ரஷியாவிற்கு எதிராக போரிட உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவோம் – ஜெர்மனி அறிவிப்பு

வியன்னா: ரஷிய படையெடுப்பால் தவித்து வரும் உக்ரைனுக்கு,  சில ஐரோப்பிய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. போலந்து, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி வருவதாக  டெல்லியில், இந்தியாவுக்கான போலந்து தூதர் ஆடம் புராகோவ்ஸ்கி தெரிவித்தார்.  இந்நிலையில், உக்ரைன் தலைநகரை ரஷியா கைப்பற்றுவதை தடுக்கும் நடவடிக்கையாக உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் பிற பொருட்களை நேரடியாக அனுப்புவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.  இது தொடர்பாக ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரம் பீரங்கி … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 5,962,771 பேர் பலி

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.62 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,962,771 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 434,606,846 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 364,566,072 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 76,920 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உபி.யில் இன்று 5ம் கட்ட தேர்தல்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 12 மாவட்டங்களில் உள்ள 61 தொகுதிகளில் இன்று 5ம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்து விட்டது. இதனை தொடர்ந்து இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. 12 மாவட்டங்களில் உள்ள மொத்தம் 61 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சுமார் 2.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுள்ளவர்களாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த 692 வேட்பாளர்கள் … Read more

முதல் கட்டமாக 219 பேர் தாயகம் திரும்பினர்| Dinamalar

புதுடில்லி-உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ருமேனியாவில் இருந்து புறப்பட்ட முதல் ‘ஏர் இந்தியா’ விமானம், 219 பயணியருடன் நேற்று இரவு மும்பை வந்தடைந்தது. அடுத்தடுத்த விமானங்களில், மேலும் பல இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட உள்ளனர்.இந்நிலையில், உக்ரை னில் தவிக்கும் இந்தியர் களை மீட்கும் திட்டத்துக்கு, ‘ஆப்பரேஷன் கங்கா’ என பெயர் வைக்கப்பட்டு உள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்குள் நுழைந்து, ரஷ்யா போரிட்டு வருவதால், அங்கு பதற்றமான … Read more

பெப்சி தொழிலாளர்களுக்கு மார்ச் 1 முதல் ஊதிய உயர்வு

தமிழ்த் திரைப்பட சங்கங்களில் 24 திரைப்படத் தொழிலாளர்கள் சங்கங்ககளை உள்ளடக்கிய பெப்சி கூட்டமைப்பு ஒரு வலிமையான அமைப்பாக உள்ளது. அந்த கூட்டமைப்பில் உள்ள சங்கங்களின் உறுப்பினர்களை வைத்துத்தான் திரைப்படங்களைத் தயாரிக்க முடியும். ஒவ்வொரு வேலைக்கேற்ப அவர்களுக்கு தினசரி ஊதியம் நிர்ணயிக்கப்படுவது வழக்கம். குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இந்த ஊதிய உயர்வு மாற்றி அமைக்கப்படும். ஆனால், கடந்த சில வருடங்களாக தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தரப்படவில்லை. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்துடன் நடைபெற்ற பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்தது மற்றும் … Read more

தாமதமான அறிவிப்பே நாங்கள் சிக்கிக் கொள்ள காரணம்; உக்ரைன் மாணவர்கள்| Dinamalar

கீவ்: ‘தாமதமான அறிவிப்பே, நாங்கள் சிக்கிக் கொள்ள காரணமாகி விட்டது’ என, உக்ரைனில் தவிக்கும் மாணவர்கள் கூறியுள்ளனர். சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கோபால் மகன் ஸ்ரீதரன், 21. உக்ரைனில் மருத்துவம் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் இரண்டு வாரங்களுக்கு முன்தான், மாணவர்களுக்கு இந்திய துாதரகம் வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், இந்தியாவைச் சேர்ந்த மாணவர்களால், உடனடியாக வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, மருத்துவ மாணவர் ஸ்ரீதரன் அளித்த பேட்டி:பல்கலையில், … Read more

உக்ரைனில் சிக்கி தவித்த 219 இந்தியர்களுடன் புறப்பட்ட முதல் விமானம் மும்பை வந்தடைந்தது!

மும்பை, ரஷியா தாக்குதல் நடத்தி வரும் உக்ரைனில்  சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு முழு வீச்சில் பணியாற்றி வருகிறது. உக்ரைன் தனது வான் எல்லைகளை மூடியதால், அண்டை நாடுகள் வழியாக உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டு கொண்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  அந்த வகையில்,  சாலை மார்க்கமாக உக்ரைன்-ருமேனியா எல்லை வந்தடைந்த இந்தியர்கள், அதிகாரிகள் மூலம்  ருமேனியாவில் உள்ள புகாரெஸ்ட்  நகரத்திற்கு அழைத்து வரப்பட்டனர். உக்ரைனில் இருந்து வரும் இந்தியர்களை மீட்டு கொண்டு … Read more

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டி; இந்தியா வெற்றி பெற 184 ரன்கள் இலக்கு!

தரம்சாலா, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லக்னோவில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 62 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி இமாசலபிரதேச மாநிலத்தில் உள்ள மலைவாச ஸ்தலமான தரம்சாலாவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 7 மணிக்கு தொடங்கிய … Read more

இந்திய பிரதமர் மோடியுடன் உக்ரைன் அதிபர் பேச்சுவார்த்தை – ஆதரவு தர வேண்டுகோள்

கிவ், உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ் -ஐ ரஷிய படைகள் நெருங்கி வருவதால் போர் … Read more