஜ்வாதிக்கு பலன்

புதுடெல்லி: உ.பி. தேர்தலில் இன்னும் 3 கட்டவாக்குப் பதிவுகள் நடைபெற உள்ளன. இவை பிப்ரவரி 27, மார்ச் 3 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெறுகின்றன. இம்மூன்றிலும் உள்ள 173-ல் 57 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. பாஜக.வில் அப்னா தளம் 17 மற்றும் நிஷாத் கட்சி16 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அகிலேஷ் சிங் யாதவின் சமாஜ்வாதியில், பிற்படுத்தப்பட்ட ஆதரவு கட்சியான சுஹல்தேவ் பாரதிய சமாஜ் (எஸ்பிஎஸ்பி), 18 தொகுதிகளில் போட்டியிடுகிறது. எஸ்பிஎஸ்பி கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்தது. … Read more