Samantha:சமந்தாவை கடுப்பேற்ற 'அந்த' நடிகையுடன் கை கோர்த்த மாஜி கணவர்?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தின் பிற மொழி ரீமேக் உரிமையை ராணாவின் அப்பாவுக்கு சொந்தமான சுரேஷ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் வாங்கியது. இந்நிலையில் மாநாடு தெலுங்கு ரீமேக்கில் சிம்பு கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும், கல்யாணி ப்ரியதர்ஷன் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டேவும் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அது குறித்து அறிந்தவர்களோ, தன் முன்னாள் மனைவியான சமந்தாவை கடுப்பேற்றத் தான் பூஜாவுடன் சேர்ந்து நடிக்கப் போகிறார் நாக சைதன்யா என்கிறார்கள். ஆனால் இயக்குநர் தேர்வு செய்த … Read more

ஐநா மனித உரிமைகள் கூட்டம் ஆரம்பமானது! – 26 இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு தடை விதிக்க திட்டம்

இலங்கை இராணுவ அதிகாரிகள் 26 பேர் மீது போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கான ஆதாரங்களை ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த 26 அதிகாரிகளுக்கு பயணத்தடை உள்ளிட்ட தடைகளை விதிக்கும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வு இன்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இலங்கை விவகாரம் இம்முறை அமர்வில் கவனம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் சமீபத்திய … Read more

ரஷ்யா மீதான தடைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடும் – பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ <!– ரஷ்யா மீதான தடைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடும் – பெலார… –>

ரஷ்யாவின் மீது மேற்கு நாடுகள் விதிக்கும் கடுமையான பொருளாதாரத் தடைகள் மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் என பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 5ஆம் நாளை எட்டியுள்ள நிலையில், ரஷ்யாவிற்கு ஆதரவாக பெலாரஸ் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இக்கட்டான தருணத்தில் ரஷ்யா மீது அத்தகைய தடைகள் விதிப்பது போரை விட மோசமானது என்றும் பெலாரஸ் அதிபர் தெரிவித்துள்ளார். மேலும், தற்போதைய சூழலில் அமெரிக்கா தான் அதிகம் பயனடைவதாக குறிப்பிட்ட … Read more

மீட்புப் பணியை ஒருங்கிணைக்கச் செல்லும் 4 மத்திய அமைச்சர்கள்..! <!– மீட்புப் பணியை ஒருங்கிணைக்கச் செல்லும் 4 மத்திய அமைச்சர்க… –>

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டுத் தாயகத்துக்கு அழைத்துவரும் பணிகளை ஒருங்கிணைக்க மத்திய அமைச்சர்கள் 4 பேர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் சிறப்புத் தூதர்களாகச் செல்ல உள்ளனர். உக்ரைனில் உள்ள இந்தியர்களை அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, சுலோவாக்கியா, போலந்து ஆகிய நாடுகளுக்கு வரவழைத்து அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வர ஏற்பாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று ஆலோசிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்களும், … Read more

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் முறைப்படி கோரிக்கை! புகைப்படம் வைரல்

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர்செலென்ஸ்கி, உக்ரைனை ஐரோப்பிய ஒன்றியத்தில் உடனடியாக இணைப்பதற்கான கோரிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ரஷ்யா தொடர்ந்து ஐந்தாவது நாளாக உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் நிலையில்,இன்று மாலை இரு நாடுகளும் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்தின. இதனிடையே, உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முறைப்படி கோரிக்கை விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளது. விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி கையெழுத்திடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வோலோடிமிர் செலென்ஸ்கி, “எங்கள் இலக்கு அனைத்து ஐரோப்பியர்களுடனும் ஒன்றாக … Read more

உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை: தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது தொடர்ந்து தீவிரமடைந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையை நோக்கி அடுத்த மூன்று நாட்களுக்குள் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 3ஆம் தேதி முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

உக்ரைன் இந்தியர்கள் வெளியேற்றத்திற்கு உதவும் அண்டை நாடுகள் – பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்

புதுடெல்லி: போர் பதற்றம் நிலவி வரும் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்கள், மீட்டு, தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது.  உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, போலந்து உள்ளிட்ட நாடுகள் இந்தியர்கள் வெளியேற்றத்திற்கு உதவி வருகின்றன. இந்நிலையில், இந்தியர்களுக்கு உதவி செய்யும் உக்ரைன் அண்டை நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பேசியதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ருமேனியா பிரதமர்  நிக்கோலே ஐயோனல் சியூகாவிடம் தொலைபேசி மூலம் … Read more

பருப்பு வகைகள் இறக்குமதி செய்யும் கால அளவு நீட்டிப்பு – விலை குறைந்துள்ளதாக மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: அத்தியாவசிய உணவு  பொருட்கள் பொதுமக்களுக்கு தடையில்லாமல் கிடைக்க, அதன் வரத்து அதிகரிப்பதையும், விலைகளை நிலைப்படுத்தவும் மத்திய அரசு பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   அத்தியாவசியப் உணவுப்  பொருட்கள் சட்டத்தின் கீழ், விலைகளைக்  கண்காணிக்கும்படியும், மில் உரிமையாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் இருப்புகளை தெரிவிப்பதை உறுதி செய்யுமாறும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு  மத்திய அரசு கடந்த மே மாதத்தில் அறிவுறுத்தி இருந்தது. துவரை, உளுந்து மற்றும் பாசி பருப்பு ஆகியவற்றை  கடந்தாண்டு மே 15ம் தேதி … Read more

ராணுவ வீரர்களை திரும்ப பெற வேண்டும் – ரஷியாவிற்கு ஐ.நா. வலியுறுத்தல்

ஜெனீவா: உக்ரைன் ரஷியா இடையேயான போர் 5-வது நாளாக தொடரும் நிலையில், ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அவசர கூட்டம் இன்று இரவு 8.30 மணியளவில் தொடங்கியது. இதில் பேசிய ஐ.நா.பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ்,  உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார். போர் நடவடிக்கையால் அப்பாவி பொதுமக்கள் பலியாவதாகவும், இதனால் ரஷிய ராணுவ வீரர்கள் திருப்பி செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பொதுமக்கள் … Read more

பல்வேறு பரிமாணங்களை கடந்து, தற்போது முதல்வராகி உள்ளார் ஸ்டாலின்; துரைமுருகன் பேச்சு

சென்னை: பல்வேறு பரிமாணங்களை கடந்து, தற்போது முதல்வராகி உள்ளார் ஸ்டாலின் என  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசியுள்ளார். கருணாநிதியின் புகழுக்கு, மேலும் புகழ் சேர்க்கிறார் ஸ்டாலின் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.